Site icon ilakkiyainfo

நடிகர் வடிவேலுவை ஒளித்துக்கட்ட முயற்சிக்கும் அரசியல்வாதியான நடிகருக்கு எச்சரிகை!!

 தமி­ழகத் திரைப்­ப­டத்­து­றையை மட்­டு­மன்றி தமி­ழக அர­சி­ய­லையும் வேற்று மாநி­லத்­த­வர்கள் ஆக்­கி­ர­மித்துக் கொண்டு தமிழ் சினிமாத் துறையையும் தமி­ழக அர­சி­ய­லையும் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டு­வ­ரு­வது காலங்­கா­ல­மாக நடந்து வரு­வ­ப­வை­யாகும்.

தெலுங்கு பேசும் மக்­க­ளுக்கு ஆந்­தி­ராவும் மலை­யாளம் பேசும் மக்­க­ளுக்கு கேர­ளமும் கன்­னடம் பேசும் மக்­க­ளுக்கு கர்­நா­ட­கமும் மொழி வாரியாக பிரித்து வழங்­கப்­பட்­டதைப் போன்றே தமி­ழர்­க­ளுக்­கென்று தமிழ்­நாடு அல்­லது தமி­ழகம் பிரித்து வழங்­கப்­பட்­டது.

மொழி வாரி மாநி­லங்கள் பிரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஆந்­திரா கேரளா கர்­நா­டகம் ஆகிய மாநி­லங்­களில் அந்­தந்த இனத்­த­வரே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரு­கின்­றனர்.

அந்த மாநி­லங்­களில் வேற்று இனத்­தவர் ஆட்சி செய்­ய­மு­டி­யாது ஆட்சி செய்ய நினைத்­துப்­பார்க்­கவும் முடி­யாது. ஆனால் இவை எல்­லா­வற்­றுக்கும் விதி­வி­லக்­கா­கவே தமி­ழகம் இருக்­கி­றது.

தமி­ழ­கத்தில் மட்­டுமே தெலுங்கர், மலை­யாளி; கன்­னடர் என வேற்று மாநி­லத்­த­வர்கள் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருக்­கின்­றனர். இருந்­து­வந்­தனர். தமி­ழக ஆட்­சிப்­பொ­றுப்பில் இருந்­த­வர்­களில் ஒரு சிலரே தமி­ழர்கள்.

அவர்­களில் பேர­ரிஞர் சி.என்.அண்­ணா­துரை, கர்­ம­வீரர் காம­ராஜர் போன்­ற­வர்­க­ளையே கூறலாம். ஏனை­ய­வர்கள் பிறப்பால் தெலுங்கர், மலை­யாளி, கன்­ன­டர்­க­ளாகும். ஆனாலும் தமி­ழர்கள் என சொல்லிக் கொள்­வ­துடன் தமிழே உயிர்­மூச்சு என்று போலி­யாக சூளு­ரைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

தமி­ழ­கத்தை ஆட்சி செய்த + ஆட்சி செய்து வரும் நீண்ட கால முதல்­வர்கள் சிலர் தமிழர் அல்­லா­த­வர்கள் என்­பது பல­ருக்குத் தெரிந்த விடயம். இப்­போது இன்­னு­மொரு வேற்று இனத்­தவர் தமி­ழக முதல்­வ­ராகும் நோக்­கத்­துடன் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்றார்.

தமி­ழர்­களை ஏமாற்றும் பிர­தான கரு­வி­யான சினிமா மூலம் நுழைந்­தவர், இன்று அர­சி­யல்­கட்சி ஆரம்­பித்து ஆட்­சி­யையும் பிடிக்­கப்­ பார்க்­கிறார்.

தமி­ழ­னையே தமி­ழ­கத்தில் இருந்து விரட்­டப்­பார்க்­கிறார் இந்த நடிகர் மற்றும் தலைவர்.

தமி­ழ­கத்தின் பெரும் கலை­ஞ­னான வைகைப்­புயல் வடி­வேலை இல்­லா­தொழிக்கும் முயற்­சி­யி­லேயே இந்தத் தலைவர் இறங்­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நடிகர் வடி­வேலு மது­ரைத்­த­மிழர். 54 வய­தாகும் நடிகர் வடி­வேலு நகைச்­சுவை நடிப்பில் தனக்­கென உலகத் தமி­ழர்கள் மத்­தியில் தனி­யான இடத்தைப் பிடித்துக் கொண்­டவர். பாட­க­ரா­கவும் புகழ் பெற்­றவர்.

1991 இல் கஸ்­தூரி ராஜாவின் இயக்­கத்தில் வெளி­வந்த ‘என் ராசாவின் மன­சிலே’ என்ற திரைப்­ப­டத்தில் அறி­மு­க­மானார். அதனைத் தொடர்ந்து பல படங்­களில் நடிக்கத் தொடங்­கினார்.

பின்னர் ஒரு காலத்தில் வடி­வே­லுவின் நகைச்­சுவை இல்­லை­யென்றால் அந்தப் படம் ஓடாது என்ற நிலைமை ஏற்­பட்­டது. வடி­வே­லுவின் நகைச்­சுவை இயற்­கை­யா­கவும் இயல்­பா­கவும் இருப்­ப­துடன் நகைச்­சு­வையை வெளிப்­ப­டுத்தும் அங்க அசை­வு­களும் அவ­ரது வெற்­றிக்கு காரண­மாக இருந்­தது. பிலிம்பேர் விருது தமி­ழக அரசு விருது என்­பன அவ­ருக்குக் கிடைத்­தன.

கடந்த தமி­ழக சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் தி.மு.க. வில் இணைந்த வடி­வேலு அந்தக் கட்­சிக்­காகப் பிர­சா­ரத்தில் ஈடு­பட்டார். அந்த தேர்­தலில் தற்­போ­தைய முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் அ.தி.மு.க.வும் நடிகர் விஜ­ய­காந்தின் தே.மு.தி.க.வும் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன.

தேர்தல் பிர­சா­ரத்தின் போது ஜெய­ல­லி­தாவை தரக்­கு­றை­வா­கவோ தாக்­கியோ பேசாத வடி­வேலு, விஜ­ய­காந்தை விமர்­சித்துப் பேசி­யி­ருந்தார். எதிர்­பா­ராத வித­மாக தேர்­தலில் தி.மு.க. தோல்­வி­ய­டைந்­தது.

ஜெய­ல­லிதா – விஜ­யகாந்த் கூட்­டணி வெற்றி பெற்­றது. அ.தி.மு.க., – விஜ­யகாந்த் கூட்­டணி வெற்­றி­யுடன் வடி­வேலின் வீழ்ச்­சியும் ஆரம்­பமானது.

ஆமாம், ‘வடி­வே­லுக்கு படங்­களில் வாய்ப்­புக்கள் கொடுக்­கக்­கூ­டாது’ என்று இர­க­சிய கட்­ட­ளை­யி­டப்­பட்­டது. மீறி பட­வாய்ப்புக் கொடுத்த­வர்கள் அச்­சு­றுத்­தப்­பட்­டனர்.

அவர்­க­ளது திரைப்­ப­டங்­களை வெளி­யி­டு­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டன. இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. மொத்­தத்தில் தமிழ்த்­தி­ரைப்­பட உலகம் வடி­வேலுவை தீண்­டத்­த­கா­தவர் போல ஒதுக்­கி­வைத்­தன.

இவை அனைத்­துக்கும் காரணம் யார் என்­பதை வெளிப்­ப­டை­யாக அனை­வரும் பேசினர். கடந்த மூன்று வரு­டங்­க­ளாக அஞ்­ஞாத வாசம் புரிந்த வடி­வே­லு­வுக்கு அர­சியலே வேண்­டா­மென்று போய் விட்­டது.

இந்த நிலை­யி­லேயே தெனா­லி­ராமன் படத்தில் வடி­வேலு நடித்து முடித்­துள்ளார். அந்­தப்­ப­டத்தை வெளி­யிட வேண்­டி­யது மட்­டுமே மிகு­தி­யாக உள்­ளது.

இந்தப் படத்தை வெளி­யி­டக்­கூ­டாது என்று தெலுங்கு அமைப்பைச் சேர்ந்த சிலர் வடி­வே­லு­வுக்கு அச்­சு­றுத்தல் விடுத்து வரு­கின்­றனர். வடி­வே­லுவின் வீட்டை முற்­று­கை­யி­டவும் முயன்­றுள்­ளனர். இவ்­வாறு முற்­று­கை­யிட்­ட­வர்கள் மீது பொலிஸார் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. வடி­வே­லு­வுக்கு பாது­காப்பும் வழங்­க­வில்லை.

இந்த நிலை­யி­லேயே தனக்கு உத­வு­மாறு தமிழ் அமைப்­புக்­க­ளிடம் வடி­வேலு வேண்­டுகோள் விடுத்தார். அந்த வகையில் இயக்­குநர் சீமான் வடி­வே­லு­வுக்கு ஆத­ர­வாகக் குரல் கொடுத்­துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இயக்­குநர் கவு­தமன் வடி­வே­லு­வுக்கு ஆத­ர­வாக அறிக்கை ஒன்றை விடுத்­துள்ளார். தமிழ் மண்ணின் பெரும் கலை­ஞ­னாக வடி­வே­லுவை மிரட்­டு­வது ஒட்­டு­மொத்த தமிழ்ச் சமூ­கத்­தையும் உர­சிப்­பார்க்கும் செயல் என்றும் இதனை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நிறுத்திக் கொள்ள வேண்­டு­மென்றும் கவு­தமன் தெரி­வித்­துள்ளார்.

எனினும் வடி­வே­லுவின் தெனா­லி­ராமன் படத்தை வெளி­யி­டக்­கூ­டாது என்­பதில் இந்த விஜயத்துக்கு காந்தமான தலைவர் + நடிகர் உறு­தி­யுடன் இருக்­கின்­றாராம்.

தெலுங்­க­ரான இந்த நடிகர் + தலை­வரே தமது இனத்­த­வர்­க­ளான தெலுங்கு மக்­களை தூண்­டி­விட்டு வடி­வே­லு­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வ­தற்கு இர­க­சிய ஏற்­பா­டு­களை செய்­துள்­ளாராம்.

இந்த உண்மை பல­ருக்கும் தெரி­ய­வந்து விட்­டதாம். இத­னை­ய­டுத்தே தமிழ் அமைப்­புக்கள் வடி­வே­லு­வுக்கு ஆத­ர­வாகக் குரல் கொடுப்­ப­தற்கு முன்­வந்­துள்­ள­னவாம்.

தமி­ழக திரைப்­ப­டத்­து­றையில் 80 வீத­மான நடி­கர்கள் நடி­கைகள் மற்றும் கலை­ஞர்கள், தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் வேற்று மாநி­லங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளே­யாகும். விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய சிலரே தமி­ழர்கள்.

இவ்­வா­றான நிலையில் இந்த வேற்று மாநிலக் கலை­ஞர்­க­ளுக்கு எதி­ராக தமிழ்த்­தி­ரைப்­பட உல­கத்­தினர் பொங்கி எழுந்தால் அதன் விளைவு மோச­மா­ன­தாக இருக்கும்.

இதனை அந்த நடிகர் தலைவர் புரிந்து கொண்­டாரா? இல்­லையா? என்­பது தெரி­யாது. ஆனால் அதைப்­பற்றி அவர் கவ­லைப்­பட்­ட­தா­கவே தெரி­ய­வில்லை என்று அந்த அமைப்­புக்கள் கூறு­கின்­றன.

‘ஜெக­ஜால புஜ­பல தெனா­லி­ராமன்’ என்ற குறித்த திரைப்­ப­டத்தில் கிருஷ்­ண­தே­வ­ராயர் பாத்­திரம் தவ­றாகச் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தே மேற்­படி படத்தை தடை செய்ய வேண்­டு­மென்று தெலுங்கு அமைப்­புக்கள் கூறு­கின்­றன.

விஜ­ய­ந­கரப் பேர­ர­சர்­களில் ஒரு­வ­ரான கிருஷ்­ண­ராய தேவ­ரைப்­பற்றி தவ­றாக சித்­தி­ரிக்­கப்­பட வில்லை என்­பதே வடி­வேலு மற்றும் படத்­த­யா­ரிப்­பா­ளர்­களின் வாதம்.

படம் இன்னும் திரை­யி­டப்­ப­டாத நிலை யில், அந்தப் படத்தின் திரைக்­க­தை­யைப்­பற்­றிய விபரம் எதுவும் வெளி­வ­ராத நிலையில் தேவ­ரா­யரின் பாத்­திரம் தவ­றாகச் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று எவ்­வாறு கூற­மு­டியும் என்­பது தமிழ் அமைப்­புக்­களின் கேள்­வி­யாகும்.

இந்­தப்­ப­டத்தில் வடி­வேலு நடித்­தி­ருக்­கிறார் என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே படத்தை வெளி­யி­டக்­கூ­டாது என்று குறித்த அமைப்­புக்கள் தெரிவிக்­கின்­றன.

ஒட்­டு­மொத்­த­மாக வடி­வேலு என்ற தமிழ் கலை­ஞனை திரைப்­ப­டத்­து­றையை விட்டே விரட்­டு­வ­தற்கு திட்­ட­மிட்டு ஒரு சிலர் செயற்­ப­டு­வது இதன் மூலம் புல­னா­கின்­றது.

தமிழ்த் திரைப்­பட உல­கி­லி­ருந்து தமிழ்க் கலைஞர் ஒரு­வரை விரட்­டி­ய­டிக்க சதி மேற்­கொள்­ளப்­ப­டு­வது வேடிக்­கை­யா­னது. இதற்கு முன்­னரும் கூட பிர­பல திரைப்­பட நடிகரும் அர­சி­யல்­வா­தி­யுமான ஒருவரினால் சந்­தி­ர­பாபு போன்ற பல தமிழ் நடி­கர்கள் இல்­லாமல் செய்­யப்­பட்­ட­தாக கேள்விப்­பட்­டி­ருக்­கிறோம்.

அதேபோன்று தற்­போது பக்­கத்து மாநி­லத்­தி­லி­ருந்து தமி­ழகம் வந்து குடி­யேறி தமிழ்ப்­ப­டத்தில் நடித்து ஒரு கட்­சியின் தலை­வ­ராக உயர்ந்திருக்கும் ஒருவர் தமி­ழ­ரான வடி­வே­லுவை ஒழித்­துக்­கட்ட முயற்சி செய்­கிறார் என்­பது கவ­லைக்­கு­ரி­யது.

இப்­போதே இப்­ப­டி­யென்றால் அந்த நடிகர் +தலைவர் தமி­ழ­கத்தின் ஆட்­சியைப் பிடித்து தமி­ழக முதல்­வ­ரானால் தமி­ழர்­களின் நிலைமை எப்­படி இருக்கும் என்­பதே தமிழ் அமைப்­புக்­களின் கேள்­வி­யாகும்.

வடி­வே­லு­வுக்குக் குரல் கொடுக்க முன்­வந்­தி­ருக்கும் அமைப்­புக்கள் இறு­தி­வரை இதற்கு ஒரு தீர்வை காணப்போவதாக அறிவித்திருப்பது வடிவேலு ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.

இவ்­வா­றான நிலையில் வடிவேல் ‘ஜெ’ டி.வி. நிகழ்ச்­சியில் பங்­கு­பற்றப் போவ­தாக தகவல் ஒன்று வெளி­யா­கி­யுள்­ளது. பிற­கென்ன ‘ஜெ’ அம்மா கட்­சியில் இணை­வதுதான் பாக்கி! சேருவாரா வடிவேல்?

நல்­ல­தம்பி நெடுஞ்­செ­ழியன்

Exit mobile version