ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உலகம்»இரு ரஷ்ய ராஜதந்திரிகள் (தமாஷாக) பேசிக்கொண்ட உரையாடல் ரிக்கார்ட் ஆகி லீக் ஆன கதை! (வீடியோ)
    உலகம்

    இரு ரஷ்ய ராஜதந்திரிகள் (தமாஷாக) பேசிக்கொண்ட உரையாடல் ரிக்கார்ட் ஆகி லீக் ஆன கதை! (வீடியோ)

    AdminBy AdminApril 4, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இரு ரஷ்ய ராஜதந்திரிகள் தமக்கிடையே டெலிபோனில் தமாஷாக பேசிக்கொண்ட (சில உண்மைகளும் உள்ளன) உரையாடல் ஒன்று ரிக்கார்ட் செய்யப்பட்டு (யாருடைய வேலை? சி.ஐ.ஏ.?), லீக் செய்யப்பட்டு, தற்போது பரபரப்பை கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

    சுமார் 5 நிமிடங்கள் இவர்கள் இருவரும் தமக்கிடையே பேசிக்கொண்டனர்.

    உக்ரேனில் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்தபின் அடுத்து ரஷ்யா எந்த இடத்தை கைப்பற்றும் என இவர்கள் தமாஷாக பேசிக்கொண்ட ஒலிப்பதிவு இது (ரஷ்ய ராஜதந்திரிகள் தமக்கிடையே பேசிக்கொண்டபோது சரளமாக கெட்டவார்த்தைகளை உபயோகித்துள்ளனர். அதை தவிர்த்து விடலாம்).

    இந்த உரையாடல் லீக் செய்யப்பட்டது குறித்து ரஷ்யா கனத்த மௌனம் சாதிக்கிறது. இந்த டெலிபோன் உரையாடலை ரிக்கார்ட் செய்தது யார்? எப்படி ரிக்கார்ட் செய்தார்கள் என்பது பற்றி, ரஷ்ய உளவுத்துறைகள் மிக தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

    காரணம், இரு ராஜதந்திரிகளும் ரஷ்ய தூதரகங்களில் உள்ள தமது அலுவலகங்களில் இருந்து பேசியிருந்தால், தூதரக போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என அர்த்தமாகிறது!

    போனில் உரையாடிய இருவரும், இகோர் சுபாரோவ் (எரித்தியா நாட்டுக்கான ரஷ்ய தூதர்), செர்கேய் பக்காரெவ் (ஸிம்பாப்வே நாட்டுக்கான ரஷ்ய தூதர்).

    இந்த ராஜதந்திரிகள் அப்படி என்னதான் தமாஷாக பேசிக்கொண்டார்கள்?

    “எங்களுக்கு (ரஷ்யாவுக்கு) கிரிமியா (உக்ரேன்) கிடைத்துவிட்டது. அத்துடன் முடியாது இது. இனிவரும் காலத்தில் காட்டலேனியாவையும் (ஸ்பெயின்), வெனீஸையும் (இத்தாலி) நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்புறம் ஸ்காட்லாந்தையும், அலாஸ்காவையும் (அமெரிக்கா) பிடுங்கிக் கொள்ளலாம்” என்று பலத்த சிரிப்புடன் கூறுகிறார், இகோர் சுபாரோவ்.

    இந்த உரையாடல் பகுதியில் மற்றொரு (தமாஷான அல்லது, சிலருக்கு கோபம் வரக்கூடிய) விவகாரத்தை கிளப்புகிறார்கள் சிலர்.

    அது என்னவென்றால், ரஷ்ய ராஜதந்திரி சுபாரோவ், ஸ்காட்லாந்து என்பதை, ரஷ்ய மொழியில் உச்சரிக்கும்போது Scotland என்பது, Cattleland (கால்நடைகளின் பூமி) என்பதுபோல ஒலிக்கிறது.

    ஸ்காட்லாந்தில் கால்நடைகள் உள்ள பண்ணைகள் அதிகம். தவிர ஸ்காட்லாந்து நங்கைகளை, (நாகரீக) பிரிட்டிஷ் நங்கைகள், ‘கால்நடை பூமி பெண்கள்’ (cattleland chicks) என கேலியாக அழைப்பது பிரிட்டிஷ் அலுவலகங்களில் வழக்கம்.

    சரி, அதை விடுங்கள். வேறு என்ன பேசிக்கொண்டார்கள் இவர்கள்?

    “எமது எல்லையோர நாடுகள், எஸ்டோனியா, பல்கேரியா, ரொமானியா ஆகியவற்றையும் கைப்பற்ற வேண்டும்” என்று கூறிய ரஷ்ய ராஜதந்திரி சுபாரோவ், “ஐரோப்பிய ஒன்றியத்தின் எரித்ரியா குழுவின் தலைவருடன் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் ஜோக்காக, “பல்கேரியா, ரொமானியா ஆகிய இரு நாடுகளையும் நீங்கள் திரும்ப எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்” என்கிறார்.

    இதையடுத்து இந்த இரு ராஜதந்திரிகளும் தமது தமாஷ் பேச்சில் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

    “நாம் பேசாமல் பல்கேரியா, ரொமானியா, மற்றும் பால்டிக் கச்சடா நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்திடமே விட்டுவிட்டு, கலிபோர்னியாவையும், மயாமியையும் (இரண்டுமே அமெரிக்க மாநிலங்கள்) கைப்பற்றிக் கொள்ளலாம்.” என்கிறார், செர்கேய் பக்காரெவ்.

    இதற்கு இகோர் சுபாரோவ், “ஆமா.. நிஜம்தான். மயாமியில் 95% ரஷ்யர்கள்தான் உள்ளார்கள் (இந்த சதவீதக் கணக்கு நிஜமல்ல. ஆனால், மயாமியின் கணிசமான அளவில் ரஷ்யர்கள் – கியூபா நாட்டவர்களுக்கு அடுத்தபடியாக – உள்ளார்கள் என்பது நிஜம்). அங்கு நாம் ஒரு தேர்தல் வைக்கலாம், நீங்கள் அமெரிக்காவுடன் இருக்க போகிறீர்களா? அல்லது ரஷ்யாவுடன் இணைய போகிறீர்களா என்று” என்கிறார்.

    அதற்கு செர்கேய் பக்காரெவ் பலத்த சிரிப்புடன், “ஆமா.. நாம் லண்டனிலும் அப்படி ஒரு தேர்தல் வைக்கலாம்” என்கிறார்.

    இந்த ஒலிப்பதிவு, சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்த போகிறது. அது மட்டுமல்ல, பல ராஜதந்திரிகளை திகிலடைய வைக்கவும் போகிறது! (ஆமா.. நாம பேசறதையும் ரிக்கார்ட் பண்ணுவாய்ங்களா?)

    Post Views: 56

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023

    ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதல்

    September 23, 2023

    ஈரானில் ஆடை சரியாக அணியவில்லையெனில் 10 ஆண்டுகள் சிறை

    September 23, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2014
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version