Site icon ilakkiyainfo

காதலியை கொன்று கிணற்றில் போட்ட சிவில் பாதுகாப்பு படை வீரர் (crime story)

”விஸ்­வ­மடு சிவில் பாது­காப்புப் படை­மு­கா­மிற்கு முன்­னா­லுள்ள பாழ­டைந்த காணியில் இரத்தம் சிந்­தி­யுள்­ளது. ஏதோ அசம்­பா­வி­த­மொன்று இடம்­பெற்­றுள்­ளது” இவ்­வாறு கடந்த 13 ஆம் திகதி, அப்­ப­டி­யென்றால் சரி­யாக சித்­திரை புத்­தாண்­டிற்கு முதல் நாள் காலை கிளி­நொச்சி பொலிஸ் நிலை­யத்­திற்கு தக­வ­லொன்று கிடைத்­துள்­ளது.

இந்த தக­வ­லை­ய­டுத்து துரி­த­மாக செயற்­பட்ட பொலிஸ் குழு­வொன்று உட­ன­டி­யாக சம்­பவ இடத்தை நோக்கி விரைந்­தது. அப்­போது அவ்­வி­டத்தில் பொது­மக்கள் கூடி­யி­ருந்­தனர்.

எனவே, பொலிஸார் தமது வாக­னத்தை நிறுத்­தி­விட்டு சனக்­கூட்­டத்தை ஊட­றுத்துச் சென்று பார்த்­த­போது அவ்­வி­டத்தில் அதி­க­மாக இரத்தம் சிந்தி காணப்­பட்­ட­துடன், சுடி­தா­ருக்கு அணியும் துப்­பட்­டா­வொன்றும் காணப்­பட்­டுள்­ளது.

யாரா­வது ஒரு பெண்­ணுக்கு அசம்­பா­வி­த­மொன்று இடம்­பெற்­றி­ருக்­கலாம் என்று ஊகித்துக் கொண்ட பொலிஸார், அவ்­வி­டத்­தி­லி­ருந்து ஒரு­வரை அல்­லது ஏதோ­வொன்றை இழுத்துச் சென்­றுள்ள அடை­யா­ளத்­தையும் அவ்­வ­ழி­யி­னூ­டாக சிந்­திக்­கி­டந்த இரத்­தத்­தையும் அவ­தா­னித்­தனர். எனவே அவ்­வ­ழி­யி­னூ­டாகத் தமது பார்­வையை விரித்துச் சென்­றனர்.

இவ்­வாறு அவ்­வ­ழி­யி­னூ­டாக முன்­னோக்கிச் சென்ற பொலிஸார், பெரிய கிணறு ஒன்று இருப்­பதை கண்­டனர். அவர்கள் அத­ன­ருகே சென்று பார்த்­த­போது அவ்­வி­டத்­திலும் குறிப்­பாக கிணற்று மதி­லிலும் இரத்தக் கறைகள் காணப்­பட்­டுள்­ளன.

ஏற்­க­னவே இக்­கி­ணற்­றிற்கு சற்­றுத்­தொ­லைவில் அதிக இரத்தம் சிந்தி காணப்­பட்­ட­துடன் அவ்­வி­டத்­திலும் துப்­பட்­டா­வொன்று காணப்­பட்­டது. ஆகையால், பெண்­ணொ­ரு­வரை இழுத்­து­வந்து இக்­கி­ணற்றில் போட்­டி­ருக்­கலாம் என்று பொலிஸார் சந்­தே­கித்­தனர்.

கிணற்­றிற்கு சற்றுத் தொலை­வி­லி­ருந்த தக­ரக் ­கொட்­டி­லொன்­றையும் பொலிஸார் சோத­னை­யிட்­டனர். அப்­போது அதற்குள் சுடி­தா­ரொன்று, பெண்கள் அணியும் பாதணி, பய­ணப்பை மற்றும் சில ஆடை­களும் காணப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு பொலிஸார் சகல தக­வல்­க­ளையும் சேக­ரித்துக் கொண்­டதன் பின்னர் அவ்­வி­டத்­திற்கு நீதிவான் அழைத்­து­வ­ரப்­பட்டார். அத்­தோடு நீதி­வானின் பணிப்­பு­ரைக்­க­மைய கிணற்­றி­லி­ருந்த நீர் முழு­மை­யாக வெளி­யேற்­றப்­பட்­டது.

35 அடி ஆழ­மான அக்­கி­ணற்­றி­லி­ருந்த நீரை வெளி­யேற்­று­வ­தற்கு நான்கு நீர் பம்­பிகள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், சுமார் நான்கு மணித்­தி­யா­லங்­களில் அக்­கி­ணற்­றி­லி­ருந்த நீர் முழு­மை­யாக வெளி­யேற்­றப்­பட்­டது.

அப்­போது கிணற்­றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் தென்­பட்­டுள்­ளது. அச்­ச­ட­லத்தை வெளியில் எடுப்­ப­தற்கு இருவர் கிணற்றில் இறங்கியுள்ளனர்.

கிணற்றில் கிடந்த சட­லத்­துடன் பெரிய பொதி­யொன்றும் கட்­டப்­பட்­டி­ருந்­தது. இடுப்புப் பகு­தியில் கட்­டப்­பட்­டி­ருந்த அப்­பொ­தியை வெட்டி எடுத்து­விட்டு சட­லத்தை தனி­யா­கவும் அந்த பொதியை தனி­யா­கவும் கிணற்­றி­லி­ருந்து வெளி­யேற்­றி­யுள்­ளனர்.

சட­லத்தில் கழுத்துப் பகு­தியில் வலது பக்கம் வெட்­டுக்­கா­யங்கள் காணப்­பட்­ட­துடன், அச்­ச­ட­லத்தில் கட்­டப்­பட்­டி­ருந்த பொதியை சோதனையிட்டு பார்த்த போது அதற்குள் 15 கிலோ நிறை­யு­டைய கருங்­கற்கள் காணப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு கிணற்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட சட­லத்தை அவ்­வி­டத்தில் கூடி­யி­ருந்­த­வர்­க­ளிடம் அடை­யாளம் காட்­டு­மாறு கோரிய போது அதை யாரும் கண்­ட­தில்லை எனக் கூறி­யுள்­ளனர்.

எனவே, அவ்­வி­டத்­தி­லி­ருந்த தக­ர­கொட்­டி­லி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட பயணப் பொதியை சோத­னை­யிட்ட போது அதற்குள் பெயர், விலாசம் குறிப்­பிட்­டப்­பட்ட கட­தா­சி­யொன்று காணப்­பட்­டுள்­ளது. அத்­தோடு தொலை­பேசி இலக்கம் எழு­தப்­பட்ட கட­தா­சி­யொன்றும் காணப்­பட்­டுள்­ளது.

பய­ணப் ­பொ­தி­யி­லி­ருந்து கிடைக்கப் பெற்­றுள்ள தொலை­பேசி இலக்­கத்­திற்கு பொலிஸார் அழைப்பை ஏற்­ப­டுத்­தினர். அப்­போது அது கொழும்பில் “பேக்” தைக்கும் தொழிற்­சா­லை­யொன்றின் பெண் மேற்­பார்­வை­யாளர் ஒரு­வ­ரு­டை­யது என தெரி­ய­வந்­தது.

குறித்த பெண்ணை தெரி­யுமா என பொலிஸார் அவ­ரிடம் கேட்­ட­போது, தெரி­யாது என கூறிய அந்த பெண், மீண்டும் ஞாபகம் வந்­த­வ­ராக ஆம் அவரை தெரியும். எமது தொழிற்­சா­லையில் தான் வேலை செய்தார்.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர், தான் வீட்­டுக்கு செல்­வ­தாக என்­னிடம் தொலை­பேசி இலக்­கத்தை பெற்­றுக்­கொண்டார். அத்­தோடு தான் வீட்டுக்குச் சென்று திரு­மணம் முடிக்­க­வுள்­ள­தா­கவும், திரு­ம­ணத்தின் பின்னர் வேலைக்கு வந்தால் வேலைக்கு சேர்த்துக் கொள்­வீர்­களா என்றும் கேட்­ட­தா­கவும் அதற்கு சரி­யென்று தான் கூறி­ய­தா­கவும் அப்பெண் தொலை­பே­சி­யூ­டாக பொலி­ஸா­ருக்கு கூறி­யுள்ளார்.

அதன் பின்னர் அக்­க­டி­தத்­தின்­படி உயி­ரி­ழந்த பெண் மாத்­தளை, பிட­கந்தை பகு­தியை சேர்ந்த ராஜ­சு­லோச்­சனா என தெரி­ய­வந்­தது. அதா­வது ரத்தோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யி­லேயே அந்த தோட்டம் அமைந்­தி­ருந்­தது. ரத்­தோட்டை பொலி­ஸாரின் மூல­மாக உயி­ரி­ழந்த பெண்ணின் வீட்­டா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டது.

அதன் பின்னர் மோப்­ப­நாயின் உத­வி­யுடன் சந்­தேக நபரை தேடும் பணி ஆரம்­பித்­தது. சடலம் மீட்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து மோப்­பநாய் நேராக விஸ்­வ­மடு சிவில் பாது­காப்பு முகா­மிற்குள் சென்­றது.

அதன் போது அந்த முகாமில் இருந்த கமாண்டோ கர்ணல் விராஜ் பர்­ணாந்து பொலி­ஸா­ருக்கு முழு ஒத்­து­ழைப்­பையும் வழங்­கினார். இவ்­வாறு முகா­மிற்குள் சென்ற மோப்ப நாய் அங்­குள்ள ஒரு கூடா­ரத்­திற்குள் சென்று அமர்ந்து கொண்­டது.

அந்தக் கூடா­ரத்தில் ஒரே­யொரு பாது­காப்பு வீரரே இருந்தார். அவ­ரோ­டி­ருந்த மற்­றைய வீரர் அன்று காலையில் தான் விடு­மு­றையில் சென்றதாக அவர் கூறினார்.
எனவே அந்த சிவில் பாது­காப்புப் படை வீரர் பற்­றிய தக­வலை தேடும் அதே­வேளை, உயி­ரி­ழந்த ராஜ­சு­லோச்சனாவின் பெற்­றோ­ரி­டமும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

உயி­ரி­ழந்த ராஜ­சு­லோச்­ச­னாவின் தந்தை ரத்­தோட்டை பிட­கந்த தோட்­டத்தில் தொழில் புரிந்­து­வரும் ஒருவர். அவ­ரது பெயர் ராம­சாமி ராமலிங்கம். தனது மகள் சம்­ப­வ­தி­னத்­திற்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் நுவ­ரெ­லி­யா­விற்கு செல்­வ­தாகக் கூறி வீட்டில் இருந்து சென்­ற­தாக ராமலிங்கம் பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்ளார்.

இவ்­வாறு வீட்­டி­லி­ருந்து சென்ற  ராஜ­சு­லோச்­சனா நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள தனது நண்­பி­யிடம், மச்­சானை திரு­மணம் செய்­ய­வுள்­ள­தா­கவும் அதற்­காக வவு­னியா செல்­வ­தா­கவும் கூறி­ய­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

அதே­போன்று வவு­னியா விஸ்­வ­மடு பிர­தே­சத்தில் தனது மனை­வியின் சகோ­த­ரர்கள் இருவர் இருந்­த­தா­கவும் அவர்­களில் ஒருவர் உயிரிழந்துள்­ள­துடன் மற்­றவர் அங்கே வசித்து வரு­வ­தா­கவும் சுலோச்­ச­னாவின் தந்தை கூறி­யுள்ளார்.

இவ்­வா­றான தக­வல்­களை பெற்றுக் கொண்ட பொலிஸார், வவு­னியா விஸ்­வ­மடு பிர­தே­சத்­தி­லுள்ள குறித்த வீட்­டிற்கு சென்­றுள்­ளனர். புனர்வாழ்வு பெற்ற புலிகள் இயக்­கத்தைச் சேர்ந்த நாக­ராசா கேதீஸ்­வரன் என்ற இளைஞன் அங்­கி­ருந்­துள்ளார்.

பொலிஸார் அவ­ரிடம் தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். அப்­போது உயி­ரி­ழந்த அந்த யுவ­தியை தனக்கு தெரி­யாது என சந்­தேக நபர் கூறி­யுள்ளார். ஆனால், பொலிஸார் அவரை தடுப்புக் காவலில் வைத்து தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­துடன் சம்­பவம் பற்­றிய பல தகவல்களைப் பெற்றுக் கொண்­டனர்.

“நான் யாழ்ப்­பா­ணத்தில் பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் முடிக்­க­வுள்ளேன். ஆனால், சுலோச்­சனா என்ற பெண்­ணுடன் எனக்குத் தொடர்பிருந்தது. அவர் என்னைத் தேடிக்­கொண்டு வவு­னி­யா­விற்கு வரு­வ­தாகக் கூறினார். அதற்கு நான் வேண்­டா­மென்று கூறினேன்.

ஆனால் அவளோ என்­னுடன் அடிக்­கடி தொலை­பே­சியில் சண்­டை­யிட்­ட­துடன், ஒரு நாள் சொல்­லாமல் கொள்­ளாமல் என்னைத் தேடிக்­கொண்டு வவு­னியா விஸ்­வ­ம­டு­விற்கு வந்து என்னை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டார். அதன் பின்னர் நான் அவரை சந்­தித்தேன். ஆனால் அவரை கூட்­டிக்­கொண்டு எங்கு செல்­வ­தென யோசித்தேன். அதன் பின்னர் முகா­மிற்கு முன்­னா­லுள்ள தக­ரக்­கொட்­டி­லுக்கு அழைத்துச் சென்றேன்.

இவ்­வாறு அழைத்துச் சென்­றதும் அவள் கொண்டு வந்­தி­ருந்த சாப்­பாட்டு பார்­சலை இரு­வ­ரு­மாக உண்டோம். அதன் பின்னர் தான் கர்ப்­ப­மாகியுள்­ள­தா­கவும், ஆகையால் உட­ன­டி­யாகத் தன்னை திரு­மணம் செய்து கொள்­ளு­மாறும் என்­னிடம் கூறவே இரு­வ­ருக்­கு­மி­டையில் தகராறு ஏற்­பட்­டது.

அவ­ளுக்கு வயது 28. எனக்கு வயது 24. ஆகையால் எனக்கு அந்த பெண்ணை திரு­மணம் முடிக்கும் எண்ணம் இருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான கருத்து முரண்­பாடு சண்­டை­யாக மாறி­யது. கோபத்தில் என்னை தாக்­கினாள். நானும் தாக்கினேன். அத்­தோடு ஆத்­தி­ரத்தில் கத்­தியை எடுத்து அவளுடைய கழுத்தில் குத்­தினேன்.

பின்னர் சத்­த­மாக கத்­தி­ய­துடன் மயங்கி கீழே விழுந்தாள். சற்று நேரத்தில் பார்த்தபோது இறந்து போயி­ருந்தாள். உடனடியாக சட­லத்தை இழுத்துச் சென்று கல்லை உடம்பில் கட்டி கிணற்றில் போட்டேன் என வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளார்.

சந்­தேக நபரின் வாக்­கு­மூ­லங்­களின் பின்னர் கொலைக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கத்தி மற்றும் சம்­பவ தினத்தில் சந்­தேக நபர் அணிந்­தி­ருந்த காற்­சட்டை, ரீசெட் போன்­ற­வற்­றையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர். அதன்­பின்னர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் சந்­தேக நபர் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்ப்­பட்­டுள்ளார்.

கத்­திக்­குத்­துக்கு உள்­ளான யுவ­தியின் சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட போது கழுத்துப் பகு­தியில் ஏற்­பட்ட வெட்­டுக்­கா­யத்தால் அதி­க­மாக இரத்தம் வெளி­யே­றி­ய­மையால் இந்த மரணம் சம்­ப­வித்­துள்­ளது என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

எனவே, குறித்த யுவதி காய­ம­டைந்த சமயம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றி­ருந்தால் காப்­பாற்­றி­யி­ருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்­டுள்­ளது. அதே வேளை அந்த யுவதி இரண்டு மாத கால கர்ப்­பிணி என்­பதும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்­பி­லான மேல­திக விசா­ரணைகளை வட மாகா­ணத்­திற்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு பகு­தி­க­ளுக்குப் பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே.திசா­நா­யக்க மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தம்­மிக்க மகேந்­தர ஆகி­யோரின் கண்­கா­ணிப்பில் கிளி­நொச்சி பொலிஸார் மேற்­கொண்டு வருகின்றனர்.

எந்­த­வொரு குற்றச் செய­லையும் புரிந்­து­விட்டு நிரந்­த­ர­மாக தப்­பித்து விட முடி­யாது என்­ப­தற்கு இந்த சம்­பவம் சான்­றாக அமைந்­துள்­ளது.

இது போன்ற அசம்­பா­வி­தங்கள் ஏற்­ப­டாத வகையில் இளைஞர், யுவ­திகள் கட்­டுக்­கோப்­புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அப்போதே இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

-எம்.நேசமணி-

Exit mobile version