Site icon ilakkiyainfo

பணத்திற்காக பிணத்திற்கு செயற்கை சுவாசம்; ஆறு நாட்கள நடத்திய நாடகம் ​வெளிச்சத்திற்கு வந்தது

பணம் சம்பாதிப்பதற்காக இறந்த பெண்ணின் உடலை ஒரு வாரம் செயற்கை சுவாசத்தில் வைத்திருந்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த பெப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து,  ஷாஜாஹானாபாத் பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

போபா​லினை சேர்ந்த 52 வயது சுஷ்மா என்பவருக்கு கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகிலுள்ள  தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் அவருக்கு பொருத்தியிருந்த செயற்கை சுவாச கருவியைக் அகற்றாமல் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தார்.
இவரை காண உறவினர்களும் அனுமதிக்கப்படவில்லை.  சந்தேகம் எழுந்ததை அடுத்து சுஷ்மாவின் கணவர் தனது சட்டத்தரணி மூலம் உண்மையை கண்டறிந்துள்ளார்.

குறித்த சட்டத்தரணியால் அழைத்து வரப்பட்ட வைத்தியர்கள் சுஷ்மா உயிரிழந்து 6 நாட்கள் கடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Exit mobile version