மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுககுற்பட்ட கரிக்கா முறிப்பு கிராமத்தை வதிவிடமாகக் கொண்ட 1 வயது குழந்தையின் தாயான ராமநாதன் வசந்தி(வயது-31)
திங்கட்கிழமை மாலை வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய வம்சாவழியான குறித்த குடும்பத்தினர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ‘கரிக்கா முறிப்பு’ கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை இடம் பெறுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை (19) மாலை 5 மணியளவில் குறித்த இளம் குடும்பப்பெண் அவருடைய வீட்டில் வைத்து கழுத்துப்பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை கண்ட அயலவர்கள் கிராம சேவகருக்கு தகவழ் வழங்கிய நிலையில் கிராம சேவையாளர் முருங்கன் பொலிஸாருக்கு தகவழ் வழங்கினார்.
உடனடியாக முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.எனினும் குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (20) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டதோடு சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரியாலையில் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலில் கொள்ளையர்களால் களுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்
22-05-2014
அரியாலைப் பகுதயில் மூதாட்டி ஒருவர் கொள்ளையர்களால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து இறந்தவரின் மகள் தெரிவிக்கையில்,
நான் மதியம் 12.10 மணியளவில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது அம்மாவைக் காணவில்லை. சமையலறைக்குச் சென்று பார்த்தேன். அங்கும் காணவில்லை வீட்டு அறையில் பார்க்கும் போது கழுத்தில் துணிகள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டேன்.
ஓடிப்போய் கூப்பிட்டு பார்த்தேன். தண்ணீர் தெளித்துப் பார்த்தேன். எழும்பவில்லை. உடனடியாக கூக்குரல் இட்டு அயலவர்களைக் கூப்பிட்டு அவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவந்தேன்.
குறித்த கொள்ளை சம்வத்தில் கோயிலுக்கு என சேமித்து வைக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபா பணம் உட்பட 5இலட்சத்திற்கும் மேற்பட்ட நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு மூதாட்டி யாழில் கைது
20-05-2014