ilakkiyainfo

காதல் வலையில் வீழ்நத கொள்ளையர்கள் !!

தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் அண்­மைக்­கா­ல­மாக தொடரும் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த கொள்­ளை­யர்­களின் தொடர் கொள்­ளைகள் முழு நாட்­டையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

கடந்த 4 மாதங்­க­ளுக்குள் முகத்தை முழு­மை­யாக மறைத்து 16 வங்கிகள் மற்றும் நிதி நிறு­வ­னங்கள் கொள்­ளை­யர்­களின் கைவ­ரி­சைக்கு இலக்காகி இருந்­தன.

இதில் பாதுக்கை, நீர்­கொ­ழும்பு, மத்­து­கம ஆகிய இடங்­களில் பதி­வான கொள்­ளைகள் தொடர்பில் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்டு அவர்களுக்கு எதி ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்ளன.

மேலும் நிலையில் ஏனைய சம்ப­வங்கள் குறித்து விசா­ர­ணைகள் தொடர்ந்­தன. இந்நிலையிலேயே, மலபே, கொஹு­வளை, மொறட்­டுவை ஆகிய பகு­தி­களில் உள்ள   தனியார் வங்­கி­களில் கொள்­ளை­யிட்­டமை….

  மற்றும் கிரு­லப்­பனை வங்­கியில் கொள்­ளை­யிட   முற்­பட்­டமை ஆகிய பல குற்றச் சாட்­டுக்­க­ளுடன் தொடர்­பு­டைய  பிர­தான  இரு சந்­தேக நபர்­களும் அவர்­க­ளுக்கு  தங்­கு­மிடம் மற்றும்  பாது­காப்பு அளித்த கண்டி சிவில் பாது­காப்பு படை­ய­ணியின் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர்.

இந்த கைது நட­வ­டிக்­கை­யா­னது கொஹு­வளை பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் சமிந்த எதி­ரி­சூ­ரிய, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி  சும­தி­பால ஆகி­யோரின் கீழ் கடந்த திங்­க­ளன்று கண்­டிக்கு சென்ற விசேட பொலிஸ் குழு­வி­னரால் மேற்கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

மேல் மாகா­ணத்­துக்கும் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, மேல் மாகா­ணத்தின் தெற்­குக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்க ஆகி­யோரின் மேற்­பார்­வையின் கீழ் கல்­கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­ய­ட்சகர் ரவீந்­திர கர­விட்­டவின் ஆலோ­ச­னையின் படி உதவிப் பொலிஸ் அத்­தி­யட்கர் டப்­ளியூ.வீ.கினி­கே­னவின் கட்டுப்­பாட்டின் கீழ் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

உண்­மையில் கொஹு­வளை பொலி­ஸா­ரினால் கடந்த பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி இடம்­பெற்ற கொஹு­வளை நேஷன் ட்ரஸ்ட் வங்கி தொடர்­பி­லான விசா­ர­ணை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதன் போது கல்­கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டைய பிலி­யந்­தல ஜகத் அல்­லது மஞ்சு என்று பெயர்­களில் அறி­யப்­படும் ஜகத் ரசத் பெரேரா என்ற 38 வயது நபர் மீது பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது.

உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் டப்­ளியூ.வீ.கினி­கே­னவின் கீழ் கொஹு­வளை வங்கிக் கொள்ளை தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்ந்த நிலை­யி­லேயே இந்த சந்­தேகம் பொலி­ஸா­ருக்கு ஏற்­ப­டு­கின் ­றது.

ஏனெனில் அதற்கும் காரணம் இல்­லா­ம­லில்லை. பாட­சாலை காலம் முதலே கொள்­ளை­களில் ஈடு­பட்­டுள்ள ஜகத் சிறை­வா­சம் அனுபவித்தவனும் கூட.

அத்­துடன் கல்­கிஸ்ஸை பொலிஸ் பிராந்­தி­யத்தில் பிர­தான போதைப் பொருள் பாவ­னை­யாளர் என்­ப­தையும் பொலிஸார் அறிந்­தி­ருந்­தனர். இதனால் பொலி­ஸாரின் கவனம் அடிக்­கடி ஜகத் மீது பாய்ந்­தது.

எனினும் கொஹு­வளை வங்­கிக்­கொள்­ளையின் பின்னர் ஜகத்தை பொலி­ஸாரால் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை. அவ­னது தொலை­பேசி இலக்கங்கள் செய­லி­ழந்து இருந்­த­துடன் அவன் பிர­தே­சத்தை விட்டு தப்பிச் சென்று தலை­ம­றை­வா­கி­யி­ருந்­ததால் அவனை தொடர்பு கொள்வதும் சாத்­திய மற்­ற­தா­னது.

showImageInStoryஇதன் தொட­ரி­லேயே சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ரவீந்­திர கர­விட்ட உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் டப்­ளியூ.வீ.கினி­கே­னவின் ஆலோசனை­களின் பேரில் விசா­ரணைகள் கொஹு­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி ஆகியோரினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஜகத் போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­னவன் என்­பதால் அவன் போதைப் பொருள் கொள்­வ­னவு செய்யும் இடங்­களை தேடி பொலி­ஸாரின் நடவடிக்கை தொடர்ந்­தது.

எனினும் அவன் பல இடங்­களில் போதைப் பொருளை கொள்­வ­னவு செய்­தி­ருந்­ததால், அவ­னது தொடர்­புகள் குறித்து அவர்கள் அறிந்­தி­ரா­ததால் ஜகத்தை நெருங்­கு­வது பொலி­ஸா­ரினால் சாத்­தி­ய­மற்றுப் போனது.

எனினும் பொலிஸார் தள­ர­வில்லை. தொடர்ந்த முயற்­சி­களில் ஜகத்தை நெருங்­கிய நபர் என்ற வகையில் நபர் ஒரு­வரின் தொலை­பேசி இலக்கம் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளது.

பொலி­ஸா­ருக்கு கிடைத்த அந்த தொலை­பேசி இலக்கம் இரு இலக்­கங்­க­ளுடன் அதி­க­மான அழைப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையை பொலிஸார் தொலை தொடர்பு நிறு­வன தர­வுகள் ஊடாக அவ­தா­னித்­தனர்.

இதனை அடுத்தே பொலிஸார் தமது தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தனர். கொஹு­வளை பொலிஸ் நிலை­யத்தின் பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை தமது நட­வ­டிக்கை குழுவில் இணைத்துக் கொண்­டனர்.

அந்த பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் அனா­மதேய அழைப்பை போன்று குறித்த இலக்­கத்­துக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்தி சமிந்த பெரேரா என்ற நப­ருடன் காதல் வயப்­பட்டார்.

எனினும் இது ஒரு நாடகம் என அறிந்­தி­ராத சமிந்த பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருடன் தினம் தினம் தொலை­பே­சியில் காதல் வார்த்­தை­களைப் பரி­மாறி காதல் உல­கத்தில் மிதக்­க­லானார்.

இந் நிலையில் தான் காத­லியை சந்­திக்கும் யோசனை சமிந்­த­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்­துக்­காக காத்­தி­ருந்தபொலிஸார் தமது திட்­டப்­படி கண்டி பஸ் நிலை­யத்­துக்கு வரு­மாறு சமிந்­தவை அவர் காத­லி­யாக நினைத்துக் கொன்­டுள்ள பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஊடாக அழைத்­தனர்.

தொடர்ந்து குறித்த பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரையும் அழைத்துக் கொண்டு கொஹு­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எதி­ரி­சூ­ரிய, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சும­தி­பால உள்­ளிட்ட குழு­வினர் கண்­டிக்கு பய­ண­மா­கினர்.

எதிர்­பார்த்­தது போலவே நபர் ஒருவர் மேல­திக தலைக்­க­வசம் ஒன்­றுடன் குறிப்­பிட்ட நேரத்­துக்குள் கண்டி நகரை வந்­த­டைய பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை வைத்து அது­வரை அரங்­கேற்­றப்­பட்ட நாடகம் முடி­வுக்கு வந்­தது. காத­லியை காணும் ஆவலில் வந்த நபரை சிவிலில் இருந்த பொலிஸார் கைது செய்­தனர்.

சமிந்த பெரேரா, கண்டி- மெனிக்­கின்ன பகு­தியை சேர்ந்­தவர். கண்டி சிவில் பாது­காப்பு பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்­று­பவர் என்பதை அதன் போதே பொலிஸார் தெரிந்­து­கொண்­டனர்.

இதனை அடுத்து அவரை விசார­ணைக்கு உட்­ப­டுத்­திய பொலிஸார் ஜகத் மெனிக்­கின்­னவில் உள்ள சமிந்­தவின் வீட்­டி­லேயே உள்­ளமை தெரியவந்­தது.

அத்­துடன் தனது காத­லியை கூட்டிச் செல்ல வந்த -போது கொண்­டு­வந்த மேல­திக தலைக்­க­வசம் கிரு­லப்­பனை கொள்ளை முயற்­சியின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட தலைக்­க­வ­சத்தை ஒத்­தி­ருந்­த­மை­யையும் பொலிஸார் அவ­தா­னித்­தனர்.

உட­ன­டி­யாக செயலில் இறங்­கிய பொலிஸார் மெனின்கினவில் உள்ள சமிந்த பெரே­ராவின் வீட்­டுக்கு சென்­றதுடன் அங்கு மறைந்திருந்த ஜகத்தையும் மற்­றொரு நப­ரையும் கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட மற்­றைய நபர் கல்­க­முவை பகு­தியை சேர்ந்த வசந்த பெரேரா எனும் 35 வய­து­டைய நப­ராவார். ஜகத்­துக்கும் வசந்­த­வுக்கும் வசந்­தவின் சகோ­தரர் முறை­யாகும் சிவில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான சமிந்த பெரேரா பாது­காப்பு அளித்­துள்­ள­மையும் பொலி­ஸாரின் நடவ­டிக்கை மூலம் தெரி­ய­வந்­தது.

இதனை அடுத்தே கொழும்­புக்கு சந்­தேக நபர்­களை அழைத்து வந்த பொலிஸார் பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி கொஹு­வ­ளையில் நேஷன்ட்ரஸ்ட் வங்­கியில் 15 இலட்சம் ரூபாவை கொள்­ளை­யிட்­ட­வர்கள் இவர்கள் என­பதை தெரிந்­து­கொண்­டனர்.

அதனை தொடர்ந்து மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்­பெற்ற மாலபே நேஷன் ட்ரஸ்ட் வங்­கியில் 14 இலட்­சத்து 85 ஆயிரம் ரூபா வரை­யி­லான கொள்ளை, கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி இடம்­பெற்ற மொறட்­டுவை ராவ­த்தா­வத்தை சீ.டீ.பீ.தனியார் வங்­கியில் 7 இலட்­சத்து 77 ஆயிரம் ரூபா கொள்ளை ஆகி­ய­வற்­று­டனும் அதே தினம் முயற்­சிக்­கப்­பட்ட கிரு­லப்­பனைசெலான் வங்கிக் கொள்­ளை­யு­டனும்  ஜகத்தும் வஸந்­தவும் நேரடி தொடர்­பு­டை­ய­வர்கள் என்­பதை கண்டறிந்தனர்.

எவ்­வா­றா­யினும் கொஹு­வளை வங்­கிக்­கொள்ளை தவிர்ந்த ஏனைய வங்­கிக்­கொள்­ளை­க­ளு­ட­னேயே ஜகத்­துடன் வசந்த இணைந்து செயற்பட்­டுள்­ளமை மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

பிலி­யந்­த­லையில் உள்ள ஓய்வு விடு­தி­யொன்றில் வைத்தே ஜகத்தும் வசந்­தவும் அறி­மு­க­மா­கி­யுள்­ளனர். அந்த ஓய்வு விடு­தியில் அருகே கடை ஒன்றை நடத்தி வந்த வசந்த அதன் பின்­னரேயே ஜகத்­துடன் இணைந்து கொள்­ளை­களில் ஈடு­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரியவந்துள்ளது.

போதைப் பொரு­ளுக்கு   அடி­மை­யான ஜகத் ஒரு நாளைக்கு போதைப் பொருள் பாவ­னைக்­காக 20 ஆயிரம் ரூபாவை செல­வி­டு­வ­தாக குறிப்­பிடும் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் டப்­ளியூ.வீ.கினி­கேன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்ள பணத்­தொ­கையின் பெரும் பாலான பகுதி அதற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டு­கின்றார்.

அத்­துடன் குறித்த வங்கிக் கொள்­ளை­க­ளுக்கு மேல­தி­க­மாக 18 கொள்ளைச் சம்­ப­வங்­க­ளுடன் ஜகத் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு தொடர்­பி­ருப்­ப­தாக விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் இந்தக் கொள்­ளை­களின் பிர­தான சந்­தேக நபர் ஜகத் ஆக இருப்­பினும் கொள்­ளைகள் பல வற்றுடன் பலர் இணைந்து செயற்பட்டுள்ளதால் அவர்கள் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவர்­களை தேடியும் பொலிஸார் வலை விரித்­துள்­ளனர்.

மூன்று வங்­கி­களில் மட்டும் சுமார் 35 இலட்சம் ரூபா கொள்­ளை­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அவற்றைப் பயன்­ப­டுத்தி கொள்­வ­னவு செய்­யப்பட்டமோட்டார் சைக்­கிள்கள் மூன்று, கார் ஒன்­றையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

மாலபே கொள்­ளையில் 3 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா­வுக்கு மோட்டார் சைக்­கிள்­களை கொள்­வ­னவு செய்­துள்­ள­தாக குறிப்­பிடும் பொலிஸார் இறு­தி­யாக மொறட்­டுவை கொள்­ளையின் பின்னர் ஐந்து இலட்சம் ரூபா­வுக்கு சந்­தேக நபர்கள் கார் ஒன்­றையும் கொள்­வ­னவு செய்­துள்­ளனர்.

NW MF-7090,WP UX 9575,CP MT- 9535 ஆகிய இலக்­கங்­களை உடைய ஹொண்டா டிஸ்­கவர் ரக மோட்டார் சைக்­கிள்­க­ளையும் போர்ட் ரக காரான 14 – 2627 என்ற காரை­யுமே பொலிஸார் இவ்­வாறு கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இதனை விட கொள்­ளை­களின் போது பயன்­ப­டுத்­திய வெளி நாட்டு தயா­ரிப்பு கைத் துப்­பாக்கி, உள் நாட்டு தயா­ரிப்பு துப்­பாக்கி, முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் கவசம், ஜாக்கட்­டுக்கள் இரண்டு, எஸ்.ரீ.ரக தோட்­டாக்கள், ஏனைய தோட்­டாக்கள் 4 , விஷேட தயா­ரிப்பு கத்தி, பணத்தை கொண்டு செல்ல பயன்­ப­டுத்­தப்­பட்ட பை போன்றவற்­றையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இத­னி­டையே காரின் உரி­மை­யா­ள­ரி­ட­மி­ருந்து காரு க்கு செலுத்­தப்­பட்ட 5 இலட்சம் தொகையில் நான்கு இலட் சம் ரூபா­வினை பொலிஸார் மீளப் பெற்­றுள்­ளனர். அத்­துடன் கொஹு­வளை வங்­கியில் கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்தில் ஒரு இலட்­சத்து 24 ஆயிரம் ரூபா பணத்­தி­னை யும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

எதிர்வரும் 5 ஆம் திகதி திங்­க­ளன்று சந்­தேக நபர்­க­ளையும் வழக்குப் பொருட்­க­ளையும் நீதி­மன்றில் ஆஜர் படுத்த தயா­ராகும் பொலிஸார் 7 நாள் தடுப்புக் காவலில் பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

எவ்வித திட்டமிடலும் இன்றி பாதுகாப்பு குறைந்த , ஆள் நடமாட்டம் குறைந்த வங்கிகளிலேயே இவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தமது கைவரிசையை காட்டி வந்துள் ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

‘பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான்’ என்ற பழ மொழிக்கு அமைய பல நாட்கள் தொடர்ந்த ஜகத் தலைமையினானோரின் கொள்ளைகொஹுவளை பொலிஸாரின் சாதுரியமான நடவடிக்கையால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Exit mobile version