லண்டன் விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென அந்த விமானத்தின் இறக்கை ஒன்று கழன்று கீழே விழும் நிலையில் இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று காலை London’s City Airport என்ற இடத்தில் இருந்து Florence என்ற இடத்திற்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 60 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
விமானம் விண்ணில் பறந்துகொண்டிருக்கும்போது திடீரெனெ விமானத்தில் உள்ள இறக்கைப்பகுதி ஒன்று கழன்று விழும்நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. இதை தற்செயலாக ஜன்னல் வழியே கவனித்த பயணி ஒருவர், உடனடியாக விமான கேப்டனிடம் புகார் கொடுத்தார்.
விமான கேப்டன் நிலைமையை உணர்ந்து உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டு, மிகவும் லாவகமாக விமானத்தை தரையிறக்கினார்.
இந்தசம்பவத்தில் விமானம் எவ்வித சேதமும் இல்லாமல் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை பயணிகளுள் ஒருவர் எடுத்து யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தார்.
இந்த வீடியோ உலகம் முழுவதும் பெருமள இணையதள பயனாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.