ilakkiyainfo

தனது உயிரை தியாகம் செய்து அம்மாவின் உயிரை காப்பாற்றிய 7 வயது சீன சிறுவன். நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்.

சீனாவில் 7 வயது சிறுவன் ஒருவன் தனது உயிரை தியாகம் செய்து தனது அம்மாவையும், வேறு இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ள நெஞ்சை நெகிழ செய்யும் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த செய்தி வருமாறு:

13967466551fசீனாவில் உள்ள 7 வயது சிறுவன் Chen Xiaotian என்பவனுக்கு மூளைப்புற்று நோய் காரமாக இரண்டு வருடங்களாக உயிருக்கு போராடி வருகிறான்.

அவனுடைய அம்மா 34 வயது  Zhou Lu, என்பவர் தனது உயிரை காப்பாற்ற இன்ரடு வருடமாக பெரும் முயற்சி செய்து வந்தார். இந்நிலையில்  Zhou Lu,க்கு திடீரென சிறுநீரக நோய் வந்தது.

மருத்துவரிடம் சென்று சோதனையிட்டபோது, உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும், இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.

தனது நோய்க்காக வருத்தப்படுவதா அல்லது தனது மகனின் மூளை புற்றுநோய்க்காக வருத்தப்படுவதா? என்று  Zhou Lu, மனதுக்குள் துடிதுடித்து கொண்டபோது, சிறுவனின் மூளைப்புற்று நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும், கூடியவிரைவில் அவன் இறந்துவிட வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

இந்நிலையில் சிறுவன் Chen Xiaotian மருத்துவர்களையும், தனது பாட்டி Lu Yuanxiu என்பவரையும் வரவழைத்தும் வரவழைத்து “தான் உயிரிழந்த பிறகு தன்னுடைய சிறுநீரகத்தை எடுத்து தனது அம்மாவுக்கு பொருத்தி, அவருடைய உயிரை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டான்.

அதுமட்டுமின்றி மேலும் தன்னுடைய உடலில் உள்ள மற்ற பாகங்களையும் எடுத்துக்கொள்ளுமாறும் உடல் தானத்திற்கு தான் சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

இதைக் கேட்டு பாட்டி Lu Yuanxiu நெகிழ்ச்சி அடைந்தார். அந்த சிறுவன் சென்ற வாரம் அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி மரணமடைந்துவிட்டான். மருத்துவர்கள் உடனடியாக அவனுடைய சிறுநீரகங்கள், கல்லீரல் முதலியவற்றை எடுத்தனர்.

ஒரு சிறுநீரகத்தை சிறுவனின் தாயாருக்கும், மற்றொரு சிறுநீரகத்தை 29 வயது பெண் ஒருவருக்கும், கல்லீரலை 27 வயது நபர் ஒருவருக்கும் பொருத்தினர். தற்போது சிறுவனின் தாயார் உள்பட மூவரும் நலமாக இருக்கின்றனர்.

தனது உயிரை கொடுத்து தனது தாயாரின் உயிரை காப்பாற்றிய சிறுவனின் தியாகம் குறித்து சீன ஊடகங்கள் பெரும் பரபரப்போடு செய்திய்கள் வெளியிட்டு வருகின்றன.

Exit mobile version