Site icon ilakkiyainfo

பண்டிகைக் காலத்தில் 417 விபத்துச் சம்பவங்கள்: 38 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

பண்­டிகை காலத்தின் போது நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 38 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் பதி­வான உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் 34 விபத்­துக்கள் மூலமே இந்த 38 உயி­ரி­ழப்­புக்­களும் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் நாடளா­விய ரீதியில் மொத்தம் 417 விபத்துச் சம்­ப­வங்கள் நேற்று காலை ஆறு மணி­யுடன் நிறை­வ­டைந்த ஆறு நாட்­களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் சிரேஷ்ட அதி­கா­ரி­யொ­ருவர் குறிப்­பிட்டார்.

கடந்த 10 ஆம் திகதி முதல் மது­பானம் அருந்­தி­விட்டு வாகனம் செலுத்தும் சார­தி­களைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் போக்கு வரத்து ஒழுங்கு விதி­களைக் கண்­கா­ணிக்க என நிய­மிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இந்த விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன.

அதன் படி 10 ஆம் திகதி முதல் ஜய புது­வ­ருட பிறப்­புக்கு முதல் நாளான ஏப்ரல் 13 ஆம் திகதி வரையில் 19 பாரிய விபத்­துக்கள் நாட­ளா­விய ரீதியில் பதி­வா­கி­யி­ருந்­தது. அந்த விபத்­துக்கள் கார­ண­மாக 23 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

எவ்­வா­றா­யினும் புத்­தாண்டு பிறக்கும் வரையில் நாட­ளா­விய ரீதியில் 352 விபத்­துக்கள் பதி­வா­கி­யி­ருந்­த­துடன் அதில் 30 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்­நி­லை­யி­லேயே கடந்த 10 ஆம் திகதி முதல் புத்­தாண்டு நிறை­வுற்ற காலப்­ப­கு­தி­யான நேற்று காலை 6.00 மணி­வ­ரி­யி­லான காலப்­ப­கு­திக்குள் 38 பேர் வாகன விபத்­துக்­களால் உயி­ரி­ழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னி­டையே இந்த புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் வாகன விபத்­துக்­களின் எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்கும் நிலையில் திடீர் விபத்­துக்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்­ளது.

கடந்த வரு­டத்­துடன் ஒப்­பிடும் போது இம்­முறை புத்­தாண்டு தின­மான 14 ஆம் திகதி பதி­வா­கி­யுள்ள திடீர் விபத்­துக்­களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் அனில் ஜய­சிங்க தெரி­வித்­துள்ளார்.

புது­வ­ருட தினத்­தன்று வரை­யி­லான காலப்பக் 206 பேர் மட்­டுமே திடீர் விபத்­துக்­களால் காய­ம­டைந்து தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர்­களில் 86 பேர் மட்­டுமே தங்­கி­யி­ருந்து சிகிச்சைப் பெற்று வரு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும் கடந்த வருட பண்­டிகை தின திடீர் விபத்­துக்­களின் போதான சம்­ப­வங்­க­ளுடன் ஒப்பிடும் போது குறித்த தீடீர் விபத்துக்கள் 27 ஆல் குறைவடைந்துள்ளதாகவும் தீக் காயங்கள் தொடர்பிலான 03 சம்பவங்கள் மட்டுமே இம்முறை புத்தாண்டு தினத்தன்று பதிவாகியுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version