|
அமெரிக்கப் பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை கத்தியால் குத்தியதில், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது: பிட்ஸ்பர்க் அருகே உள்ள முர்ரிஸ்வில்லி என்னுமிடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் கத்தியுடன் வந்து திடீர் தாக்குதல் நடத்தினார்.
கண்ணில் தென்பட்ட மாணவர்கள் அனைவரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் ஒரு நபரும் கத்திக்குத்தில் காயமடைந்தார். அவர் யாரெனத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவலையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீஸார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மாணவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
கத்திக்குத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து பிடிபட்ட மாணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Suspect Alex Hribal seen taken from the magistrate’s office after his arraignment in the stabbing of students at Franklin Regional High School. Photograph
Accused attacker Alex Hribal, 16, is escorted from a district magistrate after he was arraigned as an adult on April 9. He faces four counts of attempted homicide, 21 counts of aggravated assault and one count of possession of a weapon on school grounds, according to a criminal complaint made public.
A police officer blocks the entrance to the school on April 9.
Students walk away from the campus on April 9.
Jenna Mickel, a sophomore at Franklin Regional High School, stands with her father, Richard, as she talks to reporters outside the school on April 9.
A Salvation Army disaster services vehicle drives past a school bus and onto the campus on April 9.