ilakkiyainfo

லிபியாவின் அரபு இலையுதிர் காலம்

அரபு வசந்தம் என்னும் பெயரில்  நேட்­டோப்­ப­டைகள் குண்டு மாரி பொழிய கேணல் மும்மர் கடாஃபியின் ஆட்சி லிபி­யாவில் கவிழ்க்­கப்­பட்டு நீதிக்குப் புறம்­பான வகையில் கடாஃ­பியும் கொல்­லப்­பட்டார். உல­கி­லேயே சிறந்த சமூக நலக் கொடுப்­ப­ன­வு­க­ளு டன் கடாஃபி ஆட்சி செய்த லிபியா இப் ­போது பிளவுபடும் நிலையை அடைந்­துள்­ளது.

பல இனக் குழு­மங்கள், பல படைக்­கலன் ஏந்­திய குழுக்கள் ஒன்­றுடன் ஒன்று மோது­கின்­றன. பல­வீ­ன­மான லிபிய மைய அர­சுக்கு எதி­ராக எண்ணெய் வளம் மிக்க பிராந்­தி­யங்­களின் மக்கள் போர்க் கொடி தூக்­கி­யுள்­ளனர்.

 லிபிய வர­லாற்றில் முதன் முறை­யாக மக்­க­ளாட்சி முறை­மைப்­படி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பத­வி­யி­லி­ருந்து தூக்கி எறி­யப்­பட்டார். ஊழல் தொடர்­பான விசா­ர­ணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடி­விட்டார்.

 மொத்­தத்தில் லிபி­யாவில் அரபு வசந் தம் அரபு இலை உதிர்­கா­ல­மாக மாறி­விட்­டது. லிபிய அர­மைப்புச் சபைக்­கான தேர்­தலில் ஐந்தில் ஒரு பகு­திக்கு மேலான உறுப்­பி­னர்­களை தெரிவு செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. தேர்­தலின் போது நடந்த வன்­மு­றைகள் இதற்குக் கார­ண­மாகும்.

பல இனக் குழு­மங்கள் கொண்ட லிபியா

லிபியா ஆறரை மில்­லியன் மக்­களைக் கொண்­டது. இதில் ஒன்­றரை மில்­லியன் பேர் வெளி­நாட்டில் இருந்து வந்து குடி­யே­றி­ய­வர்கள். லிபி­யாவில் 140 இனக் குழு­மங்கள் இருக்­கின்­றன. இந்த இனக் குழு­மங்­களின் அடை­யா­ளங்கள் லிபிய மக்­களின் கலா­சார அடை­யா­ளத்தின் முக்­கிய அம்­ச­மாகும்.

 இனக்­கு­ழு­மங்­களின் பெயர்­க­ளையே தமது குடும்பப் பெயர்­க­ளாக லிபிய மக்கள் கொண்­டுள்­ளனர். மேற்கு லிபி­யா வில் ஒரு மில்­லியன் பேரைக் கொண்ட வார்ஃ­பல்லா என்ற இனக்­கு­ழுமம் முக்­கி­ய­மா­னது. இந்த இனக் குழு­மத்தில் 52 உட்­பி­ரி­வுகள் இருக்­கின்­றன.

 மத்­திய லிபி­யாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்­கி­ய­மா­னது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழு­மத்தைச் சேர்ந்­தவர். இந்த இனக்குழு­மத்தின் கையில் லிபியா இருந்­தது என்று சொல்­லலாம்.

gaddafi_1875572iஅல் – மாஹார்கா என்ற இன்­னொரு இனக் குழுமம் மத்­திய லிபி­யாவில் உள்­ளது. இது கடாஃபி இனக் குழு­மத்­துக்கு நெருக்­க­மா­னது. கிழக்கு லிபி­யா வில் ஜுவையா, பானி சலீம், மெஸ்­ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழு­மங்கள் முக்­கி­ய­மா­னவை.

கடாஃ­பியின் மனைவி வார்ஃ ப்ல்லா என்னும் இனக்­கு­ழு­மத்தைச் சேர்ந்­தவர். இதுதான் லிபி­யாவின் மிகப்­பெ­ரிய இனக்­கு­ழுமம். இதற்கு 54 உட்­பி­ரி­வுகள் இருக்­கின்­றன.

கடாஃ­பியின் தேச ஒரு­மைப்­பாடு

கடாஃ­பியின் ஆட்­சியின் கீழ் இவ்­வினக் குழு­மங்­க­ளிடையே மோதல்கள் இடம்­பெ­ற­வில்லை. ஆனால், இந்த இனக் குழு­மங்­க­ளுக்­கி­டை­யி­லான குரோ­தத்தை கடாஃபி தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

கடா­பிக்கு எதி­ரான போர் ஆறு மாதங்கள் எடுத்­த­மைக்கு அவ­ருக்கு எதி­ரான கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளிடையே ஒற்­று­மை­யின்­மையே கார­ண­மாக இருந்­தது. அவர்கள் தங்­க­ளுக்குள் அடிக்­கடி மோதவும் செய்­தனர். கடாஃ­பி­யிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  இடங்­களில் இருந்த சில இனக் குழு­மங்கள் கடாஃ­பிக்கு எதி­ரான கிளர்ச்­சிக்­கா­ரர்­களால் தாக்­கப்­பட்ட, கொலை­யி­டப்­பட்ட, பெண்கள் வன்­மு­றைக்­குள்­ளான, சம்­ப­வங்கள் நிறைய நடந்­தன.

மும்மர் கடாஃ­பிக்கு எதி­ரான கிளர்ச்­சியில் பல தலை­வர்கள் உள்­ளனர். அவ ர்­களில் மத­வா­திகள், அரபுத் தேசி­ய­வா­திகள், மத­சார்­பற்­ற­வர்கள், சமத்­துவ வாதிகள், மேற்­கு­லக ஆத­ர­வா­ளர்கள் எனப் பல தரப்­பட்­ட­வர்கள் இருந்­தார் கள்.

ஆனால் எல்­லா­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓர­ள­வுக்குப் பல­ராலும் அறியப்­பட்­டவர் மும்மர் கடாஃ­பிக்கு நீதி அமைச்­ச­ராக இருந்த முஸ்­தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃ­பியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்­தே­கத்­து­ட­னேயே பார்த்­தனர்.

கடாஃ­பிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி.

கடாஃ­பிக்குப் பின்­ன­ரான ஆட்சிப் போட்­டியில் மேற்கு நாடு­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்­களும் இஸ்­லா­மிய மத­வா­தி­களும் கடு­மை­யாக முரண்­பட்­டனர். ஈரான் மத­வா­தி­க­ளிற்கு உத­வி­யது. ஈரானின் நீண்­ட­காலக் கனவில் முக்­கி­ய­மா­னது லிபியா, எகிப்து ஆகிய நாடு­களை தனது ஆதிக்­கத்தில் கீழ் கொண்­டு­வ­ரு­வதே.

சவூதி அரே­பி­யாவின் சில பிர­தே­சங்­களை ஈரான் கைப்­பற்றி தனது பொரு­ளா­தார வலி­மை­யையும் மேம்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளது. ஈரான் ஹிஸ்­புல்லா  மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்­லா­மிய விடு ­தலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்­கிய தொடர்பைப் பேணி­வ­ரு­கி­றது. அவர்­க­ளுக்­கான நிதி மற்றும் படைக்­க­லன்கள் உத­வி­களை வழங்கி வரு­கி­றது.

இவை இரண்டும் ஷியா முஸ்­லிம்­களின் அமைப்­பாகும். ஆனால், அல்கைதா ஒரு ஸுன்னி முஸ்­லிம்­களின் அமைப்­பாகும். அல் கைய்­தா­விற்கும் ஈரா­னுக்கும் பகைமை எனக் கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் அல் கெய்­தா­விற்குத் தேவை­யான நிதி கட்­டா­ரி­லி­ருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரா­னூடா­கவே வரு­கி­றது.

இதற்­காக அல் கைய்தா ஈரானில் எந்­த­வித தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களும் எடுப்­ப­தில்லை என்ற உடன்­பாடு இருக்­கி­றது. ஈரா­னுக்கும் அல் கைய்­தா­விற்கும் பொது­வான எதிரி அமெ­ரிக்கா. இரண்டும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான ஆதா­ரங்கள் தற்­போது சிறிது சிறி­தாக வெளி­வ­ரு­கி­றது, ஈரான் இப்­போது எகிப்தில் தனது கைவ­ரி­சையைக் காட்டத் தொடங்­கி­விட்­டது.

மொஹமட் முர்­ஸியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஈரான் உத­வு­வ­தாக நம்­பப்­ப­டு­கி­றது. அத்­துடன் அல் கைய்­தாவும் எகிப்தில் ஊடு­ருவி உள்­ளது. லிபி­யா­விலும் இதே நிலை­மைதான். ஈரானும் அல் கைய்­தாவும் அங்கு தங்கள் கைவ­ரி­சைகளைக் காட்டி வரு­கின்­றன. சிரி­யாவில் அல் கைய்­தாவும் ஈரானும் எதிர் எதிர் அணி­களில் நின்று மோது­வது உண்­மைதான்.

ஈரான் லிபியா, எகிப்து, எதி­யோப்­பியா ஆகிய மூன்று நாடு­களும் தனது கட்­டுப்­பாட்­டின் கீழ் இருக்க வேண்டும் எனத் திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கி­றது. ஈரானில் பயிற்சி பெற்ற அல் கைதா­வி­னரே எகிப்தில் ஊடு­ருவி இருப்­ப­தாக எகிப்­தியக் காவற்­றுறை கண்­ட­றிந்­துள்­ளது. 2011ஆ-ம் ஆண்டு செப்­டம்பர் மாதம் நைஜீ­ரி­யாவில்  ஈரானில் தயா­ரான படைக்­க­லன்­களை அல் கை­தா­வினர் கடத்திச் செல்­வது கண்டு பிடிக்­கப்­பட் ­டது.

யெம­னிலும் ஈரானில் தயா­ரிக்­கப்­பட்ட ஏவு­கணைச் செலுத்­தி­களை அல் கைய்தா பாவிப்­பது கண்­ட­றி­ய­ப்பட்­டது. இவை யாவும் ஈரா­னிற்கும் அல் கெய்­தா­விற்கும் இடையில் இருக்கும் ஒத்­து­ழைப்பை உறுதி செய்­கின்­றன.

பிராந்­திய முரண்­பாடு

லிபி­யாவின் கிழக்குப் பிராந்­தி­யத்தில் உள்ள சைரெ­னைக்கா (Cyrenaica) லிபி­யாவில் இருந்து தன்­னாட்சி பெற முயல்­கின்­றது.

லிபி­யாவின் உயர்­தர எண்ணெய் வளத்தில் எண்­பது விழுக்­காடு சைரெ­னைக்­காவில் இருந்து கிடைக்­கின்­றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்­கினர் தலை­நகர் திரிப்­போ­லி­யிலும் ஃபெசான் மாகா­ணத்­திலும் வசிக்கின்றனர்.

சைரெ­னைக்கா தனி­நா­டாகப் பிரிந்தால் அங்­கி­ருக்கும் உல­கி­லேயே ஐந்­தா­வது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செல்­வந்த நாடு­களில் ஒன்­றாக ஆ­கி­வி­டு­வ­துடன், எஞ்­சிய லிபி­யாவை உல­கி­லேயே வறிய நாடாக மாற்­றவும்.

சைரெ­னைக்கா தனக்கு என ஒரு மைய வங்­கி­யையும் உரு­வாக்கி உலக நாடுகள் தம்மை அங்­கீ­க­ரிக்­கும்­படி பரப்­புரை செய்ய ஒரு கன­டிய நிறு­வ­னத்தின் சேவை­யையும் பெற்­றுள்­ளது. சைரெ­னைக்கா எண்­ணெயை ஏற்றுமதி செய்­வதைத் தடுக்க லிபிய அரசு சைரெ னைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகை யைச் செய்துள்ளது.

 லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்சி எடுக்கின்றது.

 அது இடைக்காலத் தலைமை அமைச் சரான அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது. அவரது பதவிக் காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப் படுகின்றது.

 லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும், படைக் கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடிய தாகவும் ஓர் அமைச்சரவையை அவர் உருவாக்க வேண்டும் எனப் பணிக் கப்பட்டுள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால் தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.

 – வேல் தர்மா

Moammar Gadhafi relaxes with his family at the Bab al-Aziziya compound in Tripoli in this still image taken from an exclusive amateur video from 2005 obtained by Reuters on September 7, 2011
Moammar Gadhafi with his daughter Ayesha in his Bedouin tent January 12, 1986. The Libyan leader presented his family to U.S. women journalists he invited to a news conference in the tent.
Safiya Gadhafi , wife of the Libyan leader Col. Muammar Gaddafi, with her children inside their Bedouin tent January 12, 1986.R
Muammar Gadhafi, inside his Bedouin tent 1986 where he presented his family to U.S. women journalists during a news conference.Reuters
Safia Gadhafi, wife of Libyan leader Moammar Gadhafi, meets foreign journalists in front of her house at Bab El Azazia barracks in Tripoli April 21, 1986. She is now demanding an inquiry into her husband’s death.

Libyan leader Muammar Gaddafi’s daughter Aisha Muammar Gadhafi , Pakistani Prime Minister Yousuf Raza Gilani’s wife Fauzia Gilani, Syrian President Bashar Assad’s wife Asma Assad, Qatar Amir Sheik Hamad bin Khalifa al-Thani’s wife Sheikha Mozah bint Nasser Al Missned, Turkey’s Prime Minister Tayyip Erdogan’s wife Emine Erdogan, Jordanian Queen Rania, Lebanese President Michel Suleiman’s wife Wafaa Suleyman and Vice Speaker of the Azerbaijani parliament Bahar Muradova pose for a family photo at the Istanbul Meeting in Support of Gaza in Istanbul January 10, 2009.Reuters

Exit mobile version