Site icon ilakkiyainfo

அர­சி­யலில் கசினோ விளை­யாடும் முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள்

எமது முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களில் பலர் தமது முது­கெ­லும்­பற்ற தன்­மை­யையும், சுய­நல அர­சியல் செயற்­பா­டு­க­ளையும் அடிக்­கடி வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளனர்.

அது­போன்ற வெளிப்­ப­டுத்­தல்கள் தொடர்ந்து இடம்­பெறும் கால கட்­ட­மாக தற்­போ­தைய நாட்டு சூழ்­நி­லையும் அர­சியல் சூழ்­நி­லையும் அமைந்துள்­ளன.

கசினோ சூதாட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மூன்று திட்­டங்­க­ளாக அர­சாங்­கத்தால் தயா­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட செயல் நுணுக்க அபி­வி­ருத்தி கருத்­திட்­டங்­க­ளின் கீழான கட்­டளை ஆளும் தரப்பு முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களின் ஆத­ர­வோடு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

பிரே­ர­ணை­க­ளுக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி(ஜே.வி.பி.) மற்றும் தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஆகி­யன வாக்­க­ளித்­துள்­ளன.

அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் விமல் வீர­வங்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ள­வில்லை.

அதேபோன்று ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் சிலரும் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ள­வில்லை.

முதல் நாள் வாக்­கெ­டுப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டிலான் பெரேரா இரண்டாம் நாள் விவா­தத்தின் போது சபையில் பிர­சன்­ன­மாகி இருந்த போதிலும் சபையில் இருந்து வெளியே­றி­யி­ருந்தார். அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ன விவா­தங்­க­ளிலோ வாக்­க­ளிப்­பிலோ கலந்­து­கொள்­ள­வில்லை.

ஆளும் கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்பினர் அத்­து­ர­லிய ரத்­ன­தேரர் மற்றும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பிரே­ர­ணை­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்­ளனர்.

இந்­நி­லையில், ஆளும் கட்­சியைச் சேர்ந்த அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, பிரதி அமைச்­சர்­க­ளான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், பைஸர் முஸ்­தபா மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர். ஆயினும் ஐக்­கிய தேசியக் கட்­சியை சேர்ந்த முஸ்லிம் உறுப்­பி­னர்கள் எதி­ராக வாக்­க­ளித்­துள்­ளனர்.

இஸ்­லாமும் முஸ்லிம் தலை­மை­களும்

இஸ்­லா­மிய அர­சியல் தலை­மைத்­து­வத்­திற்கும் ஏனைய அர­சியல் தலை­மைத்­து­வங்­க­ளுக்கும் இடையில் பெரும் வித்­தி­யாசம் உள்­ளது.

ஒவ்­வொரு முஸ்­லிமும் அல்­குர்ஆன் குறிப்­பிடும் வழி­யிலும் நபி­ய­வர்கள் காட்டித் தந்த வழி­யிலும் வாழ வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். அது முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வத்­திற்கும் பொருந்தும். அதனை மீறி யாரும் நடந்து கொள்ள முடி­யாது.

இஸ்லாம் ஒரு பரி­பூ­ரண வாழ்க்கை முறை­யாகும். அது தலை­மைத்­துவம் தொடர்­பா­கவும்இ தலை­மைத்­துவம் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் கூறி­யுள்­ளது. நபி­ய­வர்கள் அதனைக் சொல்­லிலும் செய­லிலும் காட்டித் தந்­துள்­ளார்கள்.

இறை­யச்­சத்தை இத­யத்தில் ஏந்­தி­யி­ருக்கும் இஸ்­லா­மிய தலை­மைத்­து­வங்கள் இஸ்லாம் கூறும் வழி­யி­லேயே முழு­மை­யாக நடந்து கொள்ளும்.

உலக வாழ்க்­கை­யா­னது மறுமை வாழ்க்­கையின் (மர­ணித்த பின்னர் உள்ள வாழ்க்கை) விளை நில­மாக உள்­ளது. ஆகவே. இறை­யச்­சத்­துடன் வாழும் முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் இஸ்லாம் கூறு­கின்ற வழி­யி­லேயே நடந்து கொள்ளும். சுய இலா­பங்­க­ளுக்­காக அல்ல.

தலை­மைத்­துவம் என்­பது மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்­கா­கவே; தம்மை அலங்­க­ரித்துக் கொள்­வ­தற்­காக அல்ல. அர­சி­யலில் சம­யத்தை பயன்­ப­டுத்­திக்­கொள்ளும் எமது தலை­வர்­களில் பலர் சமயம் சொல்­வதை அர­சி­யலில் பயன்­ப­டுத்­து­வ­தில்லை.

இதனை நிரூ­பிக்கும் வகை­யி­லேயே இந்த சட்ட மூலத்­திற்கு முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை அமைந்­துள்­ளது.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மயவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரத்­ன­தேரர் மற்றும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பிரே­ர­ணை­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்ள நிலையில் ஆளும் கட்­சியின் பங்­கா­ளி­க­ளான முஸ்லிம் உறுப்­பி­னர்கள் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை பல­ரையும் அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது.

ஆத­ர­வாக வாக்­க­ளித்த முஸ்லிம் உறுப்­பி­னர்க­ளுக்கு ஏனைய தரப்­பி­னரின் சாடல்

கசினோ சூதாட்ட சட்­டத்தின் மூலம் மீதான வாக்­கெ­டுப்பின் போது சபையில் பிர­சன்­ன­மாகி அதனை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு முது­கெ­லும்பு இல்­லாது போய் விட்­டது என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள மேற்­படி கட்­ட­ளை­யான கசினோ சூதாட்­டத்தை கொண்­ட­தான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்­சர்­களால் கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் இவ்­வி­டயம் தொடர்பில் எதிர்க்­கட்­சிகள் பல்­வேறு கதை­களைக் கூறி மக்­களை திசை திருப்­புவதா­கவும் அமைச்­சர்கள் கூறு­கின்­றனர்.

எனி­னும்,  மாநா­யக்க தேரர்­களே இவ்­விட­யத்தை வாபஸ் பெற்­றுக்­கொள்­ளு­மாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இதனை திருத்­தி­ய­மைக்­கு­மாறு கேட்டுக் கொண்­டுள்­ளனர்.

என­வேதான் மனச்­சாட்சி உள்ள ஆளும் கட்சி உறுப்­பினர் சூதாட்­டத்தைக் கொண்ட பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ள­வில்லை. அத்­துடன் நின்று விடாது ஆளும் கட்­சியின் பங்­கா­ளி­யான அத்­து­ர­லியே ரத்ன தேரர் எதிர்த்து வாக்­க­ளித்தார் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் அங்கு மேலும் தெரி­வித்­துள்ளார்.

கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் கட்­சி கள் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்த்து வாக்­க­ளிக்­கா­ததன் மூலம் மனித குலத்­துக்கும் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் இஸ்­லாத்­துக்கும் மிகப்­பெரும் துரோகம் செய்து விட்­டன என முஸ்லிம் மக்கள் கட்சி குற்றம் சாட்­டி­யுள்­ளது. அந்தக் கட்­சியின் குற்­றச்­சாட்டு என்­ன­வென்று பார்ப்போம்.

மத பாரம்­ப­ரி­யங்­களை கொண்ட இந்த நாட்டில் கசினோ சட்ட மூலம் கொண்டு வரப்­ப­டு­வதன் மூலம் முழு நாடும் சீர­ழிவை நோக்கி பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

இத்­த­கைய சீர­ழி­விற்கு குர்ஆன்இ ஹதீஸ் என சொல்­லிக்­கொண்ட கட்­சியும் அக்­கட்­சியின் மூலம் அர­சியல் முக­வரி கொண்­ட­வர்­களும் துணை­போ­யுள்­ளமை மிகப்­பெரும் வர­லாற்றுத் துரோ­க­மாகும். இதன் மூலம் பத­விகள் என்றால் சமூ­கத்­தைக்­கூட இவர்கள் விற்­கத்­து­ணிந்­த­வர்கள் என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

இத்­த­கைய கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் பாரா­ளு­மன்­றத்தில் ஆத­ரித்து வாக்­க­ளித்­துள்­ளமை கண்­டிக்­கத்­தக்­க­தாகும். அதேபோல் மௌனம் சம்­ம­தத்­துக்கு அறி­குறி என்­ப­தற்­கேற்ப ஹக்கீம், ரிஷாத், அதா­வுல்லா தலை­மை­க­ளி­லான கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இச்­சட்ட மூலத்தை எதிர்க்­காமல் நழுவிக் கொண்­டதன் மூலம் இச்­சட்ட மூலம் நிறை­வே­று­வ­தற்கு அப்பட்டமாக துணை போயுள்­ள­மையை எமது கட்சி வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது.

இவர்­களின் இந்தச் செயல் இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் பாரிய தலை­கு­னி­வுக்குள் தள்­ளி­யுள்ளது எனவும் முஸ்லிம் மக்கள் கட்­சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரி­வித்­துள்ளார்.

இது­போன்று பல தரப்­பி­னரும் குறித்த சட்ட மூலத்­தி­றகு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் உறுப்­பி­னர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

வாக்­க­ளித்­த­வர்­களும் வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளா­த­வர்­களும்

ஆளும் தரப்பு முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்ள அதே­வேளைஇ வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாத முஸ்லிம் பங்­காளிக் கட்­சி­களும் மறை­மு­க­மாக அத­னையே செய்­துள்­ளன.

பிரே­ர­ணையை எதிர்க்கத் துணி­வில்­லாத நிலையில் வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாமல் முஸ்லிம் பங்­காளிக் கட்­சிகள் இந்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன. அல்­லது அர­சாங்­கத்­திற்கு தமது விசு­வா­சத்தை பறை­சாற்றியுள்­ளன.

ஆளும் தரப்பைச் சேர்ந்த சிலர் வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாத நிலையில், பிரே­ர­ணை­க­ளுக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி(ஜே.வி.பி.) மற்றும் தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஆகி­யன வாக்­க­ளித்­துள்ள நிலை­யில், எந்த அடிப்­ப­டையில் இந்த முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு தெரி­வித்து வாக்­க­ளித்­துள்­ளன? அதே­போன்று எதிர்ப்பு தெரி­விக்­காமல் நழு­வி­யுள்­ளன? கட்சி அடிப்­ப­டை­யிலா? மார்க்­கத்தின் அடிப்­ப­டை­யிலா? இவர்கள் வாக்­க­ளித்­துள்­ளார்கள்?

அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள மேற்­படி கட்­ட­ளை­யா­னது கசினோ சுதாட்­டத்தை கொண்­ட­தான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இந்த முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் உறு­தி­யாக கூறு­கின்­ற­னவா?

சூதாட்டம், விப­சாரம், மது­பானம், போதைப் பொருள், பாதாள உலக நட­வ­டிக்கை போன்­ற­வற்­றிற்கு சிறந்த களம் அமைத்துக் கொடுக்கும் இந்த சட்ட மூலம் நிறை வேற்­றப்­பட்­டதன் ஊடாக நாட்டின் கலா­சார. பண்­பாட்டு.

ஒழுக்க விழு­மி­யங்கள் பாதிக்­கப்­படும் என்று பல­ராலும் சுட்­டிக்­காட்­ட­ப்பட்­டுள்ள நிலையில்,    இவை எவையும் நடை­பெ­றாது என்று இந்த முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் உத்­த­ர­வாதம் தரு­கின்­ற­னவா?

வாக்­க­ளிப்பு இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் இந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த சட்ட மூலம் தொடர்பாக நன்கு ஆராய்ந்துள்ளனரா? அவ்வாறாயின் அது தொடர்பில் அவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது முஸ்லிம் மக்களின் கேள்வியும் எதிர்பார்ப்புமாகும்.

நாட்டில் பாரிய அளவில் கசினோ இடம்­பெ­று­மானால் அதில் வெளி­நாட்­ட­வர்கள் மட்­டு­மன்றி எமது நாட்டு வச­தி­ப­டைத்­த­வர்­களும் கசினோ விளை­யா­டுவர். அதில் முஸ்­லிம்­களும் அடங்­குவர்.

அப்­ப­டி­யாயின் எம்­ம­வர்கள் கசினோ விளை­யாட, விப­சா­ரத்தில் ஈடு­படஇ மது­பானம் அருந்தஇ போதைப்பொருள் பாவிக்க எமது தலை­வர்­களே வாய்ப்பை உரு­வாக்கி கொடுத்த பாவத்தை சுமந்து கொள்­வார்கள் என்பது சர்வ நிச்சயமாகும்.

எப்­ப­டியோ, எமது தலை­வர்கள் அர­சி­யலில் கசினோ விளை­யா­டு­கி­றார்கள் என்­பதே உண்­மை­யாகும். அந்த ஆட்டம் ஆரம்­ப­மாகி நீண்ட கால­மா­கி­றது. இப்­போது அவர்கள் உலக கசினோ சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்­கரின் ஆடம்­பர சூதாட்ட மையத்தில் அமர்ந்து கசினோ விளை­யா­டப்­போ­கி­றார்கள். பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.

(எம்.இஸட் . சாஜகான் )

Exit mobile version