ஆபாச இணையதளம் ஒன்று வித்தியாசமாக படமெடுக்க வேண்டும் என்பதற்காக ஓடும் ரயிலில் ஒரு தம்பதியினரை செக்ஸ் புரிய வைத்து அதை வீடியோ எடுத்து தங்கள் இணையதளத்தில் பதிவு செய்த குற்றத்திற்காக அந்த இணையதளத்திற்கும், அதில் நடித்த நடிகர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற ஆபாச இணையதளம் ஒன்று, வித்தியாசமாக ஆபாசக் காட்சிகளை படமாக்க வேண்டும் என முடிவு செய்து, மெல்போர்ன் நகரில் மிகவும் பரபரப்பாக இயங்கும் மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடியை உடலுறவு கொள்ள வைத்து அதை படம் எடுத்துள்ளது.
இந்த வீடியோவை அந்த இணையதளத்திற்கு சென்று சுமார் 200,000 பேர் வரை பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த அரசு அதிகாரி ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த மெல்போர்ன் போலீஸார், பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் ஆபாச படம் எடுத்த இணையதளத்திற்கும், அதில் நடித்த தம்பதிக்கும் $563 அபராதம் விதித்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா காவல்துறை செய்தி அதிகாரி மெலிசா சீச் அவர்கள் கூறும்போது, ஆபாச படத்தில் நடித்த இருவரும் மற்றவர்கள் மனம் புண்படும் மற்றும் குற்றம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை பொதுமக்களே தட்டிக்கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.