உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் நாட்டின் Burj Khalifa என்ற கட்டிடத்தின் உச்சியில் இருந்து இரண்டு வீரர்கள் பாராசூட் உதவியுடன் குதித்து உலக சாதனை புரிந்துள்ளனர்.
துபாயில் உள்ள Burj Khalifa என்ற கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் 2717 அடி உயரம் கொண்டது.
இந்த கட்டிடத்தின் உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் கிழே குதித்து சாதனை செய்ய நேற்று Fred Fugen and Vince Reffet ஆகிய இரண்டு வீரர்கள் முன்வந்தனர். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்த பின்னர் இவர்கள் இருவரும் கின்னஸ் அதிகாரிகள் முன்பு கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து பத்திரமாக கீழே இறங்கி சாதனை புரிந்தனர்.
இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு 2,204 அடி உயர கட்டிடத்தில் இருந்து குதித்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய தோழருடன் இணைந்து கின்னஸ் சாதனை புரிந்தது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என்று Fred Fugen அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.