இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக இம்ரான்கான் இருக்கிறார்.
இக்கட்சி கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. பாகிஸ்தானின் மிகவும் பணக்காரரும், நவாஸ் ஷெரிப்பின் நம்பிக்கைகுரியவரான மியான் மான்சாவின் உறவினர் மகளுடன் இம்ரான் கானுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
கலிபோர்னியா சீதா ஒயிட்
இம்ரான் கான் கிரிக்கெட் விளையாடியபோதும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பெண்களுடன் இணைத்து பேசப்பட்டார். கலிபோர்னியாவில் சீதா ஒயிட் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரது நான்கு வயது குழந்தைக்கு இம்ரான் கான் தான் தந்தை என்று நீதிமன்றமே கூறியது.
சர்ச்சை
இம்ரான் அப்போது பரிசோதனைக்கு மறுத்தார். தந்தை மரபணு உறுதிசெய்ய இரத்தம் வழங்க மறுத்துவிட்டார். பின்னர் விசாரணைக்கு வரவில்லை. ஒயிட் அமெரிக்காவின் பெவேர்லி ஹில்ஸை சேர்ந்தவர். இம்ரான் கானுடன் 1987-88ல் தொடர்பில் இருந்தவர். பின்னர் இருவரும் 1991ம் ஆண்டு சந்தித்துள்ளனர்.
தனிப்பட்ட விவகாரம்
அப்போது அப்போது ஒயிட் இம்ரானிடம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார். ஒயிட்டின் 4 வயது மகளான டைரையினை இம்ரான்கான் அங்கீகரிக்கவில்லை. இதனையடுத்து டைரைனுடன் இம்ரான்கான் இருக்கும் புகைப்படம் பத்திரிக்கையில் வெளியானது. இதனையடுத்து இது எனது தனிப்பட்ட விவகாரம், மீடியாக்கள் இதில் நுழைய கூடாது என்று கூறினார்.
தீவிர முஸ்லிம்..
இம்ரான்கான் கிரிக்கெட்டில் இருந்தபோதும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த போதும், இரவு கிளப்புக்கு அடிக்கடி செல்வதாக கூறியுள்ளார். ஆனால் 1992ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து என்னை தீவிரமான முஸ்லீமாக மாற்றிக் கொண்டேன் என்று தெரிவித்தார்.
ஜெமிமா
இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய இம்ரான் கடந்த 1995ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜெமிமாவை திருமணம் செய்து கொண்டார். ஜெமிமா கடந்த 2004ம் ஆண்டு இம்ரானிடம் இருந்து விவகாரத்து வாங்கிவிட்டார். பின்னர் லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.
21 வயது இளம் பெண்
இப்போது 21 வயது இளம்பெண்ணை தாயாக்கிவிட்டார் இம்ரான்கான் என புதிய சர்ச்சையும் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.