நடிகர் சூர்யாவின் மேனேஜர் தன்னை மிரட்டுவதாக ‘சரவணன் என்கிற சூர்யா’ படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ராஜா சுப்பையா என்பவர் ‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பால் அவர் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். அதனால் இந்த தலைப்புக்கு சூர்யா தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், ராஜா சுப்பையா சென்னை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “நான் சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வருகிறேன். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திலும் பணியாற்றி இருக்கிறேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் ‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறேன்.
இந்தப் படத்தின் தலைப்பில் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் ஆகியோரின் தலையீடு இருப்பதால் பதிவு செய்ய மறுத்தனர். சூர்யாவின் மேனேஜர் ராஜசேகர் என்னை தினமும் தொலைபேசியில் மிரட்டி வருகிறார்.
எனவே தயாரிப்பாளர் சங்கம் மீதும், ராஜசேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜசேகர் கூறுகையில், “நான் யாரையும் மிரட்டவில்லை. அவர் விளம்பரத்திற்காக தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். படத் தலைப்பு சூர்யாவைக் குறிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது 8 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளோம்,” என்றார்.
சூர்யாவுடன் ஊதாக் கலரு ரிப்பன்!
சூர்யா ‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர்.
இதில் இரண்டு நாயகிகள் மட்டும் கிடையாதாம். மூன்றாவதாக ஒரு நாயகியும் இணைந்துள்ளாராம்.
அவர் வேறு யாருமில்லை, ‘ஊதாக் கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா தானாம்.
இதற்காக ஸ்ரீதிவ்யாவுக்கு ரூ.40 இலட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
தற்போது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் பென்சில், சிவகார்த்திகேயனுடன் டாணா, விஷ்ணுவுடன் ஜீவா, அதர்வாவுடன் ஈட்டி, விதார்த்துடன் காட்டு மல்லி, புதுமுக நடிகருடன் நகர்ப்புறம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Manjapai is like a Bhagyaraj movie – Lingusamy