Site icon ilakkiyainfo

இன்றைய இலங்கை செய்திகள் (18-04-2014) – (வீடியோ)

பொலன்னறுவை, அரலகங்வில் இஸட் டீ எனும் வாவிக்குள் டிரக்டர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த டிரக்டரில் 25 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். காப்பாற்றப்பட்ட 13 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையிலிருந்து தெஹியத்த கண்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் செவனப்பிட்டியிலுள்ள மற்றுமொரு உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜீப் கவிழ்ந்து கடற்படையினர் இருவர் பலி: நால்வர் காயம்
19-04-2014

திருகோணமலை, போடவக்கட்டு மதுரங்குடா 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் கடற்படையினரின் டிபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று குச்சவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியிலிருந்த குழிக்குள் டயர்கள் விழுந்துவிடாமல் திருப்பியபோதே வாகனம் நடுவீதியிலேயே தலைகீழாக புரண்டுவிபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை டொக்யாட் கடற்படைத்தளத்திலிருந்து திரியாய் வலகம்பா தளத்திற்கு சென்று திருமியிய டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு தடம் புரண்டது.

 

Exit mobile version