ilakkiyainfo

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல’ -மஹிந்த (யுத்த வெற்றிவிழாபடங்கள்)

 

பாராளுமன்ற தெரிவுக் குழுவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த இடம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  மாத்தறையில் இடம்பெறும் யுத்த வெற்றி விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

இது யுத்த வெற்றி விழா அல்ல. சமாதானத்தை வெற்றி கொண்ட நாள். 30 வருட பயங்கரவாதத்தை ஒழித்ததை நினைவு கூரும் நாள்.

30 வருட பயங்கரவாதம் காரணமாக எல்லோரும் மிகவும் கஸ்டம், கவலை, வேதனையுடன் காணப்பட்டனர்.

யுத்தம் தொடர்ந்து இருந்தால் இன்னும் பல உயிர்கள் அழிந்து போயிருக்கும்.

யார் என்ன சொன்னாலும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். தமிழ் சகோதரர்களுக்கு எதிராக அல்ல.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர்.

நாட்டின் தலைவன், தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்களின் காவலன் என்ற ரீதியில் அதற்கு இடம்கொடுக்க மாட்டேன்.

தவறான பிரச்சாரம் மூலம் நாட்டை அவமானப்படுத்த வேண்டாம்.

தற்போது இராணுவத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் எல்லோரும் உள்ளனர்.

பயங்கரவாதிகள் நாசம் செய்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளோம். இன்னும் இன்னும் செய்வோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

5(1779)

Exit mobile version