Site icon ilakkiyainfo

10 மாதங்களின் பின் வந்து சேர்ந்த சவூதி அரேபியாவில் இறந்த பெண்ணின் உடல்!

சவூதி அரே­பி­யாவில்  இறந்த  கல்­முனைப் பெண்­ம­ணியின் உடல் 10 மாதங்­களின் பின் கடந்த சனிக்­கி­ழமை இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஞாயி­றன்று பகல் கல்­முனை நற்­பிட்­டி­மு­னையில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

காரை­தீ­வி­லுள்ள மனித அபி­வி­ருத்­தித்­தா­பனம் மேற்­கொண்ட பெரு­மு­யற்­சியின் கார­ண­மாக இச் சடலம் உரி­ய­வர்­களால் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இச்­சம்­ப­வத்தை ஊட­கங்­க­ளுக்கு கொண்­டு­வந்­ததன் பல­னா­கவே மேற்படி சடலம் கிடைத்­தது. எனவே அந்த தாப­னத்­திற்கும் ஊட­கங்­க­ளுக்கும் குடும்­பத்­தினர் நன்­றி­களைத் தெரி­வித்­தனர்.

குறித்த பெண்ணின் சடலம் அவர் கட­மை­யாற்­றிய சவூதி ­அ­ரே­பிய வீட்டு எஜ­மானின் நிதிச் செ­ல­வுடன் அங்­குள்ள பிரே­த­பெட் டியில் பூரண சுகா­தா­ர­மு­றையில் இறுக்கி அடைக்­கப்­பட்ட நிலையில் கல்­முனை வந்­து­சேர்ந்­தது.

கல்முனை நற்­பிட்­டி­மு­னை­யி லுள்ள வீட்டில் ஒருநாள் வைக்­கப்­பட்டு இந்­து­மு­றைப்­படி சகல கிரி­யை­களும் நடத்­தப்­பட்­ட­போ­திலும் பெட்டி திறக்­கப்ப­ட­வில்லை. சுகா­தார பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக அந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்ளப்பட்­டி­ருந்­தது.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பகல் நற்­பிட்­டி­முனை இந்து மயா­னத்­திற்கு­கொண்டு செல்­லப்­பட்டு அங்கு பொதுச்­சு­கா­தார பரி­சோதகர்கள் முன்­னி­லையில் பெட்டி திறக்­கப்­பட்டு 15 நிமி­டங்­க­ளின்பின் உற­வி­னர்­க­ளுக்கு காட்­டப்­பட்டு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

சவூதி அரே­பி­யாவில்இறந்த பெண்­ம­ணியின் உடல் 8மாத கால­மா­கியும் இலங்கை வர­வில்லை. என­வே­ உ­ரி­ய ­ந­ட­வ­டிக்கை எடுத்து சடலத்தை  தந்துதவுமாறு  உற­வினர்கள்  வெளி­வி­வ­கார அமைச்­சிடம்மன்­றாட்­ட­மாக கோரிக்கை விடுத்தி­ருந்த செய்தி ஏலவே ஊட­கங்­களில் வெளி­வந்­தி­ருந்­தமை  தெரிந்­ததே.

இது பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

கல்­முனை, நற்­பட்­டி­முனை கிரா­மத்தை சேர்ந்த நான்கு பிள்­ளை­களின் தாயா­ரான கண­ப­திப்­பிள்ளை ரமணி என்ற குடும்ப பெண் குடும்ப கஷ்டம் கார­ண­மாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்கு வீட்டு வேலைக்­காக சென்­றுள்ளார்.

கணவர் காத்­த­முத்து வேதா­னந்தம் பிள்­ளை­க­ளான வே.பவித்ரா (வயது 26) வே.கேமலதா (வயது23) வே.கோபிகாந்த்  (வயது19) வே.மோனிசா (வயது 12) ஆகி­யோரை விட்டு சவூதி சென்­றி­ருந்தார்.

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி சுக­யீனம் கார­ண­மாக இறந்­துள்­ள­தாக ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அவரின் வீட்­டிற்கு தகவல் கிடைத்­துள்­ளது. அத்­தி­னத்தில் அவரின் அப்­பாவும் இறந்­துள்ளார்.

துக்­கத்தில் இருக்கும் போது மற்றும் ஒரு துக்கச் செய்­தியும் அவர்­களின் வீட்­டிற்கு கிடைத்­துள்­ளது. செய்­வது அறி­யாது கடந்த வாரம் கதைத்த மனைவி எவ்­வாறு   சுக­யீனம் கார­ண­மாக இறந்­தி­ருப்பார் என சந்­தேகம் கொண்டு மரணத்தில் சந்­தேகம் உள்­ளது உடன் சட்ட நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு உடலை இலங்­கைக்கு அனுப்­பு­மாறு இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம், வெளி­வி­வ­கார அமைச்சு ஆகி­ய­வற்­றிற்கு கணவர் காத்­த­முத்து வேதா­னந்தம் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

பிரேத பரி­சோ­த­னையில்  அவர் இரு­தய நோய் கார­ண­மாக இறந்­துள்­ள­தாக கடந்த 2014 ஜன­வரி 20ஆம் திகதி மருத்­துவ அறிக்­கையின் பிர­தி­களை வெளி­நாட்டு அமைச்சு கண­வ­ருக்கு அனுப்­பி­யுள்­ளது.

அதன் பின்னர் உடலை உடன் இலங்­கைக்கு கொண்­டு­வந்து தரு­மாறு கேட்டு சம்­மதக் கடி­தத்­தினை அமைச்­சுக்கு கணவர் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், இது­வரை உடல் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. மர­ணித்து சுமார் 8 மாத­கா­ல­மா­கியும் உடல் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­டா­துள்­ளது.

இதனால் அவரின் குடும்­பத்­தினர் செய்­வ­த­றி­யாது உள ரீதி­யாக பாதிக்­கப்­பட்டுள்ளார்கள். இவர்­களின் நிலை­மை­யினை கருத்திற் கொண்டு குறிப்­பிட்ட பெண்ணின் உடலை உடன் இலங்­கைக்கு கொண்டு வரு­வ­தற்கு தேவை­யான நடவ­டிக்­கை­களை செய்து தரு­மாறு உரிய அரச அதிகா­ரி­க­ளிடம் பகி­ரங்க வேண்­டு­தலை விடுத்­தி­ருந்தார் அவரின் மகள் வே.கேம­லதா.

மர­ணித்த ரம­ணியின் கணவர் காத்­த­முத்து வேதா­னந்தம் மகள் வே.கேம­லதா ஆகியோர் காரை­தீவி­லுள்ள மனித அபி­வி­ருத்­தித்­தா­ப­னத்­திடம் சென்றும் முறை­யிட்­டுள்ளனர்.

சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இவ­ரது சடலத்தை தரு­வித்துக் கொடுக்­கு­மாறு மனித அபி­வி­ருத்­தித்­தா­பனம் வேண்­டுகோள் விடுத்­த­தோடு நட­வ­டிக்­கையில் இறங்­கி­யது.

ஆனால் ரம­ணியின் உடல் இலங்­கைக்கு கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் தாம­தமா­கவே நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தது. இப்­பி­ரச்­சினை தொடர்­பாக மனித அபி­வி­ருத்தி தாப­னத்தின் கிழக்கு மாகாண இணைப்­பாளர் பொன்­னையா சிறிகாந் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளோடு தொடர்­பு­கொண்டார்..

மனித அபி­வி­ருத்தி தாபனம் 2013.09.09 ஆம், திக­தியே இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சின் தொலை­பேசி இலக்­கத்­துடன் காவற்­தூது அதி­காரி திரு­மதி லக்­மா­லி­யுடன் தொடர்பு கொண்டு ரமணி இறந்­தமை தொடர்­பா­கவும், இவ­ரது உடலை பிரேத பரி­சோ­தனை செய்து நாட்­டிற்கு கொண்டு வரு­வ­தற்­கான உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளு­மாறும் ரம­ணியின் குடும்­பத்­தினர் சார்­பாக வேண்­டுகோள் முன்­வைக்­கப்­பட்­டது.

அத்­தோடு சர்­வ­தேச ஊட­க­மான பி.பி.சி. தமிழ் ஓசை, இலங்­கை­யி­லுள்ள ரம­ணியின் குடும்­பத்­தி­ன­ரு­டனும், இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம், வெளி­வி­வ­கார அமைச்­சு­டனும் மற்றும் சவூ­தியில் உள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்­து­டனும் தொடர்­பு­களை மேற்­கொண்டு தகவல் சேக­ரித்து செய்தி வெளி­யிட்டது.

சவூ­தியில் உள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்­துடன் ரம­ணியின் குடும்ப உறுப்­பினர்கள் பல தட­வைகள் தொடர்பு­களை மேற் கொண்டபோது ரமணி வேலை செய்த எஜமான் (வீட்­டுரி­மை­யாளர்) தலை­ம­றை­வாகி உள்ளார் எனும் பதிலையே தொடர்ச்­சி­யாக கூறி வந்தார்.

இவ் ஊடகச் செய்­தியின் பின்னர் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்கை தூத­ர­கத்தின் அதி­காரி நியாஸ் தொடர்பு கொண்டு ரமணி வேலை செய்த வீட்டு எஜமான் தலை­ம­றை­வா­கி­யி­ருந்­த­தா­கவும் தற்போது சவூதி பொலிஸார் இவரை  கண்­டு­பி­டித்­துள்­ளார்கள். இவர் எதிர்­வரும் 22.03.2014 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜர் படுத்­து­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

அதை அடுத்து ஒரு வார காலப்­ப­கு­திக்குள் ரம­ணியின் பூத­வுடலை இலங்­கைக்கு அனுப்பி வைப்­ப­தாக சவூதி அரே­பியாவின் இலங்கை  தூத­ரக அதிகாரி குடும்­பத்­தின­ருக்கு தெரி­வித்­துள்ளார்.

17.03.2014 மனித அபி­வி­ருத்தி தாப­னத்­திற்கு ரம­ணியின் குடும்­பத்­தினர் வருகை தந்து மேற்­படி தக­வல்­களை தெரி­வித்­த­துடன் கடந்த எட்டு மாத காலப் பகு­திக்குள் பல தட­வைகள் மேற்­படி அதி­கா­ரி­க­ளுடன் தொடர்பு கொண்ட போது எவ்­வி­த­மான பொறுப்­பான பதி­லையும் கூறத்­த­வ­றிய அதி­கா­ரிகள் ஊடக செய்­தியின் பின்னர், பல தட­வைகள் தாங்­க­ளா­கவே தொடர்­பு­களை மேற்­கொள்­வ­தாக ரம­ணியின் குடும்­பத்­தினர் தெரி­வித்­தனர்.

இறு­தி­யாக மனித அபி­வி­ருத்தி தாபனம் மேற்­கொண்ட ஊட­கங்கள் வாயி­லாக செய்­தியை வெளி­யிடும் யுக்தி பய­ன­ளித்­துள்­ளது. இதனால் ரமணியின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடு விரைவாக்கப்பட்டுள்ளது.

2014.04.17 ஆம் திகதி கண­ப­திப்பிள்ளை ரம­ணியின் சடலம் இலங்­கைக்கு அனுப்­பப்­படும் தகவல் கொழும்புபண்டாரநாயக்க சர்­வ­தேச விமானநிலையத்தின்  கார்க்கோ பொதிகள் பிரிவு காரியாலயம்மூலம்  எமக்கு கிடைக்கப் பெற்­றது.

இத்­த­க­வலின் உண்மை நில­வ­ரத்­தினை அறிந்த பிறகு இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடாக நாம் பெற்ற தகவல் உறுதி செய்­யப்­பட்­டது.

2014.04.19 ஆம் திகதி காலை 10.00 மணி­ய­ளவில் கொழும்பு கட்டு நாயக்கவிமான நிலை­யத்தில் இருந்து ரம­ணியின் சடலத்தினை கணவன் கே.வேதானந்தம் பெற்றுக் கொண்டார். இதன்­ப­ல­னாக ரம­ணியின் சடலம் 10 மாதங்­களின் பின் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு நேற்றுமுன்தினம் நல்லடக்கம் செய்யபட்டடது.

Exit mobile version