ilakkiyainfo

நாம் வீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தை, அப்படியே காப்பி அடித்தோம்.. பாருங்க (வீடியோ)

தமது நாட்டின் மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானம் ஒன்றை வீழ்த்தியதாக கடந்த 2011-ம் ஆண்டு டிசெம்பரில் ஈரான் கூறியிருந்தது அல்லவா, வீழ்த்தப்பட்ட விமானத்தை மாதிரியாக வைத்து, அச்சு அசலாக அதே போல ஒரு விமானத்தை தாமும் தயாரித்து விட்டதாக இப்போது ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானிய அரசு டி.வி. சேனல், தாம் தயாரித்துள்ள விமானத்தின் இமேஜ்களை நேற்று ஒளிபரப்பியது.

ஈரானின் பவர்ஃபுல் அமைப்பான புரட்சிக் காவலர்கள் (Revolutionary Guards) படையின் ஏர்-விங் மையத்தில், அந்த நாட்டின் சுப்ரீம் லீடர் அயதொல்லா அலி கமேனி அந்த விமானத்தை பார்வையிடும் காட்சிகள் (மேலே போட்டோ பார்க்கவும்) ஒளிபரப்பாகின.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, அந்த விமானம் தமது விமானமல்ல என அமெரிக்கா கையை விரித்திருந்தது. ஆனால், அது வழமையான ‘டிப்ளமேட்டிக் லை’ என்பது, ராணுவ வட்டாரங்களில் அனைவருக்கும் தெரியும். விமானம் அவர்களுடையதுதான்.

ஈரானில் வீழ்ந்த அமெரிக்க RQ-170 Sentinel விமானத்தை, அதன் பறக்கும் தொழில்நுட்பங்களுடன் க்ளோன் செய்திருப்பதாக, ஈரான் சொல்கிறது.

Iranian-RQ-170“எமது இஞ்சினியர்கள், அமெரிக்க விமானத்தின் ரகசிய கோடிங்குகளை உடைத்து, அதன் தயாரிப்பு ரகசியங்களை தெரிந்து கொண்டனர். அதற்குத்தான் இவ்வளவு நாட்கள் பிடித்தன. அவற்றை வைத்து நாமும் அதே விமானத்தை சொந்தமாக தயாரித்துள்ளோம்.

இந்த விமானத்தின் டெஸ்ட் ஃபிளையிங் அடுத்த சில தினங்களில் நடைபெறும்” என, டி.வி.யில் ஒளிபரப்பான ஃபுட்டேஜில் அதிகாரி ஒருவர் கூறுவதாக வருகிறது.

அந்த ஒளிபரப்பில் ஒரே மாதிரியான இரு ஐடென்டிகல் விமானங்கள் காண்பிக்கப்பட்டன (ஒன்று, முன்பு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்).

ஈரானிய தயாரிப்பு விமானத்துக்கு முன்னால் அமர்ந்திருந்த சுப்ரீம் லீடர், “ஈரானிய வான் கண்காணிப்பு பணிக்கு இந்த விமானம் பெரிதும் பயன்படும்” என்றார்.

ஒருவேளை ஈரானியர்கள் சொல்வது நிஜமாக இருந்தால் (RQ-170 ரகசிய பொறிமுறையை இவர்களால் டீகொடிங் செய்ய முடிந்திருந்தால்) அது அமெரிக்காவுக்கு பெரிய அடியாக இருக்கும்.

இதை அமெரிக்காவே நன்று உணர்ந்திருந்தது.

எப்படி சொல்கிறோம் என்றால், விமானம் வீழ்த்தப்பட்ட இரு மாதங்களின் பின், அந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டுவந்தோம் என ஈரான் விளக்கியிருந்தது.

“விமானத்தை நாம் சுட்டு வீழ்த்தவில்லை. தரையில் இருந்தவாறே, அதன் அல்ட்ரா-ஹைடெக் கன்ட்ரோலை நாம் எடுத்துக் கொண்டோம். அதன்பின் விமானத்தை நாமே கன்ட்ரோல் செய்து தரையிறக்கினோம்” என்றார்கள் அவர்கள்.
முதலில் அந்த விமானமே தம்முடையது அல்ல என்று கூறியிருந்த அமெரிக்கா, இந்த ஸ்டேஜில், “எமது விமானம் கன்ட்ரோல் இழக்கப்பட்டு, காணாமல் போனது” என்றது. எங்கே போனது, என்பதை சொல்லவில்லை.

அது நடந்து சில நாட்களின் பின் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, “ஈரானிய இஸ்லாமிய குடியரசு, எமது விமானத்தை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு ஈரான் லேசாக சிரித்துக் கொண்டதே தவிர, பதிலில்லை.

விழுந்த விமானம் போனால் போகிறது என விட்டுவிடாமல், அமெரிக்க ஜனாதிபதியே அதை தருமாறு கோரிக்கை விடுகிறார் என்றால், “அந்த விமானம் ஈரானின் கையில் தொடர்ந்தும் இருப்பது ஆபத்தானது” என அமெரிக்கா கருதுகிறது என அர்த்தமாகியது.

என்ன ஆபத்து?

ஒரேயொரு பாஸிபிள் ஆபத்து, அந்த விமானத்தின் ரகசியங்களை உடைத்து, அதே விமானம் போல ஒன்றை ஈரானியர்கள் தயாரித்து விடலாம் என்ற பாஸிபிளிட்டிதான்.

இப்போ என்னாச்சு? அமெரிக்கா பயந்ததுபோல நடந்தாச்சு!

Exit mobile version