நடிகர்கள்: விவேக், ஸ்வேதா, செல் முருகன், மயில்சாமி, வெங்கடராஜ், தென்னவன்
ஒளிப்பதிவு: மணவாளன்
இசை: வெங்கட் க்ருஷி
தயாரிப்பு: ஜே ஏ லாரன்ஸ் இயக்கம்: கண்ணன்
எப்போதோ ஹீரோவாகியிருக்க வேண்டிய விவேக், இத்தனை ஆண்டுகள் கழித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் நான்தான் பாலா. வாழ்த்தி வரவேற்போம்! கிட்டத்தட்ட கர்ணன் – துரியோதனன் கதைதான்.
அதற்கு, பூச்சியின் நெருங்கிய நண்பன் பாலாவின் உதவியை நாடுகிறது போலீஸ். போலீசுக்கு பாலா உதவினானா… அந்தப் பெண்ணை மணந்தானா என்பதெல்லாம் க்ளைமாக்ஸ். சுவாரஸ்யமான கதைதான். ஆனால் அதை இன்னும் சுவாரஸ்யமாகத் தராமல், கொஞ்சம் நாடகத்தனமாக்கியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
ஹீரோவாக டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் விவேக். சிரத்தையெடுத்து நடித்திருக்கிறார் பல காட்சிகளில். எப்போதும் சிரிப்பும் ஆர்ப்பாட்டமுமாகவே பார்த்த நமக்கு, இத்தனை சீரியஸான விவேக்கைப் பார்ப்பது புதுசாகத்தான் உள்ளது.
காதல் காட்சிகளிலும் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். அதற்காக காமெடியை விட்டுவிடாதீர்கள் விவேக்! ஹீரோயினாக வரும் ஸ்வேதா கொழுக் மொழுக்கென்று தெரிகிறார். விவேக்குக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.
பூச்சியாக வரும் வெங்கட்ராஜூ, கூலிக் கொலையாளி தென்னவன், லாவண்யா, சுஜாதா என எல்லோருமே தங்கள் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.
செல்முருகனுக்கு இதில் தனி காமெடியனாகப் புரமோஷன்… இனி அவர் தனியாகவேகூட காமெடி செய்யலாம். அந்த அளவு சரக்கு இருக்கிறது மனிதரிடம். மயில்சாமியும் கிச்சு கிச்சு மூட்டத் தவறவில்லை.
மணவாளனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. வெங்கட் க்ருஷியின் இசையில் அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது. இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் தெரியும் தொய்வை கவனித்திருக்கலாம்.
எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்த இயக்குநர், அவற்றை எப்படி கச்சிதமாக வைக்க வேண்டும் என்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். விவேக், நல்ல கதைக்காக ஒருமுறை பார்க்கலாம்!