ilakkiyainfo

பெண்ணின் தொடையில் கைவைத்து சில்மிஷம் செய்த சீன தலைவர். நாடு முழுவதும் பரவிய அதிர்ச்சி வீடியோ

chinaசீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவரிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த சம்பவத்தின் வீடியோ நாடு முழுவதும் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான Wang Qikang அவர்கள் சமீபத்தில் ரயில் பயணம் ஒன்று மேற்கொண்டார். அவர் உட்கார்ந்திருந்த இடத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் தொடையில் கைவைத்து லேசாக கிள்ளியுள்ளார்.

இந்த சம்பவத்தை எதிரே உள்ள ஒரு பயணி தற்செயலாக தனது மொபைலில் வீடியோ எடுத்து இணையதளங்களில் உடனே பதிவு செய்துவிட்டார்.

இந்த வீடியோ சீனா முழுவதும் காட்டுத்தீ போல ஒருசில நிமிடங்களில் பரவி கம்யூனிஸ்ட் தலைவர் Wang Qikang மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்த Wang Qikang, ரயில் பயணத்தின்போது தான் தூங்கிவிட்டதாகவும், தூக்கக்கலக்கத்தின் தனது கை தவறுதலாக அந்த பெண்ணின் தொடைமீது பட்டுவிட்டதாகவும் கூறி சமாளித்துள்ளார்.

ஆனால் வீடியோவில் அவர் நன்றாக விழித்திருப்பது தெரிந்துள்ளதால் அவருடைய சமாதானம் எடுபடவில்லை. The South Morning China Post என்ற பத்திரிகை Wang Qikang அவர்களை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் சீனா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version