ilakkiyainfo

ஆபாச படம் நிறைந்த மடிக் கனணி திருமணம் செய்ய வேண்டும் – விநோத வழக்கு

 

ஆபாசப்படம் நிறைந்த தனது மடிக் கனணியை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த விநோத வழக்கு ஒன்று அமெரிக்க நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் செவிர் என்ற வழக்கறிஞர், இசையைப் போலவே ஆபாச படங்களையும் அதிகமாக நேசித்துள்ளார். அவரது மடிக் கனணியில் நிறைய ஆபாசப்படங்களை சேமித்து வைத்துள்ளாராம் கிறிஸ்.

இந்நிலையில், உடாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து அவருக்கு ஒரு திடீர் ஆசை வந்துள்ளது. அது என்னவென்றால், ஆபாசப்படம் நிறைந்த தனது மடிக் கனணியை திருமணம் செய்து கொள்வது தான்.

இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திக்க விரும்பிய கிறிஸ், திருமண லைசென்ஸ் கோரி சம்பந்தப்பட்ட துறையை அணுகியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை அத்துறை நிராகரிதுள்ளது.

இதனால், தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கிறிஸ். வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஹிங்கிள், இது கேலிக்கூத்தாக இருப்பதாக கூறி அதனை நிராகரித்தார்.

கணவர் மனைவியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது
12-05-2012
327409880secvpகணவர் மனைவியுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இளம்பெண் ஒருவர் தென்மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது,

விகாஷ் என்பவர் எனக்கு மயக்க மருந்து கொடுத்து என்னை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். மயக்க நிலையில் இருந்த எனக்கும், அவருக்கும் திருமணம் நடந்ததாக பதிவு செய்துவிட்டார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி நடைபெற்றது. இதையடுத்து அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு என்னை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, மார்ச் மாதம் 4ம் திகதி விகாஷ் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து காசியாபாத் அழைத்துச் சென்றதற்கான ஆதாரம் இல்லை.

கணவன் மனைவியிடம் வலுக்கட்டாயமாக உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று தெரிவித்தது. இந்த வழக்கில் இருந்து விகாஷ் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து விகாஷ் கூறுகையில், நான் அவரை 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் திகதி திருமணம் செய்தேன். எனது மனைவியின் வலியுறுத்தலின்பேரில் தான் திருமணத்தை பதிவு செய்ய காசியாபாத் நீதிமன்றத்திற்கு சென்றோம்.

எனது சகோதரியின் வீட்டை என் பெயரில் மாற்ற முடியாததால் என் மனைவி என் மீது வேண்டும் என்றே குற்றம்சாட்டியுள்ளார் என்றார்.

Exit mobile version