தமிழ் மக்­க­ளினால் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் அலு­வ­லகம் விசாரணை நடத்தும் வகையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் எதி­ராக 12 நாடு­களும் வாக்­க­ளித்­துள்­ளன. இந்த வாக்­கெ­டுப்பில் 12 நாடுகள் கலந்­து­கொள்­ளாது நடு­நிலை வகித்­துள்­ளன.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் கூட்­டத்­தொடர் கடந்த 3ஆம் திகதி ஆரம்­ப­மாகி நேற்று 28ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்கா, பிரிட்டன், மெச­டோ­னியா, மொன்­டேக்­நரோ மற்றும் மொரி­சியஸ் ஆகிய 5 நாடுகள் இணைந்து  இலங்­கைக்கு   எதி­ரான பிரே­ரணை வரை­பினை ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மான அன்றே சமர்ப்­பித்­தி­ருந்­தன.

showImageInStory

இந்த பிரே­ரணை வரைபு தொடர்பில் 3 தட­வைகள் திருத்­தங்கள் செய்­யப்­பட்டு கடந்த புதன்­கி­ழமை இறுதிப் பிரே­ரணை வரைபு சமர்ப்­பிக்­கப்பட்டிருந்­தது.

நேற்­று­முன்­தினம் பிரே­ரணை வாக்­கெ­டுப்­புக்­கு­வி­டப்­பட்­ட­போது வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்ளப்­போ­வ­தில்லை என்று இந்­தியா திடீ­ரென அறிவித்­தது.
இந்­தி­யாவின் இந்த  முடி­வா­னது தமிழ் மக்கள் மத்­தியில்  பெரும்  அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் முதல் பிரே­ரணை சமர்ப்­பிக்­க­ப்பட்­டது.

இந்த பிரே­ர­ணைக்கு இந்­தியா ஆத­ரவு வழங்­குமா இல்­லையா என்ற சர்ச்சை நீடித்­தி­ருந்­தது.இந்தப் பிரே­ர­ணைக்கு இந்­தியா ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென்று தமி­ழ­கத்தில் பெரும் போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இந்­த­நி­லையில் அந்தப் பிரே­ர­ணைக்கு இந்­தியா ஆத­ரவு வழங்கியிருந்­தது.

இதேபோல் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக மற்­றொரு பிரே­ர­ணை­யினை அமெ­ரிக்கா சமர்ப்­பித்­தி­ருந்­தது.

இந்தப் பிரே­ர­ணைக்கு இந்­தியா ஆத­ரவு வழங்­குமா இல்­லையா என்ற சர்ச்சை வலு­வ­டைந்­தி­ருந்­தது. பிரே­ர­ணைக்கு இந்­தியா ஆத­ரவு வழங்க வேண்டும் என்று தமி­ழ­கத்தில் பெரும் போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

மாண­வர்கள் உட்­பட அர­சியல் கட்­சி­களின் தொண்­டர்­களும் ஆர்ப்­பாட்­டங்கள் மற்றும் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர். இத­னை­ய­டுத்து இந்­தியா 2013ஆம் ஆண்டும்  இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.

இத்­த­கை­ய­தொரு நிலையில் இம்­மு­றையும் இந்­தியா இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்கும் என்றே சகல தரப்­பி­னரும் எதிர்பார்த்­தி­ருந்­தனர்.

ஏனெனில் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் கருத்து தெரி­வித்­தி­ருந்த நிதி­ய­மைச்சர் ப. சிதம்­பரம் இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே இந்­தி­யாவின் நிலைப்­பாடு என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இதேபோல் மத்­திய அமைச்­சர்கள் பலரும் கருத்­து­களை தெரி­வித்­தி­ருந்­தனர். இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ரணை கடந்த 3ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இந்­திய மத்­திய இணை­ய­மைச்சர் நாரா­ய­ண­சாமி மற்றும் மத்­திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆகியோர் ஜெனிவா பிரே­ரணைக்கு இந்­தியா ஆத­ர­வ­ளிக்கும் என்று கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர்.

மத்­திய அமைச்­சர்­களின் இந்தக் கருத்­துக்­களும் ஜெனிவா பிரே­ர­ணைக்கு இந்­தியா நிச்­சயம் ஆத­ரவு வழங்கும் என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

Tamil-Daily-News-Paper_56993830205இலங்கை அர­சாங்கம் கூட ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்­திற்கு இந்­தியா ஆத­ரவு வழங்கும் என்றேகருதியி­ருந்­தது..

அண்­மையில் கருத்து தெரி­வித்­தி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா, டலஸ் அழகப்பெரும உட்­பட  பலரும் இந்­தியா  பிரே­ர­ணைக்கு ஆத­ரவு   வழங்கும் எண்­ணப்­பாட்­டி­லேயே  கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு இலங்கை அர­சாங்­கமே ஜெனிவா பிரே­ர­ணைக்கு இந்­தியா ஆத­ரவு வழங்கும் என்று எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் இந்­தியா தனது முடி­வினை மாற்­றிக்­கொண்­டிருக்­கின்­றது.

இந்­தி­யாவின் இந்த நிலைப்­பாடு இலங்கை அர­சாங்­கத்­துக்கு பெரும் மகிழ்ச்­சியை அளித்­தி­ருக்­கின்­றது. இதேபோல் தமிழ் தரப்­பி­ன­ருக்கு இந்­தி­யாவின் நிலைப்­பாடு பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்­தி­யாவின் நிலைப்­பாடு தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கவலை தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஜெனிவா பிரே­ரணை விட­யத்தில் இந்­தியா நடு­நி­லைமை வகித்­துள்­ள­மை­யா­னது எமக்கு ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எனினும் இந்­தி­யாவின் இந்த முடி­வுக்கு ஏதேனும் கார­ணங்கள் அமை­யப்­பெற்­றி­ருக்­கலாம். அவை தொடர்பில் எம்மால் எந்­த­வி­த­மான கருத்­துக்­க­ளையும் தெரி­விக்­க­மு­டி­யாது. இந்­தியா பிரே­ரணை தொடர்பில் இறு­தி­யான ஒரு முடி­வினை எடுக்­காது அதனை நிரா­க­ரித்­துள்­ளமை எமக்குப் பெரும் ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது என்று சம்­பந்தன் எம்.பி. தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே ஜெனிவா பிரே­ணை­யினை இந்­தியா ஆத­ரிக்கும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பினர் செயற்பட்டுவந்த­னர்.

இந்த நிலையில் இந்­தியா திடீ­ரென தனது நிலைப்­பாட்டை மாற்­றி­யுள்­ளமை தமிழ்க் கூட்­ட­மைப்­பினர் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

ஆனாலும் அதனை வெளிக்­காட்­டாத வகையில் நாக­ரி­க­மான முறையில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தனது அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.
un_vote_001
ஜெனிவா பிரே­ரணையைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தியா இத்­த­கை­ய­தொரு முடி­வினை ஏன் எடுத்­தது என்ற கேள்வி பல­மாக எழு­கின்­றது.

2012ஆம், 2013ஆம் ஆண்டு   இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணை­யினை ஆத­ரித்த இந்­தியா தற்­போது கொண்­டு­வ­ரப்­பட்ட பிரேரணை­யினை எதிர்த்து ஏன்   வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தது ஏன் என்ற கேள்­விகள் தமிழ் மக்கள் மத்­தியில் மட்டுமல்ல உல­க­ளா­விய ரீதி­யி­லேயே ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த 2 ஆண்­டு­க­ளிலும் அமெ­ரிக்­கா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ர­ணையில் உள்­ளக விசா­ரணை கோரிக்­கையே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. நல்­லி­ணக்க  ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­துடன் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சுயா­தீ­ன­மான உள்­ளக விசா­ரணை மேற்கொள்­ளப்­பட வேண்டும் என்றே இந்தப் பிரே­ரணைகள் கோரி­யி­ருந்­தன.

ஆனால் தற்­போ­தைய பிரே­ர­ணை­யா­னது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அலு­வ­லகம் விசா­ரணை நடத்த வேண்டும் என்று கோரு­கின்­றது.

இந்த விசா­ர­ணைக்கு இலங்­கை­யா­னது பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்­றது. சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஒப்­பா­ன­தா­கவே இந்த விசா­ர­ணையும் அமை­யலாம் என்ற கருத்து நில­வி­வ­ரு­கின்­றது.

இத்­த­கைய ஒரு சர்­வ­தேச விசா­ரணை இலங்­கையில் நடை­பெ­று­வதை இந்­தி­யா­வா­னது விரும்­ப­வில்லை என்­ப­த­னா­லேயே பிரே­ர­ணை­யினை இந்­தியா எதிர்த்­த­துடன் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­துள்­ளது.

5982பிரதிநிதி திலிப் சின்ஹா
ஐ.நா. மனி­த­உ­ரிமைப் பேர­வையில் இந்­தியப் பிர­தி­நிதி டுலிப் சிங்ஹா கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையில் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்­கையில் உள்­ளக பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை செய்­வதை ஊக்­கு­விப்­ப­தாக மனித உரிமைப் பேர­வையின் செயற்­பா­டுகள் அமை­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

நாடு ஒன்றின் வெளி விவ­காரம் தொடர்பில் வெளிச்­செ­யற்­பாட்டை மேற்­கொள்­வ­தா­னது அந்த நாட்டின் உள்­ளக செயற்­பா­டு­களை குழப்புவதாகவே அமையும். இலங்கை குறித்த பிரே­ரணை உள்­ளக செயற்­பா­டு­களை குழப்­பு­வ­தா­கவே அமையும் என்று தெரி­வித்­துள்ளார். இதி­லி­ருந்து இந்­தி­யாவின் நிலைப்­பாடு பர­க­சி­ய­மாக தெரி­கின்­றது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் கூட்­டத்­தொடர் முடி­வ­டைந்­ததன் பின்னர் ஜெனி­வாவில் இந்­தியப் பிர­தி­நிதி டுலிப் சிங்­ஹாவை சூழ்ந்­து­கொண்ட.செய்­தி­யா­ளர்கள் இந்­தி­யாவின் முடிவு தொடர்பில் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

சென்­னை­யி­லி­ருந்து சென்­றி­ருந்த செய்­தி­யா­ளர்கள் இவ­ரிடம் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இலங்­கையில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக இந்­தியா செயற்­பட்­டி­ருக்­கின்­றது. இது­கு­றித்து உங்­களின் கருத்து என்ன?

தமி­ழக மக்­களின் மனங்­களை புண்­ப­டுத்தும் வகையில் இந்­திய அரசின் முடிவு அமைந்­தி­ருக்­கின்றது. இது­கு­றித்து உங்கள் கருத்து என்ன என பல்­வேறு வகை­யான கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இதற்கு மழுப்­ப­லான பதில்­களை வழங்­கிய இந்­திய பிர­தி­நிதி இறு­தியில் இந்­தி­யாவின் தேசிய நலனைக் கருத்­தில்­கொண்டே இத்­த­கைய முடிவினை எடுத்­த­தாக அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் இந்­தி­யாவில் பாரா­ளு­மன்ற தேர்தல் இடம்­பெற உள்­ளது. இந்த தேர்­தலில் தமி­ழ­கத்தில் காங்­கிரஸ் படு­தோல்வி அடை­வது நிச்­சயம் என்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

தமி­ழ­கத்தில் காங்­கி­ர­சுடன் மாநி­லத்தில் ஆளும் அ.தி.மு.க.வோ அல்­லது தி.மு.க.வோ கூட்­டணி சேர­வில்லை. இதன் கார­ண­மாக காங்­கி­ர­சுக்கு ஒரு ஆசனம் கூட கிடைப்­ப­தென்­பது சந்­தே­கமே.

இந்த நிலையில் தமி­ழக மக்­களின் கருத்­துக்கள் தொடர்பில் இம்­முறை மத்­தியில் ஆளும் காங்­கிரஸ் அர­சாங்கம் கவனம் செலுத்­த­வில்லை என்றே தெரி­கின்­றது.

ஆளும் காங்­கிரஸ் அர­சாங்கம் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென்று தமி­ழ­கத்தில் உள்ள அர­சியல் கட்­சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.

ஆனாலும் தம­ழக அர­சியல் கட்­சி­களை உதா­சீனம் செய்யும் வகை­யி­லேயே மத்­திய அரசின் தீர்­மானம் அமைந்­தி­ருக்­கின்­றது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ரணை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது பாகிஸ்தான் பிர­தி­நிதி ஒழுங்குப் பிரச்­சி­னையை கிளப்­பி­யி­ருந்தார்.

பிரே­ர­ணையின் 10ஆவது பந்­தியை நீக்­க­வேண்­டு­மென்­று அவர் வாதிட்டார். பிரே­ர­ணையின் 10ஆவ­து பந்­தியில் மனித உரிமை மீறல்கள் மறறும் யுத்தக் குற்றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அலு­வ­ல­கத்­துக்கு இலங்­கை பூரண ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பந்­தி­யினை நீக்­க­வேண்­டு­மென பாகிஸ்தான் கோரி­ய­தை­ய­டுத்து இதற்­கென வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இந்த வாக்­கெ­டுப்பில் பாகிஸ்­தா­னுடன் இணைந்து இந்­தி­யாவும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதி­லி­ருந்தும் சர்வ­தேச விசா­ர­ணை­யினை இந்­தியா விரும்­ப­வில்லை என்று தெட்டத் தெளி­வா­கின்­றது.

மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணை­யினை சமர்ப்­பித்த பின்னர் அமெ­ரிக்­கா­வினால் இவ்­வி­டயம் தொடர்பில் 3தடவைகள் உப­குழுக் கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

இதில் கலந்­து­கொண்ட இந்­தியப் பிர­தி­நிதி மௌனம் காத்­தி­ருந்தார். எத்­த­கைய கருத்­துக்­க­ளையும் அவர் தெரி­வித்­தி­ருக்­க­வில்லை. இந்தநிலையில் அமெ­ரிக்­க­ பிரே­ர­ணையில் 3ஆவது திருத்தம் இந்­தி­யாவின் தலை­யீட்­டினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

அதா­வது முன்­னைய பிரே­ரணை வரைபில் விசா­ர­ணைக்­கான காலம் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்றிருந்த மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லேயே விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று கோரப்­பட்­டி­ருந்­தது.

இந்­தி­யாவின் தலை­யீட்­டை­ய­டுத்து அர­சாங்கம் நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவ­னம்­செ­லுத்­திய காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்ற திருத்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு பிரே­ரணையில் திருத்­த­ங்களையும் செய்­து­விட்டு இறு­தி­நே­ரத்தில் இந்­தியா பாகிஸ்­தா­னுடன் இணைந்து பிரே­ர­ணையின் 10ஆவ­து பந்­தியை நீக்க முயற்­சித்­த­துடன் வாக்­கெ­டுப்­பிலும் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தி­ருக்­கின்­றது.

இந்­திய தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடி­வினை எடுத்­துள்­ள­தாக இந்­தியா தனது நிலைப்­பாட்டை நியா­யப்­ப­டுத்­து­கின்­றது.

இந்­தி­யாவின் இந்த முடி­வானது அமெ­ரிக்கா­வுக்கும் எதி­ரா­ன­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. பிரேரணை சமர்ப்­பி­ப்ப­தற்கு முன்னர் தெற்­காசியவிவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் இராஜாங்கச் செய­லாளர் நிஷா தேசாய் விஷ்வால் புது­டில்­லிக்கு விஜயம் செய்து இந்­திய அதி­காரி­களுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார்.

makinthaஇதன்­போதும் இந்­தியா சாத­க­மான பதிலை வழங்­கி­ய­தா­கவே தெரி­கின்­றது. ஆனாலும் இறுதி நேரத்தில் இந்­தியா தனது நிலைப்­பாட்டை மாற்­றி­யி­ருக்­கின்­றது.

இந்­தியா அத்­த­கைய முடி­வினை எடுத்­த­மைக்கு இலங்­கையை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க விரும்­பு­வதும் ஒரு கார­ண­மாக இருக்­கலாம். இலங்­கையில் சீனாவின் ஆதிக்கம் அதி­க­ரித்து வரு­கின்­றது.

இந் நிலையில் இலங்­கையை தனது கண்­கா­ணிப்பில் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க வேண்­டு­மானால் சர்­வ­தேச விசா­ரணை விவகாரத்திலிருந்து இலங்­கையைக் காப்­பாற்­று­வ­தற்­கான சமிக்­ஞையை இந்த முடிவின் மூலம் இந்­தியா- இலங்கை அர­சுக்கு வழங்­கி­யி­ருக்­கலாம்.

ஏனெனில் இந்­தி­யாவின் இந்த முடி­வா­னது இலங்கை அர­சாங்­கத்­துக்கு பெரும் மகிழ்ச்­சியை அளித்­தி­ருக்­கின்­றது.

இந்த முடி­வை­ய­டுத்து இலங்­கையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்கள் அனை­வ­ரையும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யு­மாறு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உத்­த­ர­விட்­டி­ருக்­கின்­றார்.

இதி­லி­ருந்து இந்­தி­யா­வு­ட­னான உற­வினை பலப்­ப­டுத்த இதிலிருந்து இந்தியாவுடனான உறவினை பலப்படுத்த அவர் சமிக்ஞை காண்பித்துள்ளதாகவே தெரிகின்றது.
4760Untitled-1
எனவே எதிர்­கா­லத்தில் இந்­திய இலங் கை உறவு வலு­வ­டையும் சூழலும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்தக்  குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை வேண்­டு­மென்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் தரப்பு வலியு­றுத்­தி­வந்­த­நி­லையில் இந்த விவ­கா­ரத்தில் இந்­தியா குத்­துக்­க­ரணம் அடித்­துள்­ளமை தமிழ் தரப்­பி­ன­ரது கோரிக்­கையில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

யுத்­தத்­தின்­போது பெரும் உத­வி­களை வழங்கி யுத்த வெற்­றிக்கு வழி­வ­குத்த இந்­தியா எதிர்­கா­லத்தில் இலங்கை தமிழ் மக்­களின் நலன்­களில் அக்­கறை காட்டி அவர்­களின் எதிர்­கா­லத்­துக்கும் சுபீட்­ச­மான வாழ்­வுக்கும் அத்­தி­வா­ர­மிட வேண்டும்.

இத­னை­வி­டுத்து எல்லாம் தேசிய நலன் என்று கருதி இந்­தியா செயற்­ப­டு­மானால் இலங்கை வாழ் தமிழ் மக்­களின் வெறுப்­புக்கு உள்­ளா­க­வேணடிய நிலை இந்­தி­யா­வுக்கு ஏற்­ப­டலாம்.

எனவே கிடைத்­துள்ள இந்த சந்­தர்ப்­பத்தை இந்­தியா பயன்­ப­டுத்த வேண்டும். இதன் மூலம் இலங்­கைவாழ் தமிழ் மக்­க­ளுக்கு ஏதா­வது உருப்­ப­டி­யான காரி­மொன்­றினை செய்­வ­தற்கு இனி­யா­வது இந்­திய மத்­திய அரசு முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-அன்பரசன்-

Share.
Leave A Reply