ilakkiyainfo

ஆறே நாட்களில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்த ஸ்ருதிஹாசன். தமன்னா அதிர்ச்சி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் முதன்முதலாக ‘அகடு’ படத்தில் நடிக்கிறார் தமன்னா. இந்த படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமன்னாவின் ஒத்துழைப்பை பார்த்து தயாரிப்பாளர் ஒரு கோடியை தமன்னாவுக்கு சம்பளமாக கொடுக்க முன்வந்ததாக கூறுகிறார்கள்.

நடனக்காட்சிகளில் நடிக்கும்போது ஒருமுறை ரிகர்சல் பார்த்தாலே போதும், உடனே ஸ்டெப்ஸை கப்பென்று பிடித்துக்கொண்டு நடனம் ஆடிவிடுகிறார் தமன்னா. அதனால் தமன்னா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஒரு டேக் அல்லது இரண்டு டேக்குகளில் முடிந்துவிடுகிறதாம்.

மகேஷ்பாபுவும் தமன்னாவிற்கு இணைந்து ஆட்டம் போட்டுள்ளதால் படம் பிரமாதமாக வந்திருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஸ்ருதிஹாசனை நாடியுள்ளார் இயக்குனர் ஸ்ரீனு வைத்லா. அவரிடம் ஸ்ருதிஹாசன் இரண்டு கண்டிஷன் போட்டாராம். ஒன்று ஒரு பாட்டுக்கு ஆடினாலும், ஒரு படத்தின் சம்பளம் தரவேண்டும்.

இரண்டாவது மகேஷ்பாபு தனது அடுத்த படத்தில் என்னைத்தான் ஹீரோவாக ஒப்பந்தம் செய்ய பரிந்துரை செய்யவேண்டும். இந்த இரண்டு கண்டிஷனுக்கு ஓகே என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவதாக கூறியுள்ளார்.

மகேஷ்பாபுவிடம் இதுகுறித்து இயக்குனர் கேட்டபோது அவர் மறுப்பேதும் சொல்லாமல் அடுத்த படத்திற்கு ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டாராம்.

அதேபோல் தயாரிப்பாளரும் ஸ்ருதிஹாசனின் சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டதால் ஸ்ருதிஹாசனின் குத்துப்பாட்டு அகடு படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தமன்னா அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம். கஷ்டப்பட்டு ஆறு மாதம் நடித்து தான் வாங்கிய சம்பளத்தை ஆறே நாட்களில் ஆடி ஸ்ருதிஹாசன் வாங்கிவிட்டதுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா?

Humshakals: மூன்றே நாட்களில் ரூ.35 கோடி வசூல். தமன்னா மகிழ்ச்சி

71ef76ffb262e6b9718011c635960c15

யித் அலிகான், ரித்தீஷ் தேஷ்முக், தமன்னா, பிபாஷா பாசு நடித்து சாஜித்கான் இயக்கிய Humshakals திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.25 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

வெள்ளியன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் அன்றைய தினம் ரூ.12.50 கோடியும், மறுநாள் சனிக்கிழமை ரூ.12.59 கோடியும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ரூ.14.5 கோடி வசூலாகியுள்ளதாக தெரிகிறது. ஆக மொத்தம் வெளியான மூன்று நாட்களில் ரூ.35.59 கோடி வசூல் செய்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.80 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டில் பாதியை நெருங்கிவிட்டது.

இதுபோக சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு வசூல் இவற்றையெல்லாம் சேர்த்தால் இதுவொரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. Humshakals வெற்றியின் காரணமாக தமன்னா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்.

தமன்னாவின் முதல் இந்திப்படமான Himmatwala தோல்வி அடைந்ததால் வருத்தத்தில் இருந்த அவருக்கு இந்த படத்தின் வெற்றி மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அடுத்ததாக அக்சயகுமாருடன் அவர் நடித்து வரும் It’s Entertainment என்ற படமும் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதால் தமன்னா பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version