Site icon ilakkiyainfo

தி.மு.க தோற்றாலும் கவலையில்லை..மதுரையில் கண்டிப்பாக ஜெயிக்கவேண்டும்

அதி­கா­ரத்­துக்கும்  சொத்­துக்கும்  கணக்­குக்­கேட்டு  நடந்­து­வரும்  தி.மு.க. குடும்பச் சண்­டையில் யார் உயிர் மது­ரையில் போகப்­போ­கி­றதோ? என்று தி.மு.க. வினர் பீதியில் இருக்­கின்­றனர்!

தி.மு.க.வில் ஒரு­கா­லத்தில் தென்­மா­வட்­டங்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக ஜொலித்த அழ­கிரி கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட பின் ஊர் ஊராகச் சென்று தனது படை பலத்தை நிரூ­பித்துக் காட்ட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்டார். அவர் ஊர் ஊராகத் திரிந்­தாலும் அழ­கி­ரி­யுடன் இன்று விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய ஆத­ர­வா­ளர்­களே வலம் வரு­கின்­றனர்.

கீழே விழுந்­தாலும் மீசையில் மண் ஒட்­டாத கதை­யாக அழ­கிரி தான் செல்லும் இடங்­களில் தனக்கும் கூட்டம் இருக்­கி­றது என்­ப­து­போல ஆத­ரவு திரட்டி வரு­வ­துதான் நிஜம்.

யாரெல்லாம் அஞ்சா நெஞ்­சனின் தள­ப­திகள் எனக் கூறிக்­கொண்டு அர­சியல் செய்து கோடி கோடி­யாகப் பணம் சம்­பா­தித்தார்களோ அவர்கள் இப்­போது ஸ்டாலின் அணியில் பத்­தி­ர­மாக ஐக்­கி­ய­மா­கி­விட்­டனர்.

இதில் தேர்­த­லுக்கு முன்பே ஸ்டாலின் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனவர் தான் எஸ்ஸார் கோபி. அழ­கி­ரியின் ஒட்­டு­மொத்த பலமே நான் தான் எனக்­கூறி வந்த கோபி திடீ­ரென ஸ்டாலின் அணியில் சேர்ந்­த­போது வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை­யாக அழ­கிரி மனம் வருந்­தி­னாலும் அதை வெளிக்­காட்டிக் கொள்­ளாமல் ரெண்டு முடி போன­தற்­கெல்லாம் கவ­லைப்­பட முடி­யுமா? என்றார்.

அழ­கி­ரியின் கோட்­டை­யாகக் கரு­தப்­பட்ட மது­ரையை கொஞ்சம் கொஞ்­ச­மாக சிதைத்­தாலும் அடி­யோடு சாய்க்க நினைத்த ஸ்டாலி­னுக்கு இன்னும் முழு வெற்றி கிடைக்­க­வில்லை. தமி­ழ­கத்தில் எங்கு தி.மு.க. தோற்­றாலும் கவ­லை­யில்லை.

ஆனால், மது­ரையில் கண்­டிப்­பாக ஜெயிக்க வேண்டும் என்­ப­துதான் ஸ்டாலி­னு­டைய குறிக்கோள். காரணம் அழ­கி­ரியை அவ­ரது கோட்­டை­யி­லேயே வீழ்த்­திய பெருமை தனக்குக் கிடைக்கும் அதன் மூல­மாக அழ­கி­ரியை அட்ரஸ் இல்­லாமல் செய்­து­வி­டலாம் என்­பதும் ஸ்டாலினின் வியூகம்.

இத்­தனை நாட்­க­ளாக மது­ரையில் நடக்கும் விநோ­தங்­களை கைகட்டி வேடிக்கை பார்த்த ஸ்டாலின் ஆத­ர­வா­ளர்கள், தி.மு.க. கரை­வேட்டி கட்­டிக்­கொண்டு தி.மு.க. விற்கு எதி­ராக வாக்­குச்­சா­வடி மையங்­களில் கள­மி­றங்கி தே.மு.தி.க.வுக்கு அழ­கிரி ஆத­ர­வா­ளர்கள் ஓட்டுக் கேட்டதைத்தான் பொறுத்­துக்­கொள்ள முடி­யில்லை. எப்­படி கலகம் விளை­விக்­கலாம் என்று காத்துக்கொண்­டி­ருந்­தார்கள்.

முன்­பெல்லாம் அழ­கிரி மற்றும் ஸ்டாலின் அணி­யினர் எதி­ரெ­திரே பார்த்­துக்­கொண்­டாலும் ஒரே கட்சி என்ற அடிப்­ப­டையில் மரி­யாதை நிமித்­த­மாக ஒதுங்கிச் சென்ற காலம் மாறி இப்­போது அண்ணன், தம்பி இடை­யி­லான மோதல் நேருக்கு நேர் மல்­லுக்­கட்டும் அள­விற்கு பகி­ரங்­க­மாக வெடித்து இருப்­பது தி.மு.க. புள்­ளி­களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்­பித்து இருக்­கி­றது.

இதன் உச்­சக்­கட்­ட­மாக ஏப்ரல் 24 ஆம் திகதி தே.மு.தி.க.விற்கு ஆத­ர­வாக தி.மு.க. கரை­வேட்­டி­யுடன் சென்று வாக்­குச்­சா­வடி அருகே நின்று கொண்டு தி.மு.க. வுக்கு ஓட்டுப் போடா­தீர்கள் என்று பொது­மக்­க­ளிடம் சொன்ன அழ­கி­ரியின் தீவிர ஆத­ர­வா­ளர்கள் 4பேரை ஸ்டாலின் ஆத­ர­வா­ளர்கள் நையப்­பு­டைத்­தது மதுரை அர­சி­யலில் பர­ப­ரப்பைக் கூட்­டி­யி­ருக்­கி­றது.

தனது ஆத­ர­வா­ளர்­களைப் பொடிப்­பை­யன்­களை வைத்து அடித்­து­விட்­டார்­களே எனக் கேள்­வி­ப்பட்ட அழ­கிரி, நான் அமை­தி­யாக இருக்­கிறேன் என நினைத்­து­விட்­டார்­களா? எனக் கொதித்­துப்போய் உடனே தன்­னு­டைய ஆத­ர­வா­ளர்­களை அழை­த்து அவ­ச­ரக்­கூட்டம் போட்­டி­ருக்­கிறார்.

எங்கே நாம் இந்தத் தேர்­தலில் ஜெயித்து விடு­வோமோ? என்ற பயத்­தில்தான் அவர்கள் கைநீட்ட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் கைநீட்­டினால் நீங்­களும் பதி­லுக்கு திருப்பி அடிக்க வேண்­டி­ய­து­தானே எனக் கொம்­பு­சீவி விட்­டுள்­ளாராம் அழ­கிரி.

இந்த இரு அணி­களில் எந்த அணி மது­ரையில் ஜெயித்­தாலும் உள்­கட்சி மோதல் வெடிப்­பது உறுதி என்­கி­றார்கள். இந்த மோதலில் யார் உயிரை யார் எடுக்­கப்­போ­கி­றார்­களோ என்ற அச்­சத்தில் மதுரை தி.மு.க.வினர் உறை­ந்து போயி­ருக்­கி­றார்கள்.

மதுரை அடி­தடி தொடர்­பாக அழ­கிரி ஆத­ர­வா­ளர்­க­ளான முன்னாள் அவைத்­த­லைவர் இசக்­கி­முத்து, முன்னாள் மாநகர் மாவட்ட துணைச் செய­லா­ளர்கள் உத­ய­குமார், சிவக்­குமார், முன்னாள் பொரு­ளாளர் மிசா. பாண்­டியன், முன்னாள் மண்­டலத் தலைவர் கோபி­நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்­பாட்சா, முன்னாள் பகுதிச் செய­லா­ளர்கள் முருகன், ராம­லிங்கம், ஆர்.எம். கருப்­ப­சாமி, முன்னாள் பொதுக்­குழு உறுப்­பினர் சுப்­பு­லட்­சுமி ஆகிய பத்துப் பேரையும் கட்­சி­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நீக்க கட்சித் தலைமை உத்­த­விட்­டுள்­ளது.

லேட்­டஸ்ட்­டாக நீக்­கப்­பட்ட அழ­கிரி ஆத­ர­வா­ளர்­களோ, ஏற்­கெ­னவே மாநகர் தி.மு.க. வை கூண்­டோடு கலைத்து மாட்­டுக்கு பல்லைப் பிடுங்­கிட்­டாங்க. இப்ப மீண்டும் டிஸ்மிஸ் பண்ண எத்­தனை முறை தான் பிடுங்­கிய மாட்­டுக்கே பல்லைப் பிடுங்­கிக்­கிட்டு இருக்கப் போறாங்க. இது ரொம்ப லேட்டு.

அண்ணன் அழகிரி கூறியது நடந்துவிடும் என்கிற தோல்விப் பயம் தான் இந்த நீக்கத்திற்கு அடிப்படைக் காரணம் என்றனர் ஆவேசமாக.

மதுரையல் மீண்டும் பத்துப் பேர் நீக்கம் என்று டி.வி.யில் செய்தி பிளாஷ் ஆனதும் அன்று மாலையே மதுரைக்கு கோபம் கொப்பளிக்கத் திரும்பிவிட்டார் அழகிரி. தேர்தல் முடிவு வரும்வரை அமைதியாக இருங்கள் என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் சமாதானப்படுத்தி வருவதாகத் தகவல்!

Exit mobile version