மெக்சிகோ காவல்துறை உயரதிகாரி ஒருவர் பணியில் இருந்தபோது ஆம்புலன்ஸில் பெண் ஒருவரோடு செக்ஸ் உறவு கொண்டிருந்ததை அங்கிருந்த கேமரா ஒன்று காட்டிக்கொடுத்ததால் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் Larry Burns என்பவர் காவல்துறை உயரதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் Jal’s Emergency Medical Services என்ற அமைப்பின் இயக்குனராகவும் இருந்தார்.
இந்நிலையில் அவர் மெக்சிகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் பெண் ஒருவரோடு செக்ஸ் உறவு கொண்டிருந்ததை அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்று படம் பிடித்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து Larry Burns அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் ஒரு பெண்ணோடு செக்ஸ் உறவு கொண்டதை ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர் Larry Burns அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக மெக்சிகோ காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.