ilakkiyainfo

நயன்தாராவுக்கு ஒரு கோடி கொடுத்த சிம்பு, காரணம் என்ன?

நயன்தாரா – சிம்பு மீண்டும் ஜோடி சேர்ந்த படம் “இது நம்ம ஆளு”. ஆனால் இந்த படம் சில காரணங்களால் தடைப்பட்டு போனது. தற்போது சிம்புவின் முயற்சியால் மீண்டும் இந்த படம் தொடர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிம்புவுடன் “இது நம்ம ஆளு” படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 2 கோடி (இந்திய ரூபாய்) சம்பளம் பேசப்பட்டது. 1 கோடியை பெற்றுக்கொண்டு நடிக்க தொடங்கிய நயன்தாரா மீதித்தொகையை கொடுத்தால் மட்டுமே அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு வருவதாக கூறிவிட்டதால் படம் திடீரென தடைபட்டது.

திடீரென 1 கோடியைத் தருவதற்கு தயாரிப்பாளரால் முடியாததால், இந்த படம் கைவிடும் நிலைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் எந்தக்காரணத்தைக் கொண்டும் தடைபடக்கூடாது என்ற காரணத்தால் சிம்புவே நயன்தாராவுக்கு தரவேண்டிய தொகையை கடனாக தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மிகவிரைவில் சென்னை மற்றும் பெங்களூரில் படப்பிடிப்பு தொடர உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம் படம் வெளியாகும் என்றும் இயக்குனர் பாண்டிராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கோச்சடையான்” வருமா? வராதா? (படங்கள் இணைப்பு)

Kochadayaan

ரஜினி நடிப்பில் மே நாளை வெளியாக இருந்த கோச்சடையான் தற்போது. இப்படத்தை மே 23 ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய கோச்சடையான் படம் முதலில் அறிவித்தபடி நாளை வெளியாகாது என்றும், இதற்கு பதிலாக மே 23-ஆம் திகதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் வெளியீட்டை இம்மாதம் 23ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக ஈரோஸ் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) அறிவித்தது.

தொழில்நுட்ப காரணங்களாதுள்ளது.ல்தான் படத்தை குறித்த திகதியில் வெளியிட முடியாமல் போனதாக, செய்திக் குறிப்பில் ஈரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொலிவுட் வட்டாரத்தில் வேறு சில காரணங்கள் உலவுகின்றன. ஆரம்பம் முதலே கோச்சடையான் படத்தை வெளியிடுவதில் சிக்கல் என கொலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன.

இப்படத்தின் பாடல் வெளியீட்டிற்கான திகதியே பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 9-ஆம் திகதி என இறுதிசெய்யப்பட்டது.

Exit mobile version