ilakkiyainfo

தௌஹீத் ஜமா அத்தின் பொதுச் செயலாளர் 10 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை

பெளத்த சம­யத்­துக்கு அவ­தூறு கூறி அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள சிறீ­லங்கா தெளஹீத் ஜமா அத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ராஷிக்கை 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீ­ரப்­பி­ணையில் விடு­தலை செய்த நீதி­மன்றம் அவர் வெளி நாடு செல்வதையும் தடை செய்­த­துடன் அந்த அமைப்பின் ஏனைய முக்­கிய உறுப்­பி­னர்­க­ளிடம் வாக்கு மூலம் பதிவு செய்­யு­மாறும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்­டது.மேல் மாக­ணத்­திற்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­தி­ருந்த மனு மீதான விசா­ர­ணை­களின் போதே புதுக்­கடை முதலாம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி கிஹான் பிலப்பிட்­டிய மேற்­கண்­ட­வாறு உத்­த­ரவு பிரப்­பித்தார்.

கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவில் தேரர் ஒருவர் செய்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக அந்த பிரிவால் விஷேட விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.

இதன் படி நேற்­றைய தினம் வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு ஆஜ­ரா­கு­மாறு தெளஹீத் ஜமா அத்தின் செய­ளா­ல­ருக்கு நீதி­மன்­ரினால் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன் படி பிர­தி­வா­தி­யான குறித்த அமைப்பின் செய­லாளர் அப்துர் ராஷிக் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் அவர்­சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ரண­வக தலை­மையில் எஸ்.பீ.ஹபீல்,சப்ராஸ் ஹம்ஸா, ரமீஸ் பஸீர் ஆகியோர் உள்­ள­டங்­கிய சட்­டத்­த­ர­ணிகள் குழு ஆஜ­ரா­கி­யி­ருந்­தது.

முறைப்­பாட்­டாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க , கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் உள்ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் தேரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய தலை­மை­யி­லான சட்டத்தரணிகள் குழு ஆஜ­ரா­கி­யி­ருந்­தது.

இதன் போது மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய பிர­தி­வா­தி­யினால் இணை­யத்­த­ளத்­துக்கு வெளியிடப்­பட்­டுள்ள வீடி­யோவில் புத்தர் மனித மாமிசம் சாப்­பிட்­ட­தா­கவும், புத்­தர்கள் மூன்ரு மாணிக்­கங்கள் எனக் கூரி கல்லை வணங்கும் மடையர்கள் எனக் கூரி முழு பெளத்த சமூ­கத்­தையும் ஆத்­தி­ரத்­துக்கும் கவ­லைக்கும் உள்­ளாக்­கி­யி­ருப்­ப­தாக குறிப்­பிட்டார்.

இத­னி­டையே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன நாயக்க, முறைப்­பாட்­டுக்கு அமை­வாக அனைத்து ஆதா­அ­ரங்­க­ளையும் திரட்டி விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் சட்ட மா அதி­பரின் உத­வி­யையும் நாட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் இதன் போது குறுக்­கிட்ட சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய தெள்ஹீத் ஜமா அத் ஒரு பயங்­க­ர­வாத அமைப்பு எனவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் மன்றை கோரினார். வெளி நாட்­டி­லி­ருந்து அந்த அமைப்பு நிதி பெறு­வ­தா­கவும் இதன் போது அவர் குற்றம் சுமத்­தினார்.

இதனை அடுத்து அதனை நிரா­க­ரித்த தெளஹீத் ஜமா அத் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி ரண­வக அவ்­வாறு நிதி பெறு­வ­தென்­பதை முடிந்தால் நிறூ­பிக்­கு­மாரு சவால் விடுத்தார்.

அத்­துடன் யூ டியூபில் வெளி­யா­கி­யுள்ள குறித்த புத்த அவ­ம­திப்பு கருத்­துக்­களைக் கொண்ட வீடியோவை முற்­றாக அதி­லி­ருந்து நீக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.
அத்­துடன் இந்த விவ­கா­ரத்தை சமா­தா­ன­மாக முடித்­துக்­கொள்ள விரும்­பு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். தமது கட்சிக் காரர்கள் இதன் பின்னர் பெளத்தம் உள்­ளிட்ட எந்­த­வொரு மதம் தொடர்­பிலும் விமர்­ச­னத்தில் ஈடு­பட மாட்­டார்கள் எனவும் அவ்­வாறு ஏதேனும் நடவடிக்கையில் ஈடு­பட்டால் அதிக பட்ச தண்­டனை வழங்­கு­மாரும் குறிப்­பிட்டார்.

அத்­துடன் தமது கட்­சிக்­கா­ர­ருக்கு பிணை வழங்­கு­மாறும் அவர் கோரினார். எனினும் அதற்கு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய கடும் எதிர்ப்புத் தெரி­வித்தார்.

எனினும் இரு தரப்பு வாதங்­க­ளையும் ஆராய்ந்த நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டிய பிர­தி­வா­திக்கு 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் செல்ல அனு­ம­தித்தார்.

அத்­துடன் பிர­தி­வா­தியின் கடவுச் சீட்டை தேசிய புல­னாய்வுப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கு­மாறு உத்தரவிட்ட அவர் ஒவ்வரு வெள்ளிக்கிழமையும் பிரதிவாதி பிற்பகல் இரண்டு மணிக்கு கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அத்துடன் தெளஹீத் ஜமா அத்தின் ஏனைய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சென்று வாக்கு மூலம் அளிக்குமாரும் அவர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அந்த வழக்கான து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வெள்ளை வேனில் பொலிஸாரை கடத்திச்சென்று துப்பாக்கிச்சூடு:  ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்; குருணாகல் பகுதியில் சம்பவம்

HWScan00024-600-2Police constable Sampath Sisira Bandara

குரு­ணா­கல் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் போக்­கு­வ­ரத்துப் பிரிவு கான்ஸ்­ட­பிள்கள் இருவர் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்­டு அவர்­களில் ஒருவர் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மற்­றை­யவர் பலத்த காயங்­க­ளுடன் குரு­ணா­கல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தீவிர சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந்த திடுக்கிடும் சம்பவம் நேற்று அதி­காலை ஒரு மணி­ய­ளவில் இடம்­பெற்றுள்ளது. வெள்ளை வேனில் வந்த மூன்று பேருக்கும் மேற்பட்டவர்கள் இரு கான்ஸ்டபிள்களையும் கடத்திச் சென்றதுடன். பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் இரு­வ­ரி­னதும் உத்­தி­யோ­க­பூர்வ சீரு­டை­களையும்

களைந்து அபகரித்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

குரு­ணா­கல் பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்துப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான சந்­தன சம்பத் என்ற 42 வய­து­டை­ய­வரே கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் காய­ம­டைந்­தவர் அதே பொலிஸ் பிரிவின் கான்ஸ்­ட­பி­ளான அஜித் வீர­சூ­ரிய எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

நேற்று அதி­காலை இடம்­பெற்ற இந்த கொலை தொடர்பில் நேற்று மாலை வரை சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டி­ராத நிலையில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்­க­மைய கொழும்­பி­லி­ருந்து குரு­ணா­க­லுக்கு சென்ற குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் ரண­வீர தலை­மை­யி­லான விஷேட பொலிஸ் குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­து.

அத்­துடன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரை விட வடமேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சி­றியின் மேற்­பார்­வையின் கீழ் பல பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­க­ளுக்­காக ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

சம்­பவம், தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தகவல் தரு­கையில்.

குரு­ணா­கல் பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான சந்­தன சம்பத், அஜித் விஜே­சூ­ரிய ஆகியோர் தமது கட­மையின் பொருட்டு நேற்று முன் தினம் இரவு குரு­ணா­கல் நகரை அண்­மித்த பிர­தே­சத்தில் தம்­புள்ளை – குரு­ணா­கல் வீதியில் கட­மை­யினை செய்­துள்­ளனர்.

கட­மைக்கு செல்லும் போது குறித்த கான்ஸ்­ட­பிள்கள் இரு­வரும் கைத்­துப்­பாக்கி ஒன்­றி­னையோ அல்­லது ‘வோக்கி டோக்கி’ கரு­வி­யி­னையோ கொண்டு சென்­றி­ருக்­க­வில்லை. எனினும் கட­மையில் இருந்த போது கட­மையின் நிமித்தம் இரு தட­வைகள் அவர்கள் பொலிஸ் நிலை­யத்துடன் தமது கைய­டக்­கத்­தொ­லை­பே­சியில் தொடர்பு கொண்­டுள்­ளனர்.

இந் நிலையில் அதி­காலை ஒரு மணி­ய­ளவில் தம்­புள்ளை பகு­தியில் இருந்து குரு­ணா­கல் பகு­தியை நோக்கி வெள்ளை வேன் ஒன்று வந்­துள்ளது.

அதனை நிறுத்தி குறித்த இரு கான்ஸ்­ட­பிள்­களும் சோதனை இட முற்­பட்­ட­தா­கவும் இதன் போது வேனில் இருந்­த­வர்கள் இரு கான்ஸ்­டபிள்­க­ளையும் கடத்திக் கொண்டு பட­க­முவ, மூக்­கு­லான காட்டுப் பகு­திக்கு சென்­றுள்­ள­தா­கவும் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.
அந்த காட்டுப் பகு­தியில் வைத்து வேனி­லி­ருந்து வெளியே இழுத்தெடுக்­கப்­பட்­ட பொலிஸ் கான்ஸ்­டபிள் சந்­தன ரீ- 56 ரக துப்­பாக்­கியால் சுட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

அத்­துடன் கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு முன் இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களின் உத்­தி­யோக பூர்வ ஆடை­களும் களை­யப்­பட்டு சந்­தேக நபர்­களால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இதனை அடுத்து மற்­றைய பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான அஜித் விஜே­சூ­ரிய மீதும் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்ள சந்­தேக நபர்கள் தயா­ரா­கி­யுள்­ளனர்.

இதன் போது சந்­தேக நபர்­களின் ரீ 56 ரக துப்­பாக்­கியை பறிக்க முயன்­றுள்ள கான்ஸ்­டபிள் இறு­தியில் கடும் போராட்­ட­துக்கு மத்­தியில் அந்த துப்­பாக்­கியின் தோட்­டாக்­களை எடுத்து காட்டுப் பகு­திக்குள் வீசி­யுள்ளார்.

இதனை அடுத்தே சந்­தேக நபர்கள் அஜித் விஜே­சூ­ரி­யவை தாக்­கி­விட்டு அங்­கி­ருந்து வேனில் தப்பிச் சென்­றுள்­ளனர்.

சம்­ப­வத்தை அடுத்து ஒரு­வாறு மீண்டு பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­துக்கு குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் காட்­டுக்கு வெளியே வந்து கிராம மக்­களின் உத­வி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்­டுள்ளார்.

சம்­பவ இடத்தை சுர்றி வளைத்த பொலிஸார் ரீ 56 ரக துப்­பாக்­கியின் தோட்­டக்கள் பல­வற்றை மீட்­டுள்­ளனர்.

இத­னி­டையே நேற்று அதி­காலை 2.15 மணி­ய­ளவில் மீரி­கம பகு­தியில் வேனில் வந்த ஆயுதம் தரித்த கொள்­ளை­யர்­களால் எரி­பொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது. இந்த கொள்­ளையை மேற்கொண்­ட­வர்­களால் கொள்­ளைக்கு முன்னர் இந்த கொலை, கடத்தல் நாடகம் நடத்­தப்­பட்­டதா? எனவும் பொலிஸார் விசா­ரணை செய்து வரு­கிறனர்.

எவ்­வா­றா­யினும் இந்த சந்­தேக நபர்­களை அடை­யாளம் காண பொலிஸார் பொது மக்­களின் உத­வி­யையும் நாடி­யுள்­ளனர். இந்த கடத்தல், கொலை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் தொடர்பில் சரி­யான தக­வல்­களை வழங்­கு­வோ­ருக்கு 10 இலட்சம் ரூபா சன்­மானம் வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்­மா­னித்­துள்ளார்.

அதன் படி தக­வல்­களை குரு­ணா­கல் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜந்த சம­ர­கோனின் தொலை­பேசி இலக்­க­மான 07774784648 என்ர இலக்­கத்­துக்கு வழங்­கு­மாறு நாம் கோறு­கின்றோம்.

அத்­துடன் இறந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் சந்­தன சம்­பத்தை பொலிஸ் சார்­ஜ­னாக பதவி உயர்த்த பொலிஸ் மா அதிபர் நட­வ­டிக்கை எடுத்­துள்ளார் என்றார்.

யுத்­ததின் பின்னர் உயிர் துறந்துள்ள ஏழா­வது பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான சந்­தன சம்பத் தனது 22 ஆவது வயதில் பொலிஸ் சேவையில் இணைந்திருந்தார். அவருக்கு 13,10 வயதுகளில் இரு பிள்ளைகள் உள்ளனர்.

அத்துடன் மின்னேரியா, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, சிலாபம், முந்தல், மன்னார் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சேவை செய்த பின்னரேயே அவர் குருணாகலுக்கு இடமாற்றம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் தலைமையகத்தின் தகவல்களின்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இவ்வாண்டின் இதுவரை யான காலப்பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 140 சம்பவங்கள் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

குருநாகல் பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை: தப்பிய அதிகாரி வாக்குமூலம் (வீடியோ)

Exit mobile version