Site icon ilakkiyainfo

வடக்கை ஆளும் தீவிரவாதிகளே தமிழ்தேசிய கூட்டமைப்பினர்: “முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்போம்” – ஞானசார தேரருடனான நேர்காணல்

இலங்­கையில் பெளத்த மதத்­திற்கு எப்­போதும் முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும். முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­புகள் நாட்டில் மதத்தைப் பரப்பும் செயற்­பா­டு­களை செய்து பெளத்த சிங்­கள மக்­களை மத மாற்றும் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­களை செய்தால் நாம் பொறுமை காக்­க­மாட்டோம். எமது சுய­ரூ­பத்­தினை வெளிப்­ப­டுத்த தயங்­கவும் மாட்டோம் என பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான சார­தேரர் தெரி­வித்தார்.

அவா வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். அவரின் செவ்வி வ­ரு­மாறு:–

கேள்வி: பொது­ப­ல­சேனா அமைப்­பினை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து பலரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்: நாம் பெளத்த சிங்­கள மக்­க­ளைப்­பா­து­காக்கும் உண்­மை­யான ஒரு அமைப்­பாகும். நாட்டில் இடம்­பெற்று வரு­கின்ற குற்­றச்­செ­யல்கள் மற்றும் பிரி­வி­னை­வாத கொள்­கை­களை தடுக்­கவே போரா­டு­கின்றோம். எனினும் அர­சாங்­கத்தில் இருக்கும் ஒரு சில தேசத்­து­ரோ­கி­களும் முஸ்லிம் தீவி­ர­வாதிகளுமே எமக்கு எதி­ராக தவ­றான கருத்­துக்­களை பரப்பி தடை செய்­யக்­கோ­ரு­கின்­றனர். எம்மை எவ­ராலும் தடை செய்ய முடி­யாது. பொது­பல சேனா அமைப்­புக்­கெ­தி­ராக யார் தடைச்­சட்டம் கொண்டு வரு­கின்­றார்கள் எம்மை யார் தடை செய்­கின்­றார்கள் என்­பதை நாங்­களும் பார்க்­கின்றோம்.

இரண்டு வரு­டங்­களில் நாம் மிகப்­பெரிய வளர்ச்­சி­யைக்­கண்­டுள்ளோம். அது குறிப்­பிட்ட சில­ருக்­குப்­ பி­டிக்­க­வில்லை. பெளத்த தர்­மத்­தையும் சிங்­கள பெளத்த மக்­க­ளையும் பாது­காக்­கவே நாம் அவ­தாரம் எடுத்­துள்ளோம். ஆகவே, பொது­ப­ல­சேனா பௌத்த இயக்­கத்தை எவ­ராலும் ஒரு போதும் தடை செய்ய முடி­யாது.

கேள்வி:அண்­மைக்­கா­ல­மாக உங்கள் அமைப்பின் செயற்­பா­டுகள் அதி­ர­டி­யா­ன­தாக அமைந்­துள்­ளதே?


பதில்:
நாம் எப்­போதும் அமை­தி­யா­கவும் பொறு­மை­யு­டனும் செயற்­படும் பௌத்த அமைப்பு. பௌத்த தேரர்கள் எப்­போதும் அமை­தி­யையும் பொறு­மை­யையும் கடைப்­பி­டிக்க வேண்டும். அதைத்தான் நாங்­களும் விரும்­பு­கிறோம். ஆனால் நாம் எதிர்­பார்ப்­பது நாட்டில் நிக­ழ­வில்ல

முஸ்லிம், கிறிஸ்­தவ மத­வா­திகள் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் அதே­வேளை சில முஸ்லிம் அமைச்­சர்­களும் மோச­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர். இவற்றை தட்­டிக்­கேட்கும் போது ஊட­கங்கள் எம்­மீது மித­மிஞ்­சிய வர்ணனையை காட்டி எம்மை அடா­வ­டித்­த­ன­மான இயக்­க­மாக மாற்றி விடுகின்றன.

குறிப்­பாக வில்­பத்து பிர­தேச பிரச்­சினை, மகி­யங்­கனை விகாரை பிரச்­சினை நிபோன் ஹோட்­டலில் இடம்­பெற்ற வாக்­கு­வாதம் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் அமைச்சில் இடம்­பெற்ற குழப்­பங்கள் என்­பன எம்மை பிர­பல்­யப்­ப­டுத்­தவோ அல்­லது ஊட­கங்­களில் பேசப்­ப­டவோ மேற்­கொண்­ட­வை­யல்ல. இவை அனைத்தும் பௌத்த சிங்­கள மக்­களை பாது­காத்துக் கொள்ள நாம் எடுத்த அவ­தா­ரங்­களே. இதனை அதி­ரடி செயற்­பா­டுகள் என்று குறிப்­பிட முடி­யாது.

 

எம்மை தீவி­ர­வா­தி­க­ளாக சிலர் சித்­தரிக்­கின்­றனர். ஆனால் நாம் ஆயுதம் ஏந்­தியோ அடா­வ­டித்­த­னத்தை கையில் எடுத்தோ ஒரு­போதும் போரா­ட­வில்லை. நாம் வார்த்­தை­களால் மட்­டுமே போரா­டு­கின்றோம். எனவே நாம் பௌத்த சிங்­கள தர்­மத்தை காக்க வந்த ஜன­நா­யக மக்கள் அமைப்­பாக உள்ளோம்.

 

அதேபோல் சில விட­யங்­களில் அமை­தி­யாக கூறினால் இவர்­க­ளுக்கு விளங்­கு­வ­தில்லை. எனவே அச்­சு­றுத்தி கூறுவதால் தான் இவர்கள் கேட்­கின்­றனர். எனவே சில சந்­தர்ப்­பங்­களில் அதையும் கையாள வேண்டி ஏற்­ப­டு­கின்­றது.

 

கேள்வி: முஸ்லிம் இனத்­த­வரை குறி வைத்து உங்­களின் செயற்­பா­டுகள் அமை­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றதே?

 

பதில்: நாம் எந்த இனத்­தை­யோ அல்­லது மதத்தையோ இலக்கு வைத்து செயற்­ப­ட­வில்லை. பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக யார் செயற்­ப­டு­கின்­ற­னரோ அவர்­களை தடுப்­பதே எமது இலக்கு. முஸ்லிம் சகோ­த­ரர்கள் மீது எமக்கு எவ்­வித விரோ­தமும் இல்லை.
ஆனால் இன்று இலங்­கையில் மிக மோச­மான முஸ்லிம் தீவி­ர­வா­த­மொன்று உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. சில முஸ்லிம் அமைப்­புக்கள் மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடு­களில் நிதியை வாங்கிக் கொண்டு அவர்­களின் மதத்­தீ­வி­ர­வா­தத்­தினை பரப்­பு­கின்­றன. இது வெறு­மனே எமது கருத்து மட்­டு­மல்ல அர­சாங்­கமும் இதை ஏற்றுக் கொண்­டுள்­ளது.

 

தௌஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் ஆகிய இயக்­கங்கள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்­தினை இலங்­கையில் பரப்­பு­கின்­றன. பள்­ளி­வா­சல்­க­ளிலும் அவர்­களின் ஏனைய வழி­பாட்டு தலங்­களில் மட்­டு­மன்றி பாட­சா­லை­க­ளிலும் கூட முஸ்லிம் சமூ­கத்­திற்கு தீவி­ர­வாத கொள்­கை­களை பரப்பி நாட்டின் அமை­தியை சீர்குலைக்க முனை­கின்­றனர். முஸ்லிம் அமைப்­புக்கள் மட்­டு­மல்ல பல கிறிஸ்­தவ அமைப்­புக்­களும் இத­னையே செய்து வரு­கின்­றன.

 

மேலைத்­தேய நாடு­களின் பணத்­திற்கு அடி­மை­யாகி இவ்­வா­றான இன­வா­தத்­தினை தேசத்­து­ரோக செயல்­களை நாட்டில் செய்து வரு­கின்­றனர். இத­னையே நாம் எதிர்க்­கின்றோம்.

 

முஸ்­லிம்கள், கிறிஸ்­த­வர்கள், இந்­துக்கள் தத்­த­மது மதங்­களை வழி­ப­டு­வது ஒரு தடையும் இல்லை. அந்த சுதந்­திரம் அவர்­க­ளுக்கு உண்டு. ஆனால் பௌத்த சிங்­கள மக்­களை மதம் மாற்றி மதம் பரப்பும் செயற்­பா­டு­களை செய்­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

கேள்வி: அர­சாங்­கத்தின் பலத்­துடன் உங்­களின் அமைப்பு செயற்­ப­டு­வ­தாக எதிர்க்­கட்­சிகள் குற்றம் சுமத்­து­கின்­றதே?

 பதில்: அர­சாங்கம் எமக்கு ஆத­ரவு வழங்க வேண்­டிய அவ­சியம் இல்லை. நாம் அர­சியல் நடத்­த­வில்லை. பின்பு நாம் ஏன் அர­சாங்­கத்தை நாடி நிற்க வேண்டும்.

எனினும் இக்­க­ருத்­தினை பலர் குறிப்­பி­டு­வது நாமும் அறிவோம். நாம் அர­சாங்­கத்தின் கூட்டு அமைப்பு என்­பது தெரிந்­தி­ருந்தால் அதை நிரூ­பித்துக் காட்டட்டும். ஆதா­ரங்­களை முன்­வைத்தால் பின்னர் நாம் பதில் சொல்­கின்றோம். தேரர்­க­ளுக்­கென நாட்டில் தனி கௌரவம் உள்­ளது.
அதனை இழக்க நாம் ஒரு­போதும் விரும்­பு­வ­தில்லை. ஆகவே பொது­ப­ல­சேனா அமைப்­பினை மக்கள் எப்­போ­துமே பௌத்த அமைப்­பா­கவே நோக்க வேண்டும். அர­சியல் கட்­சி­யா­கவோ அல்லது அமைப்­பா­கவோ நோக்கக்கூடாது.

கேள்வி: மத விட­யங்கள் தொடர் பில் விவாதம் நடத்த முஸ்லிம் மதத்­த­லை­வர்­களை அழைக்­கி­றீர்­களே கார ணம் என்ன?

பதில்: நாம் எந்­த­வொரு மதத்­தையும் இன்­று­வ­ரையில் விமர்­சிக்­கவோ தூற்­றவோ இல்லை. எனினும் தௌஹீத் ஜமாஅத் அமைப்­பினர் பௌத்த சாச­னத்­தையும் எமது பாரம்­ப­ரிய வர­லாற்­றையும் மட்­டு­மன்றி பௌத்த பெண்­க­ளையும் மிக இழி­வாக பேசி­யுள்­ளனர்.

இவை தொடர்­பி­லான காணொ­ளி­களை நாம் வைத்­துள்ளோம். பௌத்த சாசனமா திருக்­குர்­ ஆனா என்­பது தொடர்பில் விவா­திக்க நாம் எப்­போ­துமே தயா­ராக உள்ளோம். தைரியம் இருப்பின் உல­மாக்கள் எம்­முடன் விவா­தத்­திற்கு வர­வேண்டும்.
ஆனால் அசாத் சாலி போன்­ற­வர்­க­ளுக்கு பதில் சொல்­லவோ அவர்­க­ளுடன் விவாதம் நடத்­தவோ நாம் விரும்­ப­வில்லை. அவ­ரைப்போல் அர்த்­த­மற்ற பேச்­சினை பேசு­வோ­ரிடம் விவாதம் நடத்தி காலத்தை வீண­டிக்க நான் விரும்­ப­வில்லை. எமது அமைப்பில் சிறு­வர்கள் பலர் உள்­ளனர். அவர்­களை விவா­தத்­திற்கு அனுப்­பு­கின்றோம். அவர்­களும் முஸ்லிம் மத விட­யங்கள் குர்ஆன் பற்­றிய தெளி­வு­ட­னேயே உள்­ளனர்.

பௌத்­த­மென்­பது இலங்­கைக்­கான புனித மதம். இதைப்­பற்றி விமர்­சிக்கும் உரி­மைகள் எவ­ருக்கும் இல்லை. ஆனால் முஸ்லிம் அமைப்­புகள் இத­னையே செய்து வரு­கின்­றன. ஆக­வேதான் நாங்கள் சொல்­கின்றோம் பௌத்தம் பற்றி விவா­திக்க நாம் தயார். முஸ்­லிம்­களின் குர்­ஆனா அல்­லது பௌத்த சாசனமா என்­பதை விவா­திக்­கலாம்.

கேள்வி: இலங்­கையில் பெளத்தம் தவிர்ந்த ஏனைய மதங்­க­ளுக்கு உரி­மை­யில்லை என்­பதா உங்­களின் கருத்து?

 பதில்: இலங்கை ஒரு சிங்­கள பெளத்த நாடு. இங்கு அனைத்து விட­யங்­களும் பெளத்த தன்­மை­களின் கீழேயே செயற்­பட வேண்டும். இது அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்­மை­யாகும். இதனை ஏனையோர் ஏற்­றுக்­கொள்­வ­தனால் எந்­த­வொரு சிக்­கலும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. ஏனெனில் பெளத்த நாடாக இலங்கை இருந்தும் ஏனைய மதங்­க­ளுக்­கான உரி­மை­களும் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் பெளத்த கொள்­கையை சீர­ழிக்கும் வகையில் வேறு மதத்­தவர் செயற்­ப­டக்­கூ­டாது என்­பதே எமது விவாதம். பெளத்த சிங்­கள மக்­க­ளுக்கு உயர் உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் இந்த நாட்டில் வழங்­க வேண்டும். சகல இடங்­க­ளுக்கும் சென்று வரக்­கூ­டிய உரிமை இருக்க வேண்டும். ஆனால் இன்று இலங்­கையில் அவை இல்லை.

 

கிழக்­கிலோ அல்­லது கண்­டியை அண்­மித்த முஸ்லிம் பகு­தி­க­ளிலோ பெளத்­தர்கள் வாழவே முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. சிங்­கள பெளத்த நாடா என்­பதில் பெரி­ய­தொரு சந்­தேகம் நில­வு­கின்­றது. மத்­திய கிழக்­கினை எடுத்­துக்­கொண்டால் அங்கு அனைத்து நாடு­களும் முஸ்லிம் சட்­டத்தின் படியே ஆட்சி நடத்­து­கின்­றன.அங்கு முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமே முழு உரி­மையும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மிகக் கொடூ­ர­மான தண்­ட­னைகள் உள்­ளன..மேலைத்­தே­யத்­திலும் அவ்­வாறே. அங்கு கிறிஸ்­தவ சட்டம் மட்­டுமே உள்­ளது. இலங்கை பெளத்த நாடு. ஆனால் இங்கு மட்டும் வடக்கில் ஒரு நியதி கிழக்கில் ஒரு நியதி. ஏனைய பகு­தி­க­ளுக்கு பிறி­தொரு நிய­தி­யென நாடே சீர­ழி­கின்­றது. இதனை தவிர்த்து பெளத்த சட்­டத்தின் கீழ் முழு நாடும் இயங்க வேண்டும் என்­ப­தையே நாம் வலி­யு­றுத்­து­கின்றோம்.

கேள்வி: கசினோ சூதாட்ட சட்­ட­மூலம் அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் பொது­பல சேனாவின் நிலைப்­பாடு என்ன?

 பதில்: இலங்­கையில் பெளத்த தர்­மத்­தினை சீர­ழிக்கும் எந்­த­வொரு செயற்­பாட்­டி­னையும் செய்ய அனு­ம­திக்க மாட்டோம் என்­பது ஆரம்பம் முதற்­கொண்டே நாம் குறிப்­பிட்டு வரு­கின்றோம்.

இப்­போதும் எமது நிலைப்­பாடு மாற­வில்லை. சூதாட்டம், விப­சாரம் போதைப்­பொருள் பரவும் எந்­த­வொரு நட­வ­டிக்­கைக்கும் பொது­ப­ல­சேனா அமைப்பு ஆத­ரவு தெரி­விக்­காது. அவ்­வா­றா­ன­தொரு சட்ட மூலம் கொண்டு வர விடப்­போ­வ­து­மில்லை. அர­சி­யலில் தலை­யிட நாம் ஒரு போதும் விரும்­ப­வில்லை.

 

ஆனால் நாட்­டிற்கும் பெளத்த சிங்­கள மக்­க­ளுக்கும் எதி­ராக ஏதேனும் சீர்­கே­டுகள் ஏற்­ப­டு­மாயின் அதை அனு­ம­திக்­க­மாட்டோம். கடந்த காலங்­க­ளிலும் கசினோ சூதாட்ட சட்ட மூலத்­தினை எதிர்த்து நாம் பல எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம்.

 அதேபோல் போதைப்­பொருள் பரவும் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் பலரின் முகத்­தி­ரை­யினை கிழித்தோம். இப்­போதும் அவ்­வாறே செயற்­ப­டுவோம். பெளத்த புனிதத் தன்­மை­யினை சீர­ழிக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­ப­டு­மாயின் அதற்கு முழு எதிர்ப்­பி­னையும் நாம் தெரி­விப்போம்.

ஆனால் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நாட்­டிற்கும் மக்­க­ளுக்கும் தீங்கு ஏற்­படும் செயற்­பா­டு­களை செய்ய மாட்டார் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.

கேள்வி: அதி­காரப் பகிர்வு தொடர் பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­து­கின்­றது. இது தொடர்பில் உங்­களின் கருத்து என்ன ?

பதில்:
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது ஓர் பிரி­வினை வாதக்­கட்சி. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கருத்­துக்கள் அனைத்தும் தமிழ் மக்­களின் கருத்­துக்கள் ஆகி­வி­டாது. வடக்கில் விடு­த­லைப்­பு­லிகள் அழிக்­கப்­பட்ட பின் வடக்கை ஆளும் தீவி­ர­வா­தி­களே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர். இவர்கள் கேட்கும் அதி­காரப் பகிர்வு தீர்வை நோக்­கி­ய­தல்ல. அது பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வதாகும். வடக்கில் இன்று தேவைப்­ப­டு­வது அதி­காரப் பகிர்­வல்ல இரு மொழி பகிர்வு மட்­டுமே. தமி­ழர்கள் சிங்­க­ளத்தில் தமது காரி­யங்­களை செய்ய முடி­யாது.
சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமிழை கையாள முடி­யாது. ஆகவே இரு மொழிப்­ப­கிர்வு தீர்­வொன்­றினை கொண்டு வந்து அரச கரும செயற்­பா­டு­களை இரு மொழி­க­ளிலும் மேற்­கொண்டால் பிரச்­சி­னை­க­ளுக்கு இலகுவில் தீர்வு காண முடியும். அதை­வி­டுத்து இல­குவில் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னையை ஜெனிவா வரையில் கொண்டு செல்­வது காலத்தை வீண­டிக்கும் செயற்பாடாகும். தமிழ் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர விரோதத்தை ஏற்படுத்தக் கூடாது.

கேள்வி: உங்களின் வருங்கால வேலைத்திட்டங்கள் எவ்வாறானவை

?

பதில்: பொதுபலசேனா எப்போதும் உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் போராடும் அமைப்பு. நாம் மக்களின் நலனுக்காக மட்டுமே போராடுகின்றோம் எம்மை மோசமான அமைப்பாக பலர் தற்போது சித்தரித்து விட்டனர். எங்களின் கடந்த கால வரலாறு அனைவ ருக்கும் தெரிந்ததே.

மக்களுக்காக பல செயற்பாடுகளை செய்துள்ளதோடு பல பிரச்சினைகளுக்கு தீர்வினையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். இனிமேலும் அவை தொடரும்.

மேலும் நாட்டின் வளங்களை பாதுகாக்கவும் இயற்கையை பாதுகாக்கவும் மூவின மக்களை பாதுகாக்கவும் நாம் முன்வருவோம். அது மட்டுமன்றி நாட்டில் பரவி வரும் போதைப்பொருள், கறுப்புப் பணம் என்பவற்றை தடுக்கவும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய அனைவரையும் கட்டுப் படுத்தவும் நாம் துணை நிற்போம்.

குறிப்பாக பெளத்த மதத்தவரை கட்டாய மதமாற்றம் செய்யும் முஸ்லிம் மதவாத அமைப்புகளை ஒழித்து முஸ்லிம் தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பதே எமது பிரதான நோக்கமாகும்.

 

Exit mobile version