இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறினார். பின்னர் இதை யுவனும் வெளிப்படையாகவே அறிவித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரும் நஸ்ரியாவும் இணைந்து நடிக்கும் ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்துள்ளார் (நிஜ வாழ்க்கையிலும் ஒரு முஸ்லிம் நடிகையைக் காதலித்து தோற்றதாகக் கூறப்படுகிறது).
இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே முஸ்லீம் மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டுவிட்டதாம். இதையடுத்தே இவர் முஸ்லீம் மதத்துக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.