சலவை இயந்திரத்துக்குள் விழுந்த விளையாட்டுப் பொருளை எடுக்க முயற்சித்த 2 வயது சிறுவன் ஒருவன் அந்த இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஜியாங்ஸூ மாகாணத்தில் நன்ஜிங் நகரிலுள்ள தனது வீட்டில் விளையாடுவதில் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட சிறுவன் சலவை இயந்திரத்துக்குள் விழுந்த தனது விளையாட்டுப் பொருளை எடுக்க சலவை இயந்திரத்தின் மீது ஏறிய போது தவறி அந்த இயந்திரத்துக்குள் விழுந்துள்ளான்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு பணியாளர்கள் சலவை இயந்திரத்தை பகுதி பகுதியாக கழற்றி வேறு பிரித்து சிறுவனை எதுவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
30 வருட காலமாக உலோக ஆணிகளை உண்ணும் நபர்
சீனாவைச் சேர்ந்த நபரொருவர் 5 சென்ரி மீற்றருக்கும் அதிக நீளமுள்ள உலோக ஆணிகளை கடந்த 30 வருட காலமாக உண்டு வருகிறார்.
லோங் யுன்ஷிங் என்ற மேற்படி நபர் எதுவித உடல் நலப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் ஆரோக்கியமாக காணப்படுகிறார்.