தற்போதைய வடமாகாண ஆளுநராக இருக்கும் சர்ச்சைக்குரிய முன்னாள் இலங்கை ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்த பிறகு 2009ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த ஆளுநராக சந்திரஸ்ரீ நியமிக்கப்பட்டார்.
பிறகு வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகும் வடமாகாண ஆளுநராக அவரே தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்.
சந்திரஸ்ரீயின் பதவிக்காலம் வெள்ளியன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், அது மேலும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறையின் தலைமை அதிகாரி பேராசியர் அரியரத்ன அதுகல பிபிசிக்கு தெரிவித்தார்.
இலங்கை ராணுவத்தின் உயரதிகாரியான இவரை வடமாகாண சிவில் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் ஆளுநராக நியமித்த செயலை தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கையின் தமிழ்க் கட்சிகள் பலவும் விமர்சித்து வந்தன.
குறிப்பாக, வடமாகாணசபை தேர்தல்களும் நடந்து முதல்வர் பதவிக்கு சி வி விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், முதல்வருக்கும் ஆளுநருக்குமான உறவு தொடர்ந்து முறுகல் நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது.
வடமாகாண சிவில் நிர்வாகத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியான ஆளுநர் சந்திரஸ்ரீயின் தலையீட்டை எதிர்த்து விக்னேஸ்வரனும், வடமாகாண சபை உறுப்பினர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
வடமாகாண சபையை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கிறார் என்றும், வடமாகாணத்தின் சிவில் நிர்வாகத்தில் இலங்கை ராணுவத்தின் அதிகபட்ச தலையீட்டை அவர் ஊக்குவிக்கிறார் என்றும், வடமாகாணத்தில் சிங்களவர் குடியேற்றத்தை ஊக்குவித்து வடமாகாண சபையின் இனச் சமன்பாட்டை குலைக்க முயல்கிறார் என்றும் இவர் மீது விக்னேஸ்வரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.
எனவே, சந்திரஸ்ரீயை வடமாகாண ஆளுநர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் இவர்கள் தொடந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.
அந்த பின்னணியில் அவரையே மீண்டும் ஆளுநராக பதவிநீட்டிப்பு செய்திருக்கும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் செயல், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கை தமிழ்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களைத் தோற்றுவிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-BBC -செய்தி-
குறிப்பு
தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆளுனர் சந்திரஸ்ரீயின் பதவி நீடிப்பை இனிமேல் எதிர்க்கமாட்டாார்கள். காரணம்.. கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளும் ஆளுனர் சந்திரஸ்ரீயின் அனுசரனையுடன் பெற்றுக்கொண்டுவிட்டார்கள்.
கூட்டமைப்பினரின் நெருங்கிய ஆதரவாளர்கள், சொந்தகாரர்கள்…. வெளிநாடுகளிலிருந்து உதவிகோருவோர்.. போன்றோர்க்கும் அரசாங்கதிடமிருந்து கிடைக்கவேண்டிய சலுகைகள் (வேலைவாய்ப்புகள், முதலீடுகள், நிர்மாண திட்டங்களுக்கான அனுமதி… உத்தியோகபூர்வ உத்தரவாதங்கள், பதவி உயர்வு ) அனைத்துக்கும் ஆளுனர் அனுமதியை பெற்றுக்கொள்கின்றர்ர்கள்.
இப்படியிருக்கும்போது இனிமேல் ஆளுநரை ஏன் மாற்றவேண்டும. கூட்டமைபினரின் அனுமதியுடன் தான் ஆளுநரின் பதவி நீடி க்கப்பட்டிருக்கும் என நம்புவோமாக…
தொடர்புடைய செய்தி
அரசாங்கம் தரும் அற்ப சலுகைகளுக்காக நாம் விலை போகமாட்டோம்!! – கூட்டமைப்பு
நடைமுறையில் ஆளுநர் வகிக்கும் பதவியே அனுமதி கொடுப்பதுதான். ஆரம்பத்தில் கூட்டமைப்பினர்கள் ஆளுனரை மாற்றவேண்டும் என அறிக்கைவிட்டுக்கொண்டிருந்தார்கள். படிப்படியாக ஆளுனரிடமிருந்து தங்களுக்குரிய சலுகைகளை பெற்றவுடன் அந்த விடயத்தையே மறந்துவிட்டார்கள்.
ஊடகங்கள் தான் சும்மா இந்தவிடயத்தை ஊதிப்பெருக்கி கொண்டிருக்கிறர்ர்ள். .