அண்டை வீட்டாரின் நாயினால் தாக்கப்பட்ட ஒரு சிறுவனை எவரும் எதிர்பாராத ஒரு சூப்பர் ஹீரோ காப்பாற்றியிருக்கிறார்.
கலிபோர்னியாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஜெரிமி என்னும் அந்தச் சிறுவன் தனது சிறிய சைக்கிளில் விளையாடிக்கொண்டிருப்பதையும், அவனது காலை அண்டை வீட்டு நாய் வந்து கடித்து அவனை இழுத்துச் செல்ல முயல்வதையும் சிசிடிவி கமெரா காண்பிக்கிறது.
ஆனால், அவர்கள் வளர்க்கும் ”தாரா” என்னும் பூனையோ வேகமாக ஓடிவந்து அந்த நாயைத் தாக்கி அந்தச் சிறுவனை காப்பாற்றிவிடுகிறது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெரிமிக்கு காயத்துக்கு தையல் போட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவன் சுகமடைந்து வருகிறார்.
இப்போது அந்த ”தாரா” பூனைக்கு அவர்களது வீட்டில் நல்ல பாராட்டு. அது ஒரு சூப்பர் பூனை.
இவை குறித்த காணொளி.