12 வயதுச் சிறுமி ஒருவர், 13 வயதுச் சிறுவனின் குழந்தையைப் பெற்றெடுத்து, பிரித்தானியாவின் இளம் வயது பெற்றோர் என்ற பெயரைப் பெற்றுள்ளனர்.
12 வயதான அந்தச் சிறுமி, சென்ற வாரஇறுதியில், ஏழு பவுண்டு எடை கொண்ட குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தொடக்கப் பள்ளியில் படித்து வந்த அவர், வடக்கு லண்டனில் தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 13 வயதுச் சிறுவனுடன் நட்பு முறையில் பழகி, உறவு கொண்டுள்ளார்.
இவர்களுக்குப் பிறந்த குழந்தை குறித்து மிகவும் பெருமிதம் கொண்ட பெண்ணின் பெற்றோர், குழந்தையின் படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தனது தாயாருடன் வசித்து வரும் இந்த இளவயதுத் தாய், வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளி செல்லத் தொடங்குவார் என்று கூறப்பட்டது.
குறிப்பாக, இந்தப் பெண்ணின் தாயாருக்கும் 27 வயதுதான் ஆகிறது என்பதால், இங்கிலாந்தின் மிக இளவயதுப் பாட்டி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறுவன், சிறுமி இருவரின் பெற்றோரும் தொடக்கத்தில் இந்தச் செய்தியால் பெரும் அதிர்ச்சி அடைந்தாலும், குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதற்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்துள்ளனராம்.