வரலாற்றுப் பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது.
கடந்த ஜுன் மாதம் 28 ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலய மஹோற்சவத்தில் 14 ஆம் நாளாகிய இன்று (11) தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்து அடியவர்கள் இந்தத் தேர்த்திருவிழாவிற்காக வருகை தந்திருந்தனர்.
தேர் உற்சவத்தின் போது, காவடிகள், கற்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணை ஆகியவற்றினை மேற்கொண்டு அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.