கேரளாவில் அசின் பண்ணை வீடு வாங்கி இருக்கிறார். அதில் தங்கி பொழுதை கழிக்க பாலிவுட் ஹீரோக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். சிவகாசி, காவலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் அசின் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
மும்பைக்கு குடியேறினாலும் அவர் சொந்த ஊரான கேரளாவுக்கு அடிக்கடி வர தவறுவதில்லை. கோட்டயம்-இடுக்கி எல்லை மலை சார்ந்த பகுதியில் இயற்கை சூழலுடன் கூடிய பண்ணை வீடு வாங்கி இருக்கிறார்.
பண்ணையையொட்டி சலசலவென நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது. சுற்றுப்புற சுவர்களில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தி இருக்கிறார்.
தனது தோழிகள் மற்றும் குடும்ப நண்பர்கள் தவிர பாலிவுட் ஸ்டார்களையும் பண்ணை வீட்டுக்கு வந்து தங்கி செல்ல கேட்பதுடன் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறாராம். சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி அசினின் பண்ணை வீட்டுக்கு வந்து தங்கிவிட்டு சென்றாராம்.
இவர் அசின், அஜய் தேவ்கன் நடித்த போல்பச்சன் என்ற படத்தை இயக்கியவர். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தையும் இவர்தான் இயக்கி இருந்தார்.