ilakkiyainfo

தமது பிள்ளைகளை காப்பாற்றச் சென்று உயிரிழந்த பிரித்தானிய பெண் மருத்துவர்கள்

விடு­மு­றையைக் கழிக்க சென்ற வேளை கட­ல­லையால் அடித்துச் செல்­லப்­பட்ட தமது பிள்­ளை­களை காப்­பாற்ற மேற்­கொண்ட முயற்­சியில் பிரித்­தா­னிய பெண் மருத்­து­வர்கள் இருவர் பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தைத் தழு­விய சம்­பவம் ஸ்பெயினில் இடம்­பெற்­றுள்­ளது.

article-2599926-1CF05E8600000578-978_634x421பாரதி ரவிக்­குமார் (39 வயது) மற்றும் உமா ராம­லிங்கம் (42 வயது) ஆகிய பெண் மருத்­து­வர்­களே ஸ்பெயினின் தெனெரிப் கடற்­க­ரைக்கு தமது குடும்­பத்­தி­ன­ருடன் விடு­மு­றையைக் கழிக்கச் சென்ற வேளை இவ்­வாறு பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தை தழு­வி­யுள்­ளனர்.

 

மேற்­படி பெண் மருத்­து­வர்­களில் உமா ராம­லிங்கம் இந்­திய சென்னை நகரை பிறப்­பி­ட­மாக கொண்­ட­வ­ராவார். பாரதி ரவிக்­குமார் எந்த நாட்டைச் சேர்ந்­தவர் என்ற விபரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
 கடந்த ஞாயிற்­று­க்கி­ழமை இடம்­பெற்ற இந்த அனர்த்தம் குறித்து பிரித்­தா­னிய ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளியிட்டுள்ளன.

சம்­பவ தினம் தெனெரிப் கடற்­க­ரை­யி­லுள்ள பிளேயா பரே­யிஸோ பகு­தியில் உமா மற்றும் பாரதி ஆகியோர் தமது குடும்­பத்­தி­ன­ருடன் நீச்சல் அடிப்­பதில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இதன் போது உமாவின் மக­னான ஹரியும் (10 வயது) பார­தியின் மக­ளான 14 வயது சிறு­மியும் கட­ல­லையால் அடித்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர்.
இந்­நி­லையில் தமது பிள்­ளை­களை காப்­பாற்றும் முக­மாக உமாவும் பார­தியும் கடலில் இறங்­கிய போது, பாரிய அலை­யொன்று அவர்­களை அடித்துச் சென்­றுள்­ளது.
உமாவின் பின்னால் நீந்திச் சென்ற அவ­ரது கணவர் பழ­னிச்­சாமி சந்­திரன் (49 வயது), தமது மக­னான ஹரியை ஒரு­வாறு காப்­பாற்­றி­யுள்ளார்.
அதே­ச­மயம் பார­தியின் மகளும் அங்­கி­ருந்த ஒரு­வரால் காப்­பாற்­றப்­பட்­டுள்ளார். ஆனால் இரு பெண் மருத்­து­வர்­களும் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளனர். அவர்­களில் ஒரு­வ­ரது சடலம் உலங்­கு­வா­னூர்தி மூலம் மீட்­கப்­பட்­டது.
ரோயல் ஓல்­ட்ஹம் மருத்­து­வ­ம­னையில் பெண்கள் மற்றும் சிறு­வர்கள் பிரிவில் பணி­யாற்றி வந்த உமா, கிரேட்டர் மான்­செஸ்­டரில் 800,000 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான ஆடம்­பர வீட்டில் வசித்து வந்தார்.
அவ­ரது கணவர் பழனிச்சாமி சந்திரனும் பார­தியின் கணவர் சின்­ன­சா­மியும் மருத்­து­வர்கள் என்­பது குறிப்பிடத்தக்கது.
பாரதி இலிங்கன் நகரிலிருந்து 5 மைல் தொலைவிலுள்ள றீபம் எனும் இடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version