தென்கொரியாவில் 479 பேர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியனார்கள். இந்த சோக சம்பத்தில் நூற்றுக்கும் அதிகமான பள்ளிக்குழந்தைகளும் அடங்குவர்.
இந்நிலையில் மீட்புக்குழுவினர் நேற்று கப்பலில் இருந்து ஒரு செல்போனை கைப்பற்றியுள்ளனர். அதில் நெஞ்சை அதிரவைக்கும் வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.
கப்பல் மூழ்க்ம் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அது. பள்ளிக்குழந்தைகளால் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பள்ளிக்குழந்தைகள் தங்களுடைய கடைசி பேச்சுக்களை பதிவு செய்துள்ளனர்.
“நான் உண்மையிலேயே சாகப்போகிறேனா? என்று ஒரு மாணவன் பயத்துடன் கேட்கிறான். இது இன்னொரு டைட்டானிக் என்று இன்னொரு மாணவன் கூறுகிறான்.
கப்பல் கேப்டன் என்ன செய்கிறார்? என்று ஒரு மாணவி ஆவேசத்துடன் கேட்கிறார்? மம்மி அண்ட் டாடி குட் பை என்று ஒரு மாணவி நடுங்கிக்கொண்டே கூறுகிறார். ஒரு மாணவி நடுக்கத்துடன் நாம் எல்லோரும் சாகப்போகிறோம் என்கிறார். நம்மை காப்பாற்ற யாருமே இல்லையா? என்று இன்னொருவர்கூறுகிறார்.
இந்த வீடியோவை எடுத்த 17 வயது பள்ளி மாணவன் Park Su-hyeon கூறும்போது, இந்த வீடியோ எங்கள் நினைவாக எங்கள் பெற்றோர்களுக்கு இருக்கட்டும் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கின்றார். இந்தவீடியோவை பார்த்த பெற்றோர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது.
கடைசி நேரத்தில் பதிவான பள்ளி மாணவர்களின் குரல்கள்:
I’m really scared,” a student says at one point.
“Is it really sinking?” another asks. “Wow, they’re giving us life vests.”
“I’m getting out of here,” one says. “Me too, me too,” says another.
A student says: “We have to survive now.”
“We’re all finished. I have to leave some farewell words before I die,” says another.
“Mom, I love you,” says one.