ilakkiyainfo

கூட்டமைப்பு- புலிகள் இணைப்பு: கூட்டமைப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததெப்படி? (பாகம்-2)

ஒருமுகப்படுத்தல்:

கடைசிக்கு முந்தைய கட்டங்களில் வன்னியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ மறைமுகTNA LTTE-1மாக இதில் தலையீடு செய்தது. ரி.யு.எல்.எப், தமிழ் காங்கிரஸ், ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் என்பனவற்றின் சில தலைவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டு இணையும்படியும் ரி.யு.எல்.எப் சின்னமான சூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடும்படியும் வலியுறுத்தப்பட்டார்கள். பேச்சு வாhத்தையில் ஈடுபட்ட கட்சிகளை எல்.ரீ.ரீ.ஈ ஒருமுகப்படுத்தி பேச்சுக்களை வெற்றிகரமாக முடித்து வைத்தது.

ரி.யு.எல்.எப், அகில இலங்கை  தமிழ் காங்கிரஸ், ஈபிஆர்எல்எப், மற்றும் ரெலோ என்பனவற்றுக்கு இடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) என்கிற ஒரு கூட்டணியை உருவாக்கும் வேலை ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டது.

ரி.யு.எல்.எப் சின்னத்தின் கீழ் ரி.என்.ஏ போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் பல்வேறுபட்ட தேர்தல் மாவட்டங்களில் வேட்பாளர்களை நியாயப்படி பிரித்துக் கொடுக்கும் திட்டமும் அதன்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி ஒக்ரோபர் 22, 2001ல் ஒரு செய்தி அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டது. ரி.என்.ஏயும் பிறந்தது.

ஒக்ரோபர் 22,2001ல் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(ரி.என்.ஏ) உருவாக்கம் பற்றி கட்டியம் கூறியதுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி(ரி.யு.எல்.எப்),  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ஏ.சி.ரி.சி), தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈபிஆர்எல்எப்) என்பவற்றை பிரதிநிதித்துவப் படுத்தும் நான்கு பேரின் கையெழுத்தும் இடப்பட்டிருந்தது.

ஆர்.சம்பந்தன்( ரி.யு.எல்.எப்), என்.குமரகுருபரன் (ஏ.சி.ரி.சி), என். சிறிகாந்தா (ரெலோ), மற்றும் கே. பிரேமச்சந்திரன்( ஈபிஆர்எல்எப்) ஆகியோரே அந்த நால்வர். அந்த பத்திரிகை அறிக்கையில் கிட்டத்தட்ட ஒரு சங்கத்தின் அமைப்பு விதிகளுக்கு அமைவான நான்கு முக்கிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

முக்கியமான விடயங்கள்

முதலாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நான்கு கட்சிகளில் ஒவ்வொன்றுக்கும் எவ்வாறு வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பது என்பதைப் பற்றியது. அந்த ஒழுங்கமைப்பு பின்வருமாறு:

யாழ்ப்பாணம் – ரி.யு.எல்.எப் – 7, ஏ.சி.ரி.சி – 3, ரெலோ – 1, ஈபிஆர்எல்எப் – 1
வன்னி – ரி.யு.எல்.எப் – 3, ஏ.சி.ரி.சி – 1, ரெலோ – 4, ஈபிஆர்எல்எப் – 1
மட்டக்களப்பு – ரி.யு.எல்.எப் – 5, ஏ.சி.ரி.சி – 1, ரெலோ – 2, ஈபிஆர்எல்எப் – 1
திருகோணமலை – ரி.யு.எல்.எப் – 3, ஏ.சி.ரி.சி – 1, ரெலோ – 2, ஈபிஆர்எல்எப் – 1,
அம்பாறை – ரி.யு.எல்.எப் – 5, ஏ.சி.ரி.சி – 1, ரெலோ – 1, ஈபிஆர்எல்எப் – 0

இரண்டாவது விடயம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதைப் பற்றியது. அதற்கான முன்னுரிமை ஒழுங்கு ரி.யு.எல்.எப், ஏ.சி.ரி.சி, ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகும்.

வாக்குகளைப் பெற்றதின் அடிப்படையில் ரி.என்.ஏ ஒரு தேசிய பட்டியல் அங்கத்தவரை பெற்றால் அது முதலில் ரி.யு.எல்.எப் தெரிவு செய்யும் வேட்பாளருக்கு செல்லும், ஒரு இரண்டாவது உறுப்பினரை பெறும் தகுதியை பெற்றால் அது ஏ.சி.ரி.சி வேட்பாளருக்கு செல்லும்.

மூன்றாவது விடயம், இதில் உட்பட்டிருக்கும் கட்சிகள் பகிரங்கமாக ஒன்றையொன்று குறை கூறுவது மற்றும் விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களின்போது சக ரி.என்.ஏ உறுப்பினருக்கு எதிராக பிரச்சாரமோ அல்லது எதிர் பிரச்சாரமோ மேற்கொள்ளாமல் இருப்பதற்கான விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாலாவது விடயம், ரி.என்.ஏ க்குள் ஏற்படும் உள்ளக சர்ச்சைகளை பற்றியது. எப்போதாவது அத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டால், ரி.என்.ஏ யில் உள்ள கட்சிகள் தமக்குள் அதுபற்றி அமைதியான வழியில் கலந்துரையாடி பெருமபான்மை வாக்குகள் மூலம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுக்கு வரவேண்டும். அது சாத்தியப்படாத பட்சத்தில் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவியாக ஒரு வெளி அனுசரணையாளர் குழுவை நியமிக்க வேண்டும்.

அனுசரணையாளர்

அனுசரணையாளர் குழு கீழ்கண்ட ஆறு பேரைக் கொண்டுள்ளது:

1. வி.கைலாசபிள்ளை
2. கந்தையா நீலகண்டன்
3. வி.ஆர் வடிவேற்கரசன்
4. நிமலன் கார்த்திகேயன்
5. எஸ்.தியாகராஜா
6. கே.ஜெயபாலசிங்கம்

இந்த அசரணையாளர்கள் முக்கியமாக கொழும்பை தளமாகக் கொண்ட தமிழ் சமூகத்தின் மதிப்புக்குரிய அங்கத்தவர்களாவார்கள். பிரதானமாக அவர்கள் தொழில் நிபுணர்கள் அல்லது வெற்றிகரமான வியாபார நிறுவனங்களின் உடமையாளர்கள். அவர்கள் எந்த அரசியற் கட்சியையும் சாராதவர்கள், ஆனால் தியாகராஜா இதற்கு விதிவிலக்கு அவர் அப்போது ரி.யு.எல்.எப் இன் பொருளாளராக இருந்தார்.

இப்படியான சூழ்நிலையில்தான் கட்சி யாப்போ அல்லது கட்டமைப்போ இல்லாமல் ஒரு தளர்வான அமைப்பாக ரி.என்.ஏ பிறந்தது. புதிதாக உருவான கூட்டணி அதன்  ஞானஸ்தானத்தை டிசம்பர் 5, 2001ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பெற்றது.

ரி.என்.ஏ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன மோதலுக்கு பேச்சு வார்த்தை மூலமான தீர்வை வலியுறுத்தியதுடன் அப்படியான பேச்சு வார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவ படுத்துவார்கள் என்பதையும் வலியுறுத்தியது.

பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரி.என்.ஏ யினை, எல்.ரீ.ரீ.ஈ பகிரங்கமாக ஆதரிக்கவில்லை. இதற்கான முக்கிய காரணம் இந்த புதிய அபிவிருத்திகளையிட்டு எல்.ரீ.ரீ.ஈயும் கூட அசௌகரியமடைந்திருந்தது. தமிழர்களை விடுதலை பெறச் செய்வதற்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் என புலிகள் நம்பியதுடன் பாராளுமன்ற பாதையை அவர்கள் நிராகரித்திருந்தார்கள்.

வருடக்கணக்காக எல்.ரீ.ரீ.ஈ ஜனநாயகத்தின் பிரதிநிதிகளை விமர்சித்து வந்திருப்பதுடன் தெரிவு செய்யப்பட்ட பல தமிழ் பிரதிநிதிகளை துரோகிகள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்கள். கடந்த காலங்களில் பல பிரபலமான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்தும் உள்ளது.

இப்போது முதல்முறையாக எல்.ரீ.ரீ.ஈ ஒரு தமிழ் அரசியல் குழுவுக்கு தேர்தல் ஒன்றில் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறது. இது அதன் உயர்மட்ட நிலையை வியக்கத் தக்க வகையில் கீழே இறக்கியுள்ளது.

வன்னியில் உள்ள தலைமை அவரது கிழக்குப் பகுதி அரசியல் பொறுப்பாளரான கரிகாலனை முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்க அனுமதித்ததுக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. கடைசிக் கட்டத்துக்கு சற்று முன்பு மட்டும்தான் வன்னி தலைமை அதற்குள் இறங்கி வந்து தாங்கள் இந்த நகர்வை எதிர்க்கவில்லை என ரி.என்.ஏ கட்சிகளுக்கு உறுதியளித்தது.

பாராளுமன்ற ஜனநாயகத்தை அடையாளம் காண்பதில் எல்.ரீ.ரீ.ஈக்கு உள்ள தயக்கம் காரணமாகத்தான் இந்த தமிழர் கூட்டணியை உருவாக்கும் பணியை வெளியாட்களான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட முக்கிய குழுவினரிடம் விட்டிருந்தது.

Prabha_and_new_MPs_DM20040421மட்டக்களப்பு

ரி.என்.ஏ யினை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த இந்த மட்டக்களப்பை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்களில் பலர் பின்னர் அரசாங்க உளவுத்துறை உபகரணங்களுடன் கூட்டு சேர்ந்திருந்த ஒட்டுக்குழுவினர்களால் கொல்லப்பட்டார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மற்றும் சிலர், பிரதான பகுதி எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அவர்களில் இருந்து பிரிந்த பகுதியினராகிய கருணா – பிள்ளையான் கூட்டணி இடையே நடைபெற்ற சகோதரப் போரின்போது கொல்லப்பட்டார்கள்.

இதில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு சில ஊடகவியலாளர்கள் பின்னர் ரி.என்.ஏ சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற அங்கத்தவர்களானார்கள். ஆனால் ரி.என்.ஏ யினை உருவாக்கும் நடவடிக்கையில் பங்கு வகித்த அநேக ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்கள் பிந்தைய வருடங்களில் நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் கோரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

இதன்படி 2001ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் வெளிப்படையான எல்.ரீ.ரீ.ஈ யின் பங்களிப்பு இன்றி நடந்தேறியது. தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ரி.என்.ஏ வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்துவதற்கும் புலிகள் அனுமதி மறுத்துவிட்டார்கள்.

ஆனால் தனது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த தமிழர்கள் வாக்களிப்பதை எல்.ரீ.ரீ.ஈ தடுக்கவில்லை. அவர்கள் எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் ஆயுதப் படையினர் இந்த நிலைப்பாட்டையிட்டு மகிழ்ச்சி அடையவில்லை. அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வாக்காளர்கள் கடந்து வந்து வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

இதில் ரி.என்.ஏ வேட்பாளர்களுக்கு கிட்டிய மிகப்பெரிய ஆதாயம் என்னவென்றால் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் வன்முறை அச்சம் இன்றி பிரச்சாரம் செய்ய முடிந்ததுதான். ஆனால் இந்த முறை ஆபத்து வடக்கில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின்(ஈபிடிபி) வடிவத்தில் வந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் ஏகப் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக ஏக மாற்றீடாக வரும் தனது கனவிற்கு ரி.என்.ஏ மிகப் பெரிய அரசியல் அச்சுறுத்தலாகப் போகிறது என டக்ளஸ் தேவானந்தா அடையாளம் கண்டு கொண்டார். அதனால் ஈபிடிபி கோட்டைகளில் ரி.என்.ஏ வேட்பாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

முடிவுகள்

2001 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது,ரி.யு.எல்.எப் தனது சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரி.என்.ஏ மிகச் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒன்பது ஆசனங்களில் ரி.என்.ஏ ஆறு ஆசனங்களை வென்றிருந்தது. ஆனந்தசங்கரி, சேனாதிராஜா, ரவிராஜ் (ரி.யு.எல்.எப்),கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விநாயகமூர்த்தி (ஏ.சி.ரி.சி),மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் (ரெலோ) ஆகியோர் ரி.என்.ஏ சார்பில் வெற்றி பெற்றிருந்தார்கள். ஈபிடிபி இரண்டு ஆசங்களை பெற்றிருந்தது மற்றும் ஐதேக வை சேர்ந்த மகேஸ்வரனும் வெற்றி பெற்றிருந்தார்.

வன்னியில் உள்ள ஆறு ஆசனங்களில் ரி.என்.ஏ மூன்று ஆசனங்களை வென்றிருந்தது. ரெலோவை சேர்ந்த அடைக்கலநாதன்(செல்வம்) மற்றும் ராஜா குகனேஸ்வரனும், ஈபிஆர்எல்எப் இன் சிவசக்தி ஆனந்தனும் ரி.என்.ஏ சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்கள்.

புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தன் அதன் பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) சார்பில் போட்டியிட்டு தேர்வாகியிருந்தார்.

கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் ஆர். சம்பந்தன் அவர்களும் அம்பாறை(திகாமடுல்ல) மாவட்டத்தில் சந்திரநேரு அரிநாயகமும் ரி.யு.எல்.எப் சார்பில் வெற்றி பெற்றிருந்தார்கள். மட்டக்களப்பில் ரி.என்.ஏ மூன்று ஆசனங்களை வென்றிருந்தது. லண்டன் முருகன் என்கிற தங்கவடிவேல்(ரெலோ), வெள்ளிமலை என்கிற கிருஸ்ணபிள்ளை(ஏ.சி.ரி.சி) மற்றும் ஜோசப் பரராசசிங்கம் (ரி.யு.எல்.எப்) ஆகியோர் தெரிவாகியிருந்தார்கள்.

ரி.என்.ஏ பெற்ற வாக்குகளின் பலத்தில் அதற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தையும் பெறும் தகுதி கிடைத்திருந்தது. மூத்த அரசியல்வாதியும் மற்றும் ரி.யு.எல்.எப் தலைவருமான முருகேசு சிவசிதம்பரம் அதற்காக தெரிவு செய்யப்பட்டார்.

ரி.யு.எல்.எப் இன் முகவரியின் கீழ் ரி.என்.ஏக்கு 14 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களும் மற்றும் ஒரு நியமன அங்கத்தவரும் 2001ல் கிடைத்திருந்தது. இந்த 15 பேரில், ரி.யு.எல்.எப் இற்கு ஏழு பேரும்,ரெலோவிற்கு நான்கு பேரும் ஈபிஆர்எலஎப் இற்கு மூன்று பேரும் ஏ.சி.ரி.சி க்கு மூன்று பேரும் தெரிவாகியிருந்தார்கள்.

2001ல் ரி.என்.ஏ யில் ஒரு ஒற்றை பெரிய கட்சியாக ரி.யு.எல்.எப் இருந்தது வெளிப்படை மற்றும் தமிழர்களில் கணிசமான பகுதியினர் மத்தியில் அது பெரும் செல்வாக்கு பெற்றிருப்பதும் தெளிவாகியது.

(தொடரும்)

– டி.பி.எஸ்.ஜெயராஜ்

Exit mobile version