ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாஸனின் அறை கதவை ரசிகர் ஒருவர் குடிபோதையில் தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற ஷிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. குடிபோதையில் ஸ்ருதி ஹாஸனின் ஹோட்டல் அறை கதவை நள்ளிரவில் தட்டிய ரசிகர் இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார்.
இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ருதியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கே வந்து தாக்கினார். இதையடுத்து ஸ்ருதி மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன்
13-06-2014
தன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்.
பிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை இடது கையில் ‘பிரபு’ என்று பச்சை குத்திக் கொண்டார். எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்.
அவர் நடித்த சில படங்களிலும், பொது இடங்களிலும் அந்த ‘பச்சை’யை பச்சையாகப் பார்க்க முடிந்தது. தடாலென ஒரு நாள் இருவருக்கும் காதல் முறிந்தது. இப்போது மீண்டும் படங்களில் படு பிசியாக இருக்கும் நயன்தாராவுக்கு, பிரபு என்ற அந்தப் பச்சை பெரும் இம்சையாக இருக்கிறதாம்.
இயக்குநர்கள் தயங்கித் தயங்கி, மேடம் அந்த பச்சையைக் கொஞ்சம் மறைச்சா நல்லது என்று சொல்கிறார்களாம்.
ஆரம்பத்தில் இந்தப் பச்சையை பக்கா மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்துவிட்டார். லேசர் சிகிச்சை மூலம் அந்தப் பச்சையை அகற்ற மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
சூர்யா படம் தொடங்கும்போது, நயன்தாரா கையிலிருந்து பிரபு பச்சை காணாமல் போயிருக்குமாம்!