Site icon ilakkiyainfo

இந்தியாவுக்கு தஞ்சம்கோரிச் செல்பவர்களுக்கு அகதி அந்தஸ்து இல்லை

இந்தியாவுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எடுத்துள்ளது.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரும் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரி தஞ்சமடையச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்திய மத்திய அரசு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்தியாவில் தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 2011ஆம் ஆண்டிலேயே இந்திய மத்திய அரசு எடுத்துவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, மண்டபம் அகதி முகாம் அமைந்துள்ள பிரதேச செயலகத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள இந்திய மத்திய அரசு, 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் தஞ்சம்கோரி வந்த இலங்கையர்கள் எவருக்கும் அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமையவே, மே மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள் 10பேரை இந்திய வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு அமைய அந்நாட்டு பொலிஸார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுக்கிணங்க சிறையிலடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version