Site icon ilakkiyainfo

மனை­வியின் கையை வெட்டி பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்த கணவர்

மனை­வியின் கர­மொன்றை வெட்டி பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்த கணவர் ஒருவர் தொடர்பில் குரு­நாகல்  பிர­தே­சத்தில்  பதி­வா­கி­யுள்­ளது. மனை­வியின் கரத்தை வெட்டி அதனை பை ஒன்றில் இட்டு குரு­நாகல் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குரு­நாகல் பமு­னு­கெ­தர பிர­தே­சத்தை சேர்ந்த 29 வய­தான நபர் ஒரு­வரே இவ்­வாறு மனை­வியின் கரத்தை வெட்டி ஒப்­ப­டைத்­துள்ளார்.

கள்­ளத்­தொ­டர்பு கார­ண­மாக இவ்­வாறு கரத்தை வெட்­டி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நீண்ட கால­மாக கண­வ­ருக்கும் மனை­விக்கும் இடையில் முரண்­பாடு காணப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்ற மனை­வியை அன்­பாக பேசி அழைத்து வந்து காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து கரத்தை துண்­டாக வெட்டி பை ஒன்றில் இட்டு பொலி­ஸா­ரிடம் கணவர் ஒப்­ப­டைத்­துள்ளார்.

வெட்­டப்­பட்ட கரத்­துடன் வெட்­டுண்ட பெண்­ணையும் பொலிஸார் உட­ன­டி­யாக குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள் ளனர்.

Exit mobile version