முல்லைத்தீவு வலைஞா்மடம் பகுதியில் கரும்புலி தினம் அன்று 16 வயது மாணவி மீது புனா்வாழ்வு பெற்று கிறீஸ்தவ பாடம் போதிக்கும் ஆசிரியா் நடாத்த இருந்த பாலியல் உறவு முயற்சி படையினரின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இரணைப்பாலையில் உள்ள பாடசாலை ஒன்றில் கிறீஸ்தவபாடமும் தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கில பாடமும் கற்பிக்கும் புனா்வாழ்வு பெற்ற ஆசிரியா் தனது பாடசாலையில் கற்கும் 16 வயது மாணவியுடன் நட்பாகப் பழகியுள்ளார்.
இவரது மனைவியும் அதே பாடசாலையில் கல்வி கற்பித்து வருவதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் கடந்த 5ம் திகதி கரும்புலி தினம் அன்று குறித்த பாடசாலைக்கு 3 கி.மீ தொலைவில் வலைஞா்மடம் பகுதியில் இவ் ஆசிரியரும் அந்த மாணவியும் ஆட்கள் நடமாட்டமற்ற ஒரு பாழடைந்த மண்டபத்திற்கு அருகில் காணப்பட்டுள்ளனா்.
அன்று கரும்புலி தினமாக இருந்த காரணத்தால் அப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தமது பாதுகாப்பு நடவடிக்கையைப் பலப்படுத்தி ரோந்து சென்று கொண்டிருந்தபோது இவா்கள் இருவரும் பதுங்கி நின்றதைப் பார்த்து அவா்களை விசாரித்துள்ளனா்.
அந் நேரம் ஆசிரியரின் கையில் பொரித்த கோழிப் புரியாணியும் கொக்கோ கோலா சோடாவும் மற்றும் பல உணவு வகைகளும் காணப்பட்டுள்ளன. ஆனால் அவா்கள் ஏன் அங்கு வந்தார்கள் என படையினா் கேட்ட கேள்விக்கு சரியான விளக்கம் கொடுக்காமல் தடுமாறியுள்ளனா்.
இது தொடா்பாக படையினா் பொலிசாரிடம் அறிவித்து இவா்களை ஒப்படைத்துள்ளனா். பொலிசாா் ஆசிரியா் கற்பித்த பாடசாலை அதிபருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் அறிவித்து இவா்களைப் பற்றி தகவல்களை அறிந்துள்ளனா்.
பொலசாரிடம் குறித்த ஆசிரியா் “தான் அந்த மாணவியைக் காதலிப்பதாகவும் அவளைத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இதற்குப் பொலிசாா் நீா் திருமணம் முடித்தவா் அல்லவா என தெரிவித்த போது தான் மனைவியை விவாகரத்துச் செய்யவுள்ளதாகவும் பொலிசாருக்குத் தெரிவித்துள்ளாா்.
இந்தச் சம்பவத்தால் குறித்த மாணவி அவமானம் தாங்காது தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.