இந்தியாவின் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மிகவும் பிரபலம். இந்த பள்ளிக்கு சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், நடிகர் விஜய்யும் வந்து தொழுகை ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ‘கத்தி’ படத்தின் சில காட்சிகளே எடுப்பதற்காகவே அங்கு சென்ற இவர்கள் படத்தின் இடைவெளியின்போது இங்கு சென்று தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக அந்த தர்காவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த விஜய்க்கு அன்று தான் செல்லும் பாக்கியம் கிடைத்ததாகவும், தற்போது தான் மனநிறைவுடன் இருப்பதாக கூறியிருந்தார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, கடப்பாவில் உள்ள இந்த பள்ளி பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்தது மனதிற்கு அமைதியாகவும், ஒரு புத்துணர்ச்சியையும் தந்துள்ளது என்றார். இந்த பள்ளிக்கு ஏற்கெனவே ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.