பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984–ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது.
அவர்களை வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ‘‘ஆபரேசன் ப்ளு ஸ்டார்’’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்தார். ஆபரேசன் ப்ளு ஸ்டார் நடந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பான நிகழ்ச்சிகள் பொற்கோவிலில் நடத்தப்பட்டு வந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்த வழிபாட்டுடன் அந்த சிறப்பு நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. இதையொட்டி சீக்கியர்களின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொற்கோவிலில் திரண்டிருந்தனர்.
வழிபாடு நடந்து கொண்டிருந்த நிலையில் சிரோமணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பாரம்பரிய போர்க் கருவிகள், வாள்களுடன் பொற்கோவிலுக்கு வந்தனர்.
வீடியோ
அவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியபடி பொற்கோவில் வளாகத்தில் உள்ள அகல் தகத் கட்டிடத்துக்குள் சென்றனர். அப்போது அவர்களை சீக்கிய அமைப்புகளில் வலுவான அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். காலிஸ்தான் கோஷம் எழுப்பப் கூடாது என்று கண்டித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாய்த் தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த வாய் சண்டை கைகலப்பாக மாறியது. இதையடுத்து சீக்கியர்களின் இரு பிரிவினரும் வாள் சண்டையில் இறங்கினார்கள். மன்னர்கள் காலத்தில் நடக்கும் வாள் சண்டை போல அவர்கள் ஒருவரை ஒருவர் விரட்டியபடி வாள் வீச்சில் ஈடுபட்டனர்.
அகல் தகத் கட்டிடத்தை சுற்றி சுற்றி வந்து அவர்கள் வாள் சண்டை போட்டனர். கம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களும் மோதலில் பயன்படுத்தப்பட்டன. சுமார் 30 நிமிடம் இந்த மோதல் நீடித்தது.
இந்த சண்டையில் 12 பேர் வாள் பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அமிர்தசரசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் காரணமாக அமிர்தசரஸ் பொற்கோவிலில் பதற்றம் ஏற்பட்டது. வன்முறை மீண்டும் வராமல் இருக்க சிரோமணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி மூத்த நிர்வாகிகள் பொற்கோவிலில் முகாமிட்டுள்ளனர்.
Clashes broke out between sword-wielding Sikhs at the Golden Temple in northern India on the 30th anniversary of a notorious army raid on the site. At least twelve people were wounded in the violence at the temple in the city of Amritsar
The clashes broke out after members of Shiromani Akali Dal group insisted they be allowed to speak on the microphone first
The Golden Temple at Amritsar is Sikhism’s holiest shrine
Members of radical Sikh organization, Dal Khalsa along with their supporters hold banners and placards as they take part in a march to mark the 30th anniversary of Operation Blue Star of 1984 in Amritsar
In this photograph taken on June 7, 1984, the Indian Army clashes with Sikh radicals, who called for a shutdown of the holy city of Amritsar to commemorate the storming of the Golden Temple by the military, one of the most controversial events in Indian history. The raid on June 6 1984, named Operation Blue Star, was aimed at flushing out Sikh separatists holed up inside and demanding an independent Sikh homeland called ‘Khalistan’ in northern Punjab. The army’s operation enraged Sikhs who accused the troops of desecrating the faith’s holiest shrine. The Indian government says about 400 people were killed but Sikh groups dispute the figure and claim thousands were killed, including innocent pilgrims
In this 1984 photo, Sikh leaders protest at the Golden Temple where over 1000 sikhs were thought to have been killed
At least two people were thought to have been injured during the violence
Today we were supposed to have a solemn remembrance for the martyrs of 1984 so what has happened is very sad,” said a spokesman for a radical Sikh outfit called the Shiromani Akali Dal (Amritsar) whose supporters were involved in the clashes.“The Temple has once again been dishonoured today,” the spokesman Prem Singh Chandumajra told reporters.
n this photograph taken on June 7, 1984, an Indian Sikh throws a tear gas canister back at Indian police after it was fired to break up violence around the Gurdwara Bangla Sahib, also known as the Golden Temple, as news of the death of Sikh leader Jarnail Singh Bhindranwale spread in Amritsar
Sikhs hold swords during the protest outside the Golden Temple
n this photo from June 6, 1984, soldiers move on to rooftops near the Golden Temple during an operation to quell the source of the recent Sikh violence
Members of Sikh radical groups clash with Shiromani Gurudwara Prabhandak Committee (SGPC) supporters
Simranjit Singh Mann, president of the Sikh Shiromani Akali Dal Amritsar organisation, speaks to the media outside the Golden Temple
Indian Dal Khalsa Sikh organisation activists hold placards
Indian Dal Khalsa Sikh organisation activists hold placards and brandish weapons during a protest
Sikh activists protest outside the Golden Temple
indian policewomen patrol outside the Golden Temple