ilakkiyainfo

ஜெய், சந்தானம் நடிப்பில் த்ரிஷா, நயன்தாரா, அண்ட்ரியா மற்றும் அஞ்சலி உட்பட 9 நாயகிகள்

வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த பட வேலையை தொடங்கி விட்டார்.

வாலு படத்தின் இடைவெளியை சரியாக உபயோகித்து அடுத்த படத்துக்கான கதை எழுதி இப் படத்துக்கு தற்காலிமாக கன்னிராசி என்ற பெயரும் வைத்து உள்ளார். விரைவில் இயக்குனர் பண்டிரஜிடம் தலைப்பை உபேயாகிக்க அனுமதி கேட்க உள்ளதாகவும் தெரிவிததுள்ளார்.

இப் படத்தில் ஜெய் மற்றும் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் மிக பிரம்மாண்டமான முறையில் 9 கதாநாயகிகளை வைத்து எடுக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

இப் படத்தில் த்ரிஷா, நயனதாரா அண்ட்ரியா மற்றும் அஞ்சலி இவர்கள் அணுகியுள்ளதாகவும் அது மட்டும் இல்லாமல் வேறு சில நாயகிகளையும் அணுகியுள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் சிம்பு இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளாராம். எல்லா விஷயமும் சரியாக அமைந்தால் இப் படத்தின் படபிடிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடங்கிடும் என்றார்.

 

சொகுசாக வாழும் ஹீரோயின்கள்: விஜய் ஆண்டனி பேட்டி (வீடியோ)

06-06-2014

Kollywood-news-9024சென்னை: தொழில்நுட்ப கலைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள், ஹீரோயின்களோ சொகுசாக வாழ்கிறார்கள் என்றார் விஜய் ஆண்டனி. இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து சலீம் என்ற படத்தில் நடிக்கிறார்.

என்.வி.நிர்மல்குமார் டைரக்ஷன். அக்ஷா ஹீரோயின். சலீம் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது.

பின்னர் விஜய் ஆண்டனி கூறியதாவது: நான் படத்தில் முஸ்லிம் இளைஞனாக நடித்தேன். இப்படத்திலும் அதேபோன்ற வேடம் ஏற்றது ஏன் என்கிறார்கள். இந்த இரண்டு படங்களுமே அதுபோல் அமைந்துவிட்டது.

நான் படத்தின் கிளைமாக்ஸ் சீன் டாக்டர் வேடத்துடன் முடிவடையும். இப்படத்திலும் டாக்டர் வேடத்திலேயே நடிக்கிறேன்.

இதுவொரு ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம். நான் படம் தயாரிக்க வந்தபிறகு படாதபாடுபடுகிறேன். ஹீரோவாக நடிப்பதற்கு அதிகம் கஷ்டப்படவில்லை. ஆனால் ஒரு தொழில்நுட்ப கலைஞர் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறார் என்பதை நேரில் பார்க்கிறேன்.

அவர்கள் நிற்கக்கூட இடமில்லாத இடத்தில் நின்று காட்சியை படமாக்கும்போது விபத்தில்கூட சிக்குகிறார்கள். அந்தளவுக்கு கடுமையான உழைக்கும் டெக்னீஷியன்களுக்கு சம்பளம் குறைவுதான்.

ஆனால் குடைக்கு கீழே அமர்ந்து வெயில்கூட படாமல் நடித்துவிட்டு செல்லும் ஹீரோயின்கள் பெரிய சம்பளம் வாங்குகிறார்கள். நான் இசை அமைப்பாளராக இருந்து தயாரிப்பாளராகி, ஹீரோவாகி இருக்கிறேன்.

எனது ஒவ்வொரு வளர்ச்சிக்கு பின்னால் என் மனைவிதான் உறுதுணையாக இருக்கிறார். இவ்வாறு விஜய் ஆண்டனி கூறினார்.

Exit mobile version