ilakkiyainfo

பாஜகவிடம் இருந்து எஸ்கேப் ஆனா நயன்தாரா ! கோடிகள் வேண்டாம் கொடியும் வேண்டாம்

 

சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம். ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய கட்சி ஒன்று நயன நடிகையை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டது.

இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் பெரும்புள்ளி ஒருவரை தொடர்பு கொண்டு நடிகையிடம் பேசுமாறு கூறினார்களாம். அவரும் நயன நடிகையை தொடர்பு கொண்டு தேசிய கட்சி ஒன்று உங்களை பிரச்சாரத்திற்கு அழைக்கிறது.

10 படத்திற்கான சம்பளத்தை தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ பிரச்சாரம் செய்ய முடியாது என்னை விட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை இதனால் ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் இருந்து தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று நடிகைக்கு பயம். உடனே தன்னுடன் நடித்து அடுத்த படத்திலும் நடிக்கும் அரசியல் வாரிசு ஹீரோ கம் தயாரிப்பாளரை அணுகி நடிகை விஷயத்தை தெரிவித்துள்ளார்.

அதற்கு நடிகர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதுடன் கொதிப்படைந்த ஆந்திர பெரும்புள்ளிகளின் கோபத்தை தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் தணித்துவிட்டாராம்.

அனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்
22-04-2014
Kollywood-news-8813அனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி நேரில் சென்று அரண்மனை அரங்கை பார்த்து ரசித்தார். கோச்சடையான் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதுவும் சரித்திர பின்னணியிலான படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளனர். சரித்திர பின்னணியிலான கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்திருந்தாலும் அது அனிமேஷன் படம்தான். அதனால் பிரமாண்ட அரங்குகள் அமைத்து ரவிக்குமார் படத்தில் நடிக்க விரும்புகிறார் ரஜினி.

இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது அனுஷ்கா நடித்துவரும் பாஹுபாலி படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த அரண்மனை அரங்கையும், ஷூட்டிங்கையும் நேரில் பார்க்க விரும்பினார் ரஜினி. தன் விருப்பத்தை ராஜமவுலியிடம் கூறினார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட இயக்குனர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

நேற்றுமுன்தினம் ரஜினிகாந்த் பாஹூபாலி ஷூட்டிங் தளத்துக்கு நேரில் சென்றார். அவரை ராஜமவுலி, அனுஷ்கா மற்றும் பட குழுவினர் வரவேற்றனர். அரங்கை சுற்றிப்பார்த்து ரஜினி பாராட்டியதுடன், ஷூட்டிங்கையும் பார்த்து ரசித்தார்.

1 மணி நேரம் படப்பிடிப்பு பணிகளை பார்த்து ரசித்த ரஜினி, இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார். இது பற்றி ராஜமவுலி, தனது இணைய தள பக்கத்தில், என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் ரஜினி இப்படத்தின் ஷூட்டிங் தளத்துக்கு வந்ததுதான். அதற்காக அவருக்கு நன்றி என குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version