ilakkiyainfo

விஷால்-லட்சுமி மேனன் உதட்டு முத்ததால் ரூ.7 கோடி நஷ்டம்?

 

விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு படம் போட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் விஷால் – லட்சுமி மேனனின் முத்தக்காட்சியை நீக்கவேண்டும் என்றும், இல்லையெனில் படத்திற்கு யூ சான்றிதழ் கொடுக்க முடியாது என்றும் கூறினர்.

விஷால்-லட்சுமி மேனனின் முத்தக்காட்சி படத்தின் ஹைலைட்டாக விளம்பரப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் அந்த காட்சியை நீக்கினால் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு ஆளாக வேண்டும் என்றும் இயக்குனர் திரு மற்றும் விஷால் எண்ணுகின்றனர்.

அதே நேரத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் ரூ.22 கோடி செலவில் தயாராகியுள்ளது. யூ சான்றிதழ் கிடைக்காவிட்டால் அரசிடம் இருந்து கிடைக்கும் 30% வரிச்சலுகை கிடைக்காமல் போய்விடும்.

இதனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.7 கோடி வரை நஷ்டம் உண்டாகும். இதனால் முத்தக்காட்சியை நீக்கிவிடலாமா?  என்பது குறித்து இயக்குனர் திருவுடன் தயாரிப்பாளர்கள் விஷால் மற்றும் லிங்குசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதாக கோலிவுட் செய்திகள் கூறுகின்றன.

இன்டர்நெட்டில் தீயா பரவும் லக்ஷ்மி மேனன், விஷால் முத்த போட்டோ
01-04-2014

31-vishal-lakshmi-menon-600-jpg
சென்னை: குடும்ப பாங்கான பெண்ணான லக்ஷ்மி மேனனா இப்படி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கவர்ச்சி காட்டாமல் நடிப்பவர் லக்ஷ்மி மேனன்.

இந்நிலையில் அவர் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் ஒரு காட்சியில் துணிந்து நடித்துள்ளார்.

அதாவது விஷாலுக்கு லிப் டூ லிப் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை யாரோ இணையதளத்தில் கசியவிட அது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் லக்ஷ்மி மேனனா இப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த வீட்டு பெண் போன்று இமேஜ் வைத்துள்ள அவர் என்ன கூடுதல் சம்பளத்திற்காக இப்படி விஷாலுக்கு முத்தம் கொடுத்துள்ளாரா, இல்லை பரபரப்பை கூட்டவா என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த முத்தக் காட்சியால் படத்திற்கு யு சான்றிதழ் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version