மட்ரிட் நகரத்தில் காளைச் சண்டை வீரவிளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் ‘மெட்டடோர்’ காளைச் சண்டை வீரர்கள் மூன்று பேரை காளைகள் முட்டித் தள்ளியதை அடுத்து இந்தப் பருவத்தின் முக்கிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மிகவும் பிரசித்தி பெற்ற சன் இஸித்ரோ காளைச் சண்டைத் திருவிழா கடந்த 35 ஆண்டுகளில் ரத்து ஆவது என்பது இதுவே முதல் முறை என்று இதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
டேவிட் மோரா என்ற காளைச் சண்டை வீரருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது காலை கொம்பால் முட்டிக் கிழித்த காளை, ஆளையே தூக்கியெறிந்தும் இருந்தது.
படுகாயமடைந்திருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
(எச்சரிக்கை: இந்த வீடியோவில் வரக்கூடிய காட்சிகள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்.)
குட்டியை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் கரடி – காணொளி
22-05-2014
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கூட்டனே தேசிய பூங்கா பகுதியில் வாகன நடமாட்டம் மிக்க நெடுங்சாலை ஒன்றில் ஒரு கரடி தனது குட்டியை பாதுகாப்பாக தூக்கி அழைத்துச் செல்லும் காட்சியை ரிக்கி ஃபோர்ப்ஸ் என்பவர் படம்பிடித்துள்ளார்.
அது குறித்த காணொளி.